கெளதமியின் திடீர் சமுக அக்கறைக்கு காரணம் என்ன?
‘‘இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அவர்களுக்கு...
என்று நடிகை கெளதமி மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதம் இந்த பதிவின் கிழே உள்ளது,, இதை படித்த பல அரை குறை அறிவாளிகள் அவரின் தைரியத்தை பாராட்டுகிறார்கள்
அப்படி பாராட்டுவதோடு நின்றுவிடாமல் ரஜினிக்கு கூட இந்த தைரியமில்லை மேலும் அப்போலோவீற்கு
சென்று திரும்பிய தலைவர்களுக்கும் தைரியமில்லை ஆனால் இந்த பெண்மணியின் துணிச்சல் வியக்க
வைக்கிறது என்று சமுக தளங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இப்படி பாராட்டுபவர்களின்
பிண்ணையை பார்த்தால் அதில் காவி கறைதான் தெரிகிறது
நான் ஒன்று கேட்கிறேன்
.
காவிரி பிரச்சனையின் போது தமிழக முதல்வர் சட்ட ரீதியாக போராடிக்
கொண்டிருந்தார் அதுமட்டுமல்லாமல் பல தமிழக தலைவர்களும் சாமான்ய மக்களும் கேள்விகள்
மேல் கேள்வியாக மத்திய அரசை கேட்ட போது கெளதமி ஏன் அப்போது வாயை மூடிக் கொண்டிருந்தார்
அப்போது அவரின் சமுக அக்கறை எங்கே போயிற்று அப்போது இல்லாத அக்கறை இப்போது மட்டும்
எங்கிருந்து வருகிறது. நான் கேட்கும் இந்த கேள்வியை நீங்களே கேட்டு யோசித்து
பாருங்கள் மக்களே உங்களுக்கு நிச்சயம் விடை கிடைக்கும்
கெளதமி கடிதம் எழுதினாராம் யாருக்கு கூட்டு களவாணியான மோடிக்கு. கெளதமி என்ன படிக்காத
பெண்ணா என்ன? மத்தியில் ஆளும் மோடி அரசின் உதவியின்றி சசிகலா குடும்பத்தினரால்
இதையெல்லாம் செய்திருக்க முடியாது. என்று அவருக்கு தெரியவில்லையா என்ன/
பாஜகவின் ஆதரவளரான கௌதமியின் இந்த கடிதம் மூலம் பாஜகவுக்கு
ஜெயலலிதாவின் மரண விஷயத்தில் எவ்விதத் தொடர்புமில்லை என போக்குக் காட்டுவதற்கும் சசிகலா
& மன்னார் குடி மாபியா கும்பல் மற்றும் அதிமுகவை கட்டுக்குள் வைக்கவும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நாடகத்தின் ஒரு அங்கமே இந்த கடித
டிராமா? எந்தவித பின்புலமும்
இல்லாமல் எங்கிருந்து கெளதமிக்கு இப்படி துணிச்சல் வந்தது என்று யோசிங்க மக்களே
கெளதமியின் முடிவின் பிண்ணணியில் மறைந்திருக்கும் ரகசியம்
( 1 st நவம்பரில் நான் எழுதிய பதிவு, அப்போதே நான்
சொல்லி இருந்தேன் மோடி மற்றும் கவதமியின் திட்டம் பற்றி . அப்போது
என்னை திட்டியவர்கள் இப்போது அதை படிக்கவும் அதன் பிறகு தெரியும் கவுதமியின் கொண்டையை
நீண்ட நாள் மறைக்க முடியாது என்று
|
இப்படி செய்வதால் தமிழகத்தில் நடந்த சம்பவதிற்கும் மோடி அரசுக்கும்
எந்த வித சம்பந்தமில்லை என்று சொல்லவருவதன் மூலம் மோடி தன்னை பரிசுத்தவாதியாக காட்டிக்
கொள்ள முயற்சிப்பதற்கு கெளதமி உதவி இருக்கிறார் என்பது நன்றாக புரியும்
கெளதமிக்கு உண்மையிலே துணிச்சல் இருந்திருந்தால் இது பற்றி மோடிக்கு
கடிதம் எழுதாமல் இந்திய தலைமை நீதிபதிக்கும் மற்றும் ஜனாதிபதிக்கும் ஒரு கடிதம் எழுதி மேலும் கோர்ட்டிலும்
ஒரு வக்கில் மூலம் புகார் கூறி விசாரணைக்கு ஏற்பாடு செய்து இருக்கலாமே.
