Friday, December 30, 2016



"மாண்புமிகு"க்களை கலாயத்து கழுவி கொட்டுவோம்

 சசிகலாவை  வைக்கோ சந்திக்க  ரெடிதான் ஆனால் சசிகலா இன்னும் விசிட்டிங்க கார்ட் அடிக்கவில்லை அதனால் சந்திப்பு தள்ளி போய் இருக்கிறது

புதிய இந்தியா பிறந்தது என்று மோடிக்கு வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த புதிய தமிழகம் பிறந்தது என்று வாய்ஸ் கொடுக்காதது எதனால்? மினியம்மா இதை நோட் பண்ணிக்கோங்க இவரு படம் வெளியாகும் போது வைச்சு செஞ்ச்சுருங்க


மினியம்மாவிற்கு தமிழ் திரைப்பட நடிகர்கள் சங்கம் வாழ்த்தி அறிக்கை விடாதது ஏன்?

மாண்பு மிகு சின்னம்மா என்று அழைக்கும் மானங்கெட்ட தமிழக முதல்வர் பன்னீர் செல்வம்


பொது மக்கள் சமுக தளங்களில் கருத்துக்கள் என்ற் பெயரில் புலம்புவதும் தலைவர்கள் நாட்டிற்கு தொண்டு  செய்கிறேன் என்ற பெயரில் நாட்டை சுரண்டுவதும்தான் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

என்னமோ ஜெயலலிதா ஆட்சி செய்த போது தமிழக மக்களுக்கு நல்ல குடி நீர், சாலை வசதி, போக்குவரத்து வசதி ,கல்வி வசதி ,சுகாதார வசதி, வேலை வாய்ப்பு மற்றும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நலம் பெற வசதிகள் செய்து கொடுத்து மக்கள் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருந்த மாதிரியும் இப்போது சின்னம்மா சசிகலா வந்த பின் அந்த வசதிகள் எல்லாம் கிடைக்காமல் போய்விடும் என்பது மாதிரியும் நினைத்து பலர் சமுக வலைத்தளங்களில் புலம்புகின்றனர். இதுக்குதாண்டா சொல்லுறது டிவி சீரியல் பார்த்து மனதை கெடுத்து கொள்ளாதீர்கள் என்று...ஜெயலலிதா ஆட்சியில் ஜெயலலிதா பேரை சொல்லி எப்படி கொள்ளை அடித்தார்களோ அதே மாதிரிதான் சசிகலா பேரை சொல்லி அதே நபர்கள் கொள்ளை அடிக்கப் போகிறார்கள்.அதனால் தமிழக மக்களாகிய நீங்கள் உங்கள்  குடும்பத்தை காப்பாற்ற மற்றவ்ர்களை ஏமாற்றி சம்பாதிக்க கற்று கொண்டு வாழ்க்கை நடத்துங்கள் அதைவிட்டு விட்டு சமுக தளங்களில் நீங்கள் குரைப்பதினால் உங்கள் வீட்டு தட்டில் சாப்பாடு தானாக வந்து விடாது.

சமுக வலைதளங்கள் மூலம் தமிழகத்தில் எந்த வித மாற்றமும் ஏற்படுத்த முடியாது என்பதை  உணர்த்திய நாள் இன்று,(12/29/2016) #சின்னம்மா சசிகலா

கூடிய விரைவில் இப்படி நடக்காமலா போகும்?

ஜெயலலிதாவிற்கு பின் நின்று தமிழகத்தை ஆண்டு வந்த சசிகலா ஜெயலலிதா மறைவிற்கு பின் இன்று முன் நின்று ஆட்சி செய்யப் போகிறார். ஜெயலலிதா ஆட்சியில் எப்படி தமிழ்நாடு வளமிக்க ஒளிமிக்க பாதையில் சென்றதோ அதே மாதிரிதான் இனிமேலும் செல்லும்


தமிழக அரசியலை  மக்கள் ஒரு டிவி  சீரியல் மாதிரி அடுத்து என்ன சஸ்பென்ஸ் நேரப் போகிறது என்று பார்க்கீறார்களே தவிர அதனால் மக்களுக்கு என்ன நன்மை தீமைகள் ஏற்படப் போகிறது என்று கொஞ்சம் கூட சிந்திப்பது இல்லை என்பது வருத்தத்தைதான் தருகிறது


//ஜெ., மரணத்தில், தனிப்பட்ட முறையில், தனக்கும் சந்தேகம் உள்ளதாக கூறிய நீதிபதி, உடலை தோண்டி எடுக்க, ஏன் உத்தரவிடக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நீதிபதிக்கு எத்தனை பெட்டிகள் வேண்டும் என்று விசாரிக்க சகிகலா உததரவு இட்டுள்ளார் என்ற செய்தி கூடிய சீக்கிரம் வெளியாகலாம்

டிஸ்கி : பேஸ்புக்கில் வெளிவந்த எனது நக்கல்கள் அங்கே படிக்காதவர்களுக்காக


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. இனி மினியம்மா எனவே சொல்லலாமா ?

    ReplyDelete
    Replies
    1. மினியம்மாதான் சிறந்த பெயர் அதனால் அப்படியே அழைக்கலாம்

      Delete
  2. சமூக வலைதளங்களில் என்ன எழுதியும் எந்த மாற்றமும் நிகழவில்லைன்னு நீங்களே சொல்விவிட்டு.இப்படி நையாண்டி பண்ணினா மட்டும் அவங்களுக்கு உரைக்கவா போகுது....நாம என்ன புலம்பினாலும் எதுவும் ஆகப் போவதில்லை....

    நல்ல நக்ககல்!!!!!...நையாண்டி!!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று எப்போதும் எழுதுவதில்லை. நான் எழுதுவதெல்லாம் படிக்க ரசிக்க சிரிக்க சிந்திக்க கடைசியாக தலையில் அடித்து கொள்ளவே மேலும் எனது பொழுது போக்கிற்க்காகவும்

      Delete
  3. நல்லதொரு பொழுது போக்கு - உங்களுக்கும் படிக்கும் எங்களுக்கும்.

    அரசியல் சாக்கடை இன்னும் அதிகம் நாற்றமெடுக்கிறது நாடெங்கும் - உத்திரப் பிரதேச நாடகம் பற்றி ஒன்றும் எழுதவில்லையா?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.