Thursday, December 8, 2016



 ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு வரக் காரணம் என்ன? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

ஜெயலலிதா உடல்நிலை தேறிவிட்டது அவர் விரும்பும் தேதியில் வீட்டிற்கு செல்லாம் என்று அறிக்கைவிட்ட அப்போலோ அதன் பின் அவருக்கு மாரடைப்பு எற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சொல்லி இறுதியில் மரணச் செய்தியை அறிவித்துள்ளது. நல்ல உடல்நிலையில் இருந்தவருக்கு மாரடைப்பு ஏற்படக் காரணம் என்னவென்று விசாரித்த
போது ஜெயலலிதாவிடம் சிகிச்சைகான செலவு பில்லை காண்பித்தது அப்போலோ நிர்வாகம் அதை பார்த்த அதிர்ச்சியில்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாம்

அம்மா அம்மா என்று வாயார அழைத்த மக்கள் அம்மாவின் இறுதி சடங்கின் போது அம்மாவிற்க்காக ஒரு மொட்டை கூட யாரும் அடிக்கவில்லை. ஒரு வேளை ஜெயலலிதாவை உண்மையான அம்மாவாக நினைத்திருந்தால் தமிழகம் திருப்பதி ஆகி இருக்குமோ


ஜெயலலிதாவிற்கு இறுதி சடங்கு செய்தவர்கள் மொட்டை அடிக்கவில்லை ஆனால் அவர்கள் தமிழகத்தை மொட்டை அடிக்க கிளம்பிவிட்டார்கள்


மோடியின் மற்றொருமொறு "சர்ஜிக்கல் ஸ்டிரைக்தான்" ஜெயலலிதாவின் மரணமா?# சிந்தியுங்கள்

திமுக தலைமைக்கு எதிரி ஜெயலலிதாதான் ஆனால்  பொதுமக்களுக்கு எதிரி திமுகதான்


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் தூண்டுகிறது!

    ReplyDelete
    Replies
    1. சிரித்து கொண்டே சிந்திக்க வைக்கிறேன் என்னால் முடிந்தது அதுதான்

      Delete
  2. அதிர்ச்சி ரிப்போர்ட்... அதிர்ச்சிதான்...

    திமுகவுக்கு மக்கள் எதிரி என்பது உண்மையே

    ReplyDelete
    Replies
    1. திமுக தலைமை வாய்ப்பு கிடைத்தால் மக்களை மொட்டை அடிக்க முயற்சித்தால் மக்களும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் திமுகவை மொட்டை அடிக்கிறார்கள்

      Delete
  3. ஹஹஹஹ்ஹ் செம நக்கல் மதுரைத் தமிழன்/சகோ...தலைப்பைப் பார்த்து நாங்கள் ஏமாறவில்லை...ஹிஹி தெரியும் நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள் என்று!! தமிழகம் திருப்பதி ஆகியிருந்தால் என்பதை ரசித்தோம்..தமிழகத்தையே மொட்டையடிக்கக் கிளம்பியதையும் ரசித்தோம்..சிரித்துவிட்டோம்..

    ReplyDelete
    Replies
    1. தலைப்பபை வைத்துதான் மக்களை இங்கு இழுத்து வர முடியும் அதுதான் என் தளத்தின் பலம் அப்படி வருபவர்கள் படித்து சிந்திக்க நிச்சயம் நல்ல கருத்துக்கள் இங்கு நிச்சயம் இருக்கும்

      Delete
  4. ஆகா தமிழரே சந்தேகமே இல்லை திசம்பர் ஆறு எனும் பொழுதே மோடி வித்தை என்பது தெளிவு
    ஆழமான அரசியல் கட்டுரைகளை எழுதுங்கள்
    தூண்டில் தலைப்புகளை மட்டுமே எழுத வேண்டாம் காண்டேன்டும் சரியாக இருந்தால் நல்லது..

    இன்று விகடனில் ஒரு தொடர் வெளியில் வந்திருகிறது
    வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து எழுந்த வாக்கு வாதத்தில் ஜே மயங்கியதாக சொல்கிறது அது.

    பல உண்மைகள் இனி வெளிவரக் கூடும்

    பிறகு
    எங்கள் ஊர் முன்னால் கவுன்சிலர் ஒருவர் அறுபதுபேரை ஜே நினைவிடத்திற்கு அழைத்துச் சென்றார் அறுபது பெரும் மொட்டை ...
    அழைத்துச் சென்ற கவுன்சிலரைத் தவிர ... என்ன சிம்பாலிக்காக இருக்கிறது இது..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.