அப்படி எல்லாம் செய்யாமல் இப்படி டிராமா போடுவதால் என்ன பயன்?
ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் தலைவர்கள் டிராமா போடலாம்
ஆனால் மக்கள் மெளனமாக பார்த்து கொண்டிருந்து தலைவர்களின் தலையில் நன்றாக கொட்டிவிடுவார்கள்
அப்படிதான் இது வரை நடந்து வந்திருக்கிறது இனிமேலும் அப்படிதான் நடக்கும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
கெளதமி எழுதிய கடிதம் இங்கே :
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி கடந்த 5-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் உயிர் இழந்தார்.
அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல்
மரணம் அடைந்த நாள் வரை
பல மர்மங்கள் இருப்பதாக மக்கள் சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பான
கேள்விகளை யாரிடம் கேட்பது என மக்கள் புரியாத நிலையில் உள்ளனர். இந்த நேரத்தில், ஜெயலலிதா-வுக்கு
இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகை கெளதமி இது குறித்து பதில் அளிக்கும் படி பிரதமர்
மோடிக்கு எழுதியுள்ள கடித்ததின் சாராம்சம் இது...
‘‘இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அவர்களுக்கு...
அன்புடையீர்,
நான், இந்தக் கடிதத்தை
ஒரு சாதாரண இந்திய பிரஜையாக எழுதுகிறேன். நான், ஒரு குடும்பத் தலைவி; ஒரு தாய் மற்றும் பணியாற்றக் கூடிய
பெண். என் வாழ்க்கையில் ஏற்படும் எல்லாத் துன்பங்களும் அதற்கான
முக்கியத்துவம் கருதி நாட்டில் உள்ள சக மனிதர்களால் பகிரப்படுகிறது. இதில், பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை
வாழ வேண்டும் என்பதுதான் முதன்மையானது.
பல கோடி மக்களைப்போலவே நானும், தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின்
மரணச் செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்தேன். அவர்,
மிகச் சிறந்த தலைவர்; அத்துடன் அவர், பல பெண்களுக்கு உந்து சக்தியாக இருந்துள்ளார். என் வாழ்க்கையில்
முன்னேற்றம் ஏற்பட அவருடைய ஆளுமைத் திறமை எப்போதும் ஒரு தூண்டுதலாகவே இருந்தது.
தன்னுடைய பலத்தினால்... கஷ்டங்களை எதிர்த்துப்
போராடும் ஜெயலலிதாவின் திறன்... ஆண், பெண்
என எல்லோரும் தங்களுடைய கனவுகளை அடைய ஓர் உந்துதலாகவே இருந்துவந்தது.
அவருடைய மரணம் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்தியது மட்டும் அல்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல்... நடந்துவந்த சூழலும், பதில் தெரியாத சில கேள்விகளும் தொடர்ந்துகொண்டே
இருந்தன. அவருடைய உடலில் ஏற்பட்ட பிரச்னைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, நலம் பெற்றார் என்ற
தகவல் மற்றும் திடீர் மரணம்... இவை எதற்குமே பதில்கள் எதுவும்
சரியாகக் கிடைக்கவில்லை. அவரின் உடல்நிலை குறித்த தகவல்கள் மூடி
மறைத்த வண்ணமே காணப்பட்டது. மேலும், அவர்
தங்கி சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்குள் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை;
அவர், உடல் நலம்பெற வேண்டும் என்று மனதார நேரில்
சென்று வாழ்த்த நினைத்தவர்களுக்கும் அனுமதி இல்லை. மக்களின் பிரதிநிதியான
ஒரு தலைவரின் நிலை எதற்காக ரகசியம் காக்கப்பட வேண்டும்.. அவரை,
ஏன் தனிமைப்படுத்த வேண்டும்? அவரைப் பார்க்க அனுமதி
இல்லை என்பதை யார் முடிவு செய்வது... ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும்
அக்கறை பற்றிய முடிவுகளை யார் எடுத்தார்கள்... மக்கள் கேட்கும்
கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது? இதுபோன்ற பல கேள்விகள் தமிழக மக்களுக்கு உள்ளன. அவர்களுடைய
குரலாகவே நான் இப்போது உங்களிடம் கேட்கிறேன்.
அவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இறந்துவிட்டார். இதில், எந்தச் சந்தேகமும் இல்லை என சிலர்
கூறினாலும், இவை அனைத்தும் என்னுடைய தனிப்பட்ட கருத்து.
நான் இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முக்கியக் காரணம், இந்தியக் குடிமகளான எனக்குக் கவலை தரக்கூடிய விஷயங்களைப் பற்றி அறிய வேண்டிய
உரிமை எனக்குள்ளது. நாட்டினுடைய நிலைமையும், அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்ய வேண்டும். நமக்குப் பிடித்த தலைவருடைய நலனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியது அவசியம்.
இதுபோன்ற, மிக முக்கிய விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள
கேள்விகள் கேட்காமல் இருக்கக் கூடாது. முக்கியமாக, அதற்கான பதில்கள் தெரியாமல் இருக்கவே கூடாது. நாட்டில்
ஒரு தலைவருடைய நிலையைப் பற்றி அறியவே முடியாத பட்சத்தில் தனி மனிதருடைய உரிமையை எப்படிப்
பெற முடியும்? மக்கள் அனைவரும், சுதந்திர
இந்தியாவில் நடக்கும் பிரச்னைகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை
வர வேண்டும்.
இந்தக் கடிதத்தை நான் எழுதக் காரணம், நாட்டில் நடக்கும் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்
என்பது எல்லாக் குடிமக்களுக்கும் தெரிய வேண்டும் என்ற என்னுடைய ஆதங்கத்தைப் பற்றி அறிந்து...
பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான். நீங்கள்
பல இடங்களில் தனி மனிதனுக்கான உரிமைகளைப் பெற்றுத் தர எந்த இடத்திலும் தயக்கம் இல்லாமல்
செயல்பட்டிருக்கிறீர்கள். நாட்டு மக்களுடைய கோரிக்கையை கவனத்தில்கொண்டு
பதில் அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.’’
நம்பிக்கை மற்றும் மரியாதையுடன்,
ஜெய்ஹிந்த்!
கௌதமி தடிமல்லா
எல்லாம் கூட்டுக் களவானித்தனம்தான்
ReplyDeleteஎதற்கும் இருக்கட்டும்
தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம்
என்பதாகவும் இருக்கலாம்
உண்மைதான்
Deleteஎன்ன சொல்றதுன்னே தெரியல சார்..மொத்தத்தில் நாட்டிக்கே கேடு ..
ReplyDelete
Deleteகால சுழற்சியில் நிச்சயம் பல மாற்றம் வரும் என நினைக்கிறேன்
கௌதமி எப்போது மோடியைச் சந்தித்தார் என்று அறிய வந்ததோ அப்போதே தெரிந்தது அவரும் அரசியலில் இறங்க ஆயத்தமாகிறார் என்று. சுயநலம் இல்லாமல் எதுவுமே இப்போதைய அரசியலில் நடப்பதில்லை.
ReplyDeleteதமிழ்நாட்டில் நடப்பது எதுவுமே சரியாக இல்லை..தமிழ்நாட்டின் தலைவிதி மிகவும் மோசமாகி வருகிறது. கோரக்கைகளில் சிக்கும் அபாயம்..நாட்டின் நிலையும் அப்படித்தான்...மக்கள் நினைத்தால் மாற்ற முடியும். முந்தைய பதிவில் மூட்டைய கட்டுங்கனு சொன்னது தமாசுக்குச் சொன்னாலும் வாபஸ்!
கீதா
கோரக்கையில் சிக்கும் அபாயம் அல்ல இப்போது இருப்பது கோரக்கையில்தான் ஆனால் அது நல்ல கையில் சீக்கீரம் வந்து சேரும் என நம்பலாம்.
Deleteஹலோ நீங்கள் தமாசுக்கு சொன்னாலும் சீரியஸாக சொன்னாலும் எப்பவும் நான் தப்பாக எடுத்து கொள்ள மாட்டேன்