உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, April 27, 2016

ஜெயலலிதாவிற்கு பதில் அளிக்கும் ஸ்டாலின் சாமான்ய மக்களுக்கு பதில் அளிப்பாரா?

ஜெயலலிதாவிற்கு பதில் அளிக்கும் ஸ்டாலின் சாமான்ய மக்களுக்கு பதில் அளிப்பாரா?

ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சார உரையின் போது அவரது ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக மாறியது  என்று சொல்லி சென்று இருக்கிறார்.


உடனே அதற்கு நம்ம தலைவர் ஸ்டாலின் அவர்கள் நேற்று நெல்லையில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பல புள்ளிவிபரங்களை அள்ளிவிட்டு தமிழகத்தில் இத்தனை சதவிதம் ரேப். கொலை. கொள்ளை,  நடை பெற்றது என்று பிரச்சார கூட்டடத்தில் சொல்லி சென்று இருக்கிறார். அவர் சொன்ன புள்ளிவிபரக் கணக்கு எல்லாம் உண்மைதான். பிஸியாக இருக்கும் இந்த தேர்தல் நேர்த்தில் அவர் கண்முழித்து தகவல் திரட்டி புள்ளிவிபரக் கணக்கு சொன்னதற்கு நாம் அவரை பாராட்டியே  ஆகவேண்டும்


இப்படி விபரமாக ஜெயலலிதாவிற்கு பதில் சொன்ன அவரிடம்  ஒரு சின்ன கேள்வி. இப்படி நீங்கள் சொன்ன புள்ளிவிபரங்கள் எல்லா சரிதான் ஆனால் அப்படி ரேப் கொலை கொள்ளை  ஆட்கடத்தல்  ஆனவர்களில் எத்தனை சதவிகித்தினர் திமுகவினர் எத்தனை சதவிகித்தினர் அதிமுகவினர் மற்றும் எத்தனை சதவிகித்தினர் மற்ற கட்சிகாரார்கள் என்று சொல்லி சென்று இருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.அப்படி சொல்லி இருந்தால் திமுகவினரின் சதவிகிதம் மற்றவர்களின் சதவிகித்தைவிட சற்று அதிகமாகவே இருக்கும்அப்படியே நீங்கள் விபரம் வெளியிட்டால் உங்கள் புள்ளிவிபரக் கணக்கில் நிச்சயம்   உங்கள் அண்ணன் அழகிரியை தவிர ஒருத்தர் கூட திமுகவினராக இருக்கமாட்டர்கள் என்றுமட்டுதான் சொல்லுவீர்கள் என நினைக்கிறேன் .அப்படி  நான் நினைக்க காரணம் திமுகவினர் எல்லோரும் காந்தியவாதிகள் அல்லவா?

என்ன இந்த சாமன்யவானவன் கேட்டதும் சொல்லிலயதும் சரிதானா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. இவர் சொல்வதெல்லாாாாாாாாாாாாாாாாாாாாாம் உண்மைமைமைமைமைமைைமமைமைமைமைமை

  ReplyDelete
 2. எல்லோருக்கும், எல்லோரிடமும் கேட்கக் கேள்விகள் இருக்கின்றன. அவர்கள் வீதியில் உலாவுவது இன்னும் கொஞ்ச நாட்களுக்குத்தான். அப்புறம் மிதப்பு ஏறிவிடும் அனைவருக்கும்!

  ReplyDelete
 3. ஸ்டாலின் இப்போது புள்ளி விவரங்கள் பேச ஆரம்பித்துவிட்டார். மக்கள் தள்ளிப் போய் கொண்டிருக்கிறார்கள்!

  ReplyDelete
 4. நானும் பின்னூட்டமிடல்லாம் என்று நினைத்தேன். "தளிர்" எழுதியதைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். நல்ல வெயில் காலத்திலும் மனதைக் குளுமையாக வைத்திருப்பதால்தான் நகைச்சுவை வருகிறது.

  ReplyDelete
 5. இப்போதான் புள்ளி வைக்கிறாப்புடி
  சீக்கிரம் அலங்கோலம் போட்ருவாப்புடி...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog