மனதை கனமாக்கிய வார்த்தைகள் இணையத்தில் படித்தது
##எழுதியது யார் என தெரியவில்லை என்று பேஸ்புக்கில் வந்த பதிவு இது
மனசை கனமாக்கிவிட்டது வார்த்தைகள்..
#பூ போன்ற மகள்
அப்பல்லோவில் படுத்துக் கிடக்கிறாளே என
புலம்புவதற்கு தாய் இல்லை....
#நோய் தீர்ந்து மகள்
புன்னகை சிந்தி வருவாளென
பார்த்திருக்கத் தந்தை இல்லை...
#தெய்வங்களைக் கேட்டே
என் சகோதரி நலம் மீட்பேன்
என்று பூசை செய்ய
சகோதரன் இல்லை..
#மாற்றுடை வேண்டுமோ என
உடுப்புகள் தேடி எடுத்துப் போக
உடன் பிறந்த தங்கை இல்லை..
#பெற்றவள் நலம் மீட்ட பின்பே
மற்ற வேலை என்று
மார் தட்டிச் சொல்வதற்கு மகன் இல்லை..
#மருந்து மாத்திரை தேடி
எடுத்து மணி தவறாமல்
கொடுத்திட
மகள் இல்லை..
#ஆனாலும் ஈரெட்டு நாட்களாய்
தாய் முகம் காணாமல்
எத்தனை இதயங்கள் இங்கே
கண்ணீரில் குளிக்கிறதே..
கட்டுக்கடங்கா கூட்டம்...
வாழ வைத்த தாய்
வாடிக் கிடக்கலாமோ என
செந்தனலில் இட்ட புழுவாய்
தவிக்கிறது...
அன்புடன்
மதுரைத்தமிழன்
தம +
ReplyDeleteமதுர சகோ இது வாட்சப்பில் பல தரப்பிலிருந்தும் வந்துவிட்டது. இன்று மட்டுமே எனக்குக் கிட்டத்தட்ட 10 வந்தது. ஆம் மனதைத் தொட்ட வரிகள்..
ReplyDeleteகீதா
இது போல் திமுக காரர்கள் சொல்லுவது போலவும் பல வந்தன...மெய்யாலுமே திமுக தொண்டர் எழுதியதா இல்லை வேறு யாரேனும் அப்படிச் சொல்லிக் கொண்டு எழுதியதோ தெரியவில்லை...அருமையான இரங்கல் வார்த்தைகளாக உலா வந்தன...
ReplyDeleteகீதா
மனதை உருக்கும் கவிதை
ReplyDeleteசிறப்பான இரங்கல்....
ReplyDeleteயார் யார் இல்லை என்பதை சொன்னவர் ,அருகில் இருப்பது யாரென்றும் சொல்லியிருக்கலாம் :)
ReplyDelete