Wednesday, December 7, 2016



விண்ணை தொட்டதா  ஜெயலலிதாவின் மருத்துவ செலவு?


ஜெயலலிதாவின் மருத்துவ செலவிற்காக, அப்போலோவிற்கு அரசாங்கம் கொடுத்த தொகைக்கு கணக்கு அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படுமா? ஒரு வேளை அது தொட்டுவிட முடியாத அளவிற்கு அதிகம் இருந்தால் வருங்காலத்தில் அதே வசதியை அரசாங்க ஹாஸ்பிடலில் ஏற்படுத்தி முக்கியமாக தலைவர்களுக்கு செய்து கொடுத்தால் மக்களின் வரிப்பணம் பாதிக்கும் மேல் மிச்சமாகுமே?




ஜெயலலிதாவிற்கு உடன் பிறவா சகோதரியாக  இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு மோடிக்கு உடன் பிறவா சகோதரியாக பதவி ஏற்றுக் கொண்ட போது எடுத்த புகைப்படம் இது



ஜெயலலிதா இறந்தது இரவு 11:30 ஆக இருக்கலாம் ஆனால் இறந்த தேதி டிசம்பர் 5 அல்ல


ஜெயலலிதாவின் அப்போலோ சிகிச்சை நாடகத்தில் கெளரவ வேடத்தில் நடிச்சவர்தான் லண்டன் டாக்டர்



வெளிநாட்டிற்கு கொண்டு சென்று ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்காததற்கு காரணம் அவர்கள் மோடி சொல்லும்படி சிகிச்சை அளிக்கமாட்டார்கள் என்பதால்தான்.


ராகுல் காந்தி வந்து பார்க்கும் முன் கலைஞரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பிய காவிரி ஹாஸ்பிடலுக்கு கண்டணங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : இங்கு நான் பதிந்த சின்ன சின்ன ஸ்டேடஸ்ஸுக்கள் என்னுடைய பேஸ்புக் தளத்தில் என்னால் வெளியிடப்பட்டவை அங்கே தொடராதவர் படித்து மகிழ அது இங்கே வெளியிடப்படுகிறது. https://www.facebook.com/avargal.unmaigal
07 Dec 2016

4 comments:

  1. கருணானிதியை டிஸ்சார்ஜ் செய்தது நேற்றல்லவா? ராகுல்காந்தி 6ம் தேதி சென்னைல தானே இருந்தார்.. (ஒருவேளை பார்க்க வருவாரா என்று எதிர்பார்த்து டிஸ்சார்ஜை நேற்றுவரை தள்ளிப்போட்டிருந்தாரா?)

    ஜெ.மறைவும் மதியம் 3 மணிக்கே நிகழ்ந்திருக்கவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். (அப்போலோ 3 1/2 மணிக்கு ஊழியரைச் செல்லச் சொன்னதும், சில பத்திரிக்கைகளில் 5 1/2 மணிக்கு செய்திவந்ததும் பார்த்திருப்பீர்கள். அப்புறம்தான், ஆபீஸ் சென்றிருப்பவர்கள் பாதிக்கப்படுவார்களே என்று ஏதோ புண்ணியவான் கண்டுபிடித்து இறப்புச் செய்தியைத் தாமதம் செய்தார்கள் என்று நினைக்கிறேன். நள்ளிரவு என்பதால், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் போய்விட்டது)

    ReplyDelete
    Replies
    1. இது பல அதிகார வர்க்கத்தால் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதிதான்

      Delete
  2. லைஃப் சப்போர்ட்டிங் பொருத்திய போதே யூகிக்க முடிந்தது.....ஊடக நண்பர்கள் இரவுதான் வெளியிடுவார்கள் என்றும் சொன்னானார்கள்.... என்றாலும் பல கேள்விகள் எழத்தான் செய்தது நாளிதழ்களில் மக்களிடமும்.....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இதில் சந்தேகட்திற்கு இடமில்லை நிச்சயம் இது பல அதிகார வர்க்கத்தால் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதிதான்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.