ஜெயலலிதாவை வழி நடத்தி சென்றவர் இனிமேல் தமிழகத்தை வழி நடத்தி செல்லமாட்டாரா என்ன?
என்னமோ சசிகலா முதல்வராக வந்தால் தமிழகம் மன்னார் குடி மாபியா கூட்டதில் சிக்கி
தமிழகமே சுரண்டப்படும் என பில்டப் கொடுக்கிறாங்க... ஆமா
நான் தெரியாமல்தான் கேட்கிறேன் இது வரை இருந்த முதல்வர்கள் தமிழகத்தை முன்னேற்றிய விதம்
உங்களுக்கு மறந்துதான் போய்விட்டதா என்ன? இல்லை சசிகலாவை தவிர
வேறுயாரவது வந்தால் தமிழகத்தை அப்படியே
உச்சாணியில் கொண்டு வந்து வைத்துவிட்டுதான் மறு வேலை பார்க்க
போறாங்களோ? அடே சமுக வலைத்தளங்களில் உலாவும் அறிவி ஜிவிகளே இப்படி
நீங்க பில்டப் பண்ணி பண்ணிதான் மோடியை தலையில் தூக்கி வைச்சீங்க இப்ப பாருங்க மோடி
இந்தியாவை உலகிலேயே நம்பர் ஒன்னாக இந்தியாவை மாற்றிவிட்டார். இனிமேல் அவர் என்ன செய்வது என்று அறியாமல் அப்படியே ஆன்மீகத்தில் முழ்கி அப்படியே
மகிரிஷியாகிவிடுவார்
பாமர மக்களே ஜெயலலிதா இறந்து போன பின்பு ஏழுநாள் துக்க தினம் கடை பிடிக்கப்படும்
என் அறிவித்த பின்னரும் துக்கம் கடைபிடிக்காமல் ஆட்சியை கைபிடிக்கதான் பலரும் நினைக்கிறார்கள்
அதில் சசிகலாவும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது.இப்போது
அதிமுக தலைவர்களின் விருப்பபடி சசிகலா பொது செயலாளராக வந்து தமிழக முதல்வராகவும் வரப்
போகிறார் என்கிறார்கள் வரட்டும் தாராளமாக வரட்டும் அப்படி அவர் வந்தால் மீதமுள்ள ஆண்டுகளுக்கு
மட்டும்தான் தமிழக முதல்வராக இருக்க முடியும் அதன் பின் மக்கள் மன்றத்திற்கு வந்துதான்
ஆக வேண்டும்.. இந்த மீதமுள்ள ஆண்டுகளில் சசிகலா நல்ல ஆட்சியை
கொடுத்தால்தானே வரும் காலங்களில் தலை தூக்க முடியும் .
அதனால் இந்த பேஸ்புக்கில் அறிவுஜிவிக்களாக போராளிகளாக கூவும் இவர்களின் சத்ததை
பொருட்படுத்தாமல் வரும் காலத்தை தைரியமாக எதிர் நோக்குங்கள் இந்த அறிவு ஜிவிக்களால்
மாற்றம் ஒன்றையும் ஏற்படுத்த முடியாது இவர்கள் குலைக்கிற நாய்கள்தான் ஆனால் பாமரமக்களாகிய
நீங்கள் தமிழகம் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் உங்களால் மட்டுமே பெரும்மாற்றத்தை
கொண்டு வர முடியும் மாற்றம் வேண்டுமா இல்லையா என்பது உங்கள் கையில்தான் உள்ளது
கொசுறு :சசிகலா காலில் விழுபவர்களையும் சசியின் உடல்மொழியையும்
பார்க்க அறுவறுப்பாக இருக்கிறது. இப்படி காலில் விழுபவர்களை மானங்கெட்ட
தே......பசங்க என திட்டத்தான் தோன்றுகிறது....இந்த பயல்கள் உங்களை தேடி வந்தால் காலில் உள்ளதை கலட்டி அடியுங்கள் முதுகெலும்பில்லாத
அற்பங்கள்
டிஸ்கி : எனது பதிவுகளை பேஸ்புக்கில் தொடர இங்கே க்ளிக்
https://www.facebook.com/avargal.unmaigal
செய்யுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி: இப்படி
எழுதுவதால் நான் சசிகலாவை ஆதரிக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் எந்த கட்சியையும் சாராதவன் . என் மனதில் பட்டதை
அப்படியே சொல்லிவிடுகிற ஒரு சாதாரண மனிதன் அவ்வளவுதாங்க
2.5.2012 விகடனில் ஹய் மதன் பகுதியில்...
உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்?
இதைத் தொடங்கிவைத்தது யார்?
ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது.
உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள்.
காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு.
ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல்
தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான்.
பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு
'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க,
குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில்
('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான்
உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!
என்று பஞ்ச் வைத்து எழுதிய இந்த கேள்வியை யார் படித்தாலும், ஜெயலலிதா காலில் விழும் அமைச்சர்கள் தான் நினைவுக்கு வருவார்கள்.
ஓபி பொது செயலாலாளராகி விடக் கூடாது என்பதே மற்ற அதிமுக மந்திரிகளின் எண்ணம்.அதனால் சசிகலாவே வந்து விட்டுப் போகட்டும் என்று நினைக்கிறார்கள். செல்வாக்குள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாதது சசிகலாவுக்கு ஆதாயமாகி விட்டது.எப்போதோ வெளியான பொருத்தமான செய்தியை கொசுறாகத் தந்தது சூப்பர்
ReplyDeleteஅமைச்சர்கள் நினைப்பது ஒன்றாக இருக்கலாம் ஆனால் அதிமுக தொண்டர்கள் நினைப்பது வேறு மாதிரியல்லவா இருக்கிறது என்று செய்திகள் சொல்லுகின்றன. மாற்றம் வரும் என நான் நினைக்கிறேன்
Deleteஆனாலும் இந்த பணமும் பதவியும் படுத்தும் பாடு... எவனுக்கும் சுயமரியாதை இல்லை... காலில் விழுந்து... கேவலம்... இதுதான் இவர்களின் இறுதி வெற்றியாக இருக்க வேண்டும் என்று ஆசைதான்.... ஆனா நம்ம பயக 200 ரூபாய்க்கு தன்மானத்தை வித்திருவானுங்களேன்னு நினைக்கும் போதுதான் கெதக்குன்னு இருக்கு...
ReplyDeleteகை நீட்டி காசு வாங்கும் பயல்களுக்கு தன்மானம் எங்கே இருக்கப் போகிறது
Deleteசசிகலா ஆர்கே நகரில்தானே போட்டியிடுவார். அங்கு உள்ள மக்கள் நினைத்தால்...ஆனால் நினைக்க மாட்டார்கள். அங்கிருப்பவர்கள் பெரும்பான்மையானோர் ஏழை மக்கள். பாமரமக்கள் அனுதாப அலை, கட்சி இவை எல்லாம் அங்கு அவரை ஒரு வேளை ஜெயிக்க வைக்கலாம்...மீதமுள்ள காலம்தானே என்று நீங்கள் சொல்லியிருப்பது உட்பட எல்லாமே சரிதான். அதே மீதமுள்ள காலம் என்பது அவர்களுக்கும் தெரியும். ஏற்கனவே தமிழகத்திற்கு நல்ல கதி இல்லை....நல்ல தலைவர் ஒருவரைச் சுட்டிக் காட்டுங்களேன் சகோ...
ReplyDeleteகீதா
கீதா