Saturday, December 3, 2016

புனித ஸ்தலங்கள் கள்ளப்பணத்தை மாற்ற உதவும் கள்ள ஸ்தலங்களாக மாறிவிட்டதா?

மோடி மட்டுமல்ல கடவுளும் சாமான்ய மனிதரை கஷ்டப்படுத்துகிறாரர் பாவம் கடவுள் பேரை சொல்லி மோடியும் மோடியின் பெயரை சொல்லி கடவுள்களும் சாமன்ய மக்களின் வாழ்வில் புகுந்து விளையாடுகின்றனர்

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று சொன்னாலும் அவர் வசதிப்பது என்னவோ கோயில்களில் மட்டும்தான். அப்படி கோவில்களில் வசிக்கும் கடவுள்களும் இந்த அரசியல்வாதிகளைப் போல வசூலில் மட்டும் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார். அதனால்தான் தன் வசூலில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று காணிக்கையை செலுத்த கிரெடிட்கார்ட்  வசதியை ஏற்படுத்தி அந்த கார்ட்டை தேய்க்க மிஷின் வசதியையும் உடனடியாக பல இடங்களில் செய்து கொடுத்துள்ளார்,


கள்ளப்பணத்தை நல்லப் பணமாக மாற்ற இந்த கோவில்கள் பெரும் பணக்காரர்களுக்கு உதவியது அதே நேரத்தில் ஏழைகளை கைவிட்டுவிட்டது,. பணம் மாற்ற வங்கிகளின் க்யூவில் நின்று கஷ்டப்படும் ஏழைகளுக்கு கோவிலில் வரும் சில்லறை நோட்டுக்களை கொடுத்து 500 1000 ரம் ரூபாய்க்களை வசூலிக்க அந்த கோவிலில் வசிக்கும் கடவுளுக்கும் மனமில்லை அந்த கோவிலில் இருக்கும் கடவுளுக்கு அந்த் பகுதி அரசியல் தலைவர்கள்தான் முக்கியமாகி போனார்கள்,

புனித ஸ்தலம் கள்ளப்பணத்தை மாற்ற உதவும் கள்ள ஸ்தலமாகிவிட்டது

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. இதுவும் ஒருவகையான கோவில் கொள்ளைதான்

    ReplyDelete
  2. True.. the tamil nadu big temples have not come forward to mitigate the sufferings of tamil nadu people atleast.by not exchanging required notes at this crucial hour...
    the hindu religious endowment minister should have convened a meeting af all the executive officers of big temples in tamil nadu... and allowed exchange of notes ...

    ReplyDelete
  3. கோயில்கள் எப்போதோ வியாபாரத்தலங்களாகிவிட்டனவே!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.