Sunday, December 11, 2016



தமிழக அரசியல் மட்டுமல்ல தலைவர்களும்  இங்கே அடித்து துவைத்து காய வைக்கப்படுகின்றனர்


பணம் பதவி வசதி செல்வாக்கிற்காக தமது கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டவர்கள் தமிழக கட்சிதலைவர்கள் ஆனால் அதே வசதி வாய்ப்பிற்க்காக காலில் விழுந்து தங்கள் மானத்தை காற்றில் பறக்கவிட்டவர்கள் அதிமுக அமைச்சர்கள். அதனால் இவர்களை கழுவி காறிதுப்பும் பொதுமக்களே இவர்களோடு தமிழக கட்சிதலைவர்களையும் காறித்துப்புங்களேன்



அதிமுக அமைச்சர்களே தலைவர்களே காலில் விழுந்து கும்பிடுவது பழைய ஸ்டைல் அது இனிமேல் பயன் அளிக்காது அதனால் காரியங்கள் சாதிக்க காலில் விழுவதோடு அந்த தலைவரின் காலை முத்தமிட வேண்டும் அதுதான் மாடர்ன் ஸ்டைல் இதை செஞ்சு பாருங்கள் உங்களுக்கு அமைச்சர் போஸ்ட் அல்லது நல்ல பதவி கிடைக்க வாய்ப்புகள் உண்டு #Newtrend


மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வைரம் போன்றவர்கள்-சொன்னது ரஜினிகாந்த்..
ஆனால் சொல்லாமல் மனதிற்குள் நினைத்தது . அனைத்து வைரங்களும் நன்மையை அளிப்பதில்லை மிக பயங்கரமான தீங்குகள் விளைவிப்பவை அதில் ஒன்றுதான் இந்த ஜெயலலிதா வைரம்


#ராம்குமார் சிறையில் வயர் கடித்து இறந்தான் என்றும் நம்பும் #அதிமுகவினருக்கு ( தமிழக மக்களுக்கு ) #ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் செத்தார் என்று நம்புவதில் ஏன் இன்னும் தயக்கம்?




சிறந்த சினிமா நடிகர்களுக்கு அவார்ட் கொடுப்பது போல சிறந்த அரசியல் நடிகர்களுக்கும் விஜய் டிவி அவார்ட் கொடுக்குமா?


ஜெயலலிதா இறப்பில் சாமானிய பொது மக்களுக்கு எழும்  கேள்விகள் கூட.. தமிழகத்தின் எந்த பெரிய எதிர் கட்சி தலைவர்களுக்கும் எழவில்லை. அவர்களுக்கும் இதில் கூட்டுப்பங்கு உண்டா


ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது அதற்காக விசாரணை வேண்டும் என்று மட்டும் கேட்டு போராட வேண்டாம் அதனால் வீணாகப் போவது உங்கள் வரிப்பணம் மட்டும்தான் நீதி கிடைக்கப் போவதில்லை சொத்து வழக்கை இத்தனை வருடங்கள் இழுத்து தீர்ப்பு சொல்லாதா அரசாங்கமா  ஜெயலலிதாவின் மரண மர்மத்தை விசாரித்து வெகு சீக்கிரம் தீர்ப்பு சொல்லிவிடுமா என்ன? அதனால் பொறுமையாக இருந்து உங்களுக்கு வாய்ப்பு வரும் போது உங்கள் கையில் உள்ள வாக்கை வைத்து எதிர்கால ஆட்சியை முடிவு செய்யுங்கள்


சசிகலாவின் வருகையை பிடிக்காததால் இயற்கை அனுப்பி வைச்ச எச்சரிக்கைதான் வர்தா புயலா?..

அன்புடன்

மதுரைத்தமிழன்



11 Dec 2016

1 comments:

  1. நான் அடிப்படையில் கேரளத்தவன் என்றாலும், பிறந்து வளர்ந்து படிப்பு என்று 25 வயது வரை தமிழ்நாட்டில் இருந்ததால், தமிழ்தான் எனது தாய் மொழி என்பேன், தமிழகமே எனது முதல் வீடு. தமிழகத்தில் எனது வாழ்வு இல்லாமல் போனதே என்ற வருத்தமும் வரும். அப்படி நான் பெரிதும் வாழ நினைத்த தமிழகத்தின் நிலைமை எனக்கு வேதனைஅளிக்கிறது தமிழன்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.