Sunday, December 4, 2016



avargal unmaigal
ஜெயலலிதா தமிழக மக்களுக்கு நல்லது ஏதாவது செய்து இருக்கிறாரா?

ஜெயலலிதா தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்து இருக்கிறார என்று யோசித்தால் கலைஞரின் குடும்பத்தில் இருந்து தமிழகத்தை காப்பாற்றியதுமட்டும்தான் தமிழகத்திற்கு அவர் செய்த நல்லது. அதுவே போதும் என்று தமிழக மக்கள் நினைப்பதால்தான் ஜெயலலிதா மீது மக்களுக்கு இந்தளவிற்கு பாசமோ #ஜெயலலிதா #jayalalithaa



உடல்நிலை நலமாக இல்லாதிருந்தும் மோடிக்கு கைகொடுத்து காப்பாற்றியது ஜெயலலிதா மட்டுமே..

கலைஞர் மற்றும் ஸ்டாலின் இப்போதைய மனநிலையில் கேட்க விரும்பும் பாடல் வெளியே அழுகிறேன் உள்ளே சிரிக்கிறேன் நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குகிறேன் என்ற பாடலாகத்தான் இருக்கும்


ஜெயலலிதாவிற்கு இந்த நேரத்தில் ஏதும் நேர்ந்துவிடக் கூடாது என என் மனம்விரும்புகிறது. அப்படி ஏதாவது நேர்ந்தால் மோடிக்குதான் அதிர்ஷடம் காரணம் கறுப்புபண பிரச்சனை இந்த செய்தியால் மூழ்கடித்துவிடும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. தனக்கென குடும்பம் கட்டுப்பாடு என இல்லாமல் தொண்டர்களின் கண்மூடித்தனமான அன்பை இவர் இன்னும் ஆக்க பூர்வமாக் செயல் படுத்தி இருக்கலாம் என நினைத்துள்ளேன்.அதே நேரம்..... ஏனைய அரசியல் வாதிகளின் நிஜமுகம், குடும்ப நிர்ப்பந்தங்கள், உள்ளொன்று வைத்து புறமொன்றாக மக்களை ஏமாற்றும் செயல் பாடுகளோடு ஒப்பிடும் போது தமிழ் நாட்டுக்கும் மக்களுக்கு ஓரளவேனும் நன்மை செய்ய திட்டங்களை இட்டு செயல் படுத்தியவர் ஜெயலலிதா அவர்கள். அதே போல் ஒரு விடயத்தில் முடிவெடுத்தால் இறுதி வரை அம்முடிவில் உறுதியாய் நின்று ஜெயித்தவர் இவர். முன் பின் முரண்பாடுகள் இவருள் அரிது.

    ReplyDelete
    Replies

    1. இவ்வளவு அதிகாரம் கொண்டவராக வலம் வந்த பெண் முதலமைச்சர் ஜெயலலிதா பெண்களுக்காக முக்கியமாக ஏதும் செய்யவில்லை என்று நினைக்கும் போது மிக வருத்ததைதான் தருகிறது இவரால் செய்ய முடியாததை வேறு யார் செய்து கொடுத்துவிடப் போகிறார்கள். பெண்கள் பாவப்பட்ட ஜென்மங்களே

      Delete
  2. ஜெஜெ பெண்களுக்கு என்று எந்தத் திட்டமும் அவர் கொண்டுவரவில்லைதான். அவரது ப்ளஸ்ககளே அவருக்கு எதிரியாகவும் இருந்த தருணங்கள் உண்டு. மோடிக்குக் கறுப்புப்பண விஷய்ம் மட்டுமல்ல...அவருக்குத் தமிழகத்தில் கால் பதிவதற்குக் கதவு திறந்துவிட்டிருப்பது போல்தான் தெரிகிறது...அது பம்பர் அல்லவா

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.