உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, April 9, 2016

அழகிரியின் திருமங்கலம் பார்முலாவை வெல்லுமா ஸ்டாலினின் இணையதள பார்முலா?கூகுல் ப்ளஸ்ஸில் சுட்டது
அழகிரியின் திருமங்கலம் பார்முலாவை வெல்லுமா ஸ்டாலினின் இணையதள பார்முலா?ஒவ்வொரு தேர்தலிலும் புதிய புதிய பார்முலாக்களை அறிமுகப்படுத்தி மக்களை ஏமாற்றுவதில் திறமை வாயந்தவர்கள் திமுக கட்சியின் தலைவர்கள் இப்படி பல பார்முலாக்களை அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட திமுகவினருக்கு இந்த தேர்தல் களம் மிக கடுமையான சோதனைகளமாகவே இருந்து வருகிறது. திமுகவின் சாணக்கியருக்க்கே ஆரம்பத்திலே காலை வாரிவிட்ட தேர்தல் இது. இந்தியாவிற்க்கே திருமங்கல பார்முலாவை அறிமுகப்படுத்தி வெற்றி கண்ட அழகிரியும் ஆட்டத்தில் இல்லை.பாவம் நமக்கு நாமே என்று சொல்லி மக்களிடையே தன்னை அறிமுகப்படுத்துவதாக நினைத்து தன் கட்சியினரிடமே தன்னை அறிமுகப்படுத்திய ஸ்டாலின் தன் மருமகன் கூட சேர்ந்து போட்ட பார்முலாதான் இந்த இணையதள் பார்முலா.
எதையும் சொந்தமாக சிந்தித்து செயல்படாமல் மற்றவர்களின் திட்டங்களை காப்பி அடித்தே பழக்கப்பட்டவர் ஸ்டாலின். எப்படி இணையதளத்தில் பலர் சொந்தமாக ஏதும் எழுதாமல் மற்றவர்கள் எழுதியதை காப்பி பேஸ்ட் செய்வது போல ஸ்டாலினும் அவரது மருமகனும் பலவற்றை காப்பி அடித்து அதன்படி செயல்படுகின்றனர். அதன்படியே ஜெயலலிதா போலவே தன்னையும் நினைத்து அதன் படி யாரையும் மதிக்காமல் செயல்படுவது, அன்புமணி எந்த திட்டங்களை அறிவித்தாலும் அடுத்தநாள் அதே திட்டங்களை அறிவிப்பது, இந்த தேர்தலிலும் மோடி பாணியை கடைபிடித்து இணைய தள மக்களிடையே தன் செல்லாவாக்கை நிலைநாட்டி இளைஞர்களை கவர பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அப்படி செய்பவருக்கு அய்யோ பாவம் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது காரணம் மோடி பல குட்டிகரணம் இணையத்தில் போட்டாலும் அவரால் தமிழக மக்களின் மனத்தை மாற்றமுடியாமல் தமிழகத்தில் தோற்று போனார். அந்த தோற்றுப் போன பார்முலாவை வைத்து தான் வெற்றி பெறலாம் என கணா காண்கிறார் ஸ்டாலின் அவர்கள்.பாவம் என்றுதான் அவரை பார்த்து சொல்ல முடிகிறது. இந்த இணைய பார்முலாபடி (வலைப் பதிவர்களை வளைக்கும் திமுக: அதிமுகவைத் திட்ட நாள்தோறும் ரூ.300  )வலைப் பதிவர்களை வளைக்கிறது திமுக ... இங்கு திமுக வலைப்பதிவர்கள் என்று சொல்லுவது சமுக வலைத்தளமான பேஸ்புக்கைதான்..ப்ளாக்கர் ஸ்பாட் அல்ல.இந்த திட்டத்தின்படி சமுக இணையதளங்களை பயன்படுத்துபவர்கள் மனதில் ஆளுங்கட்சியை பற்றி தப்பான் எண்ணத்தை விதைக்க பணம் கொடுத்து எழுத ஏற்பாடு செய்யப்படுவருகிறதாம். ஸ்டாலினுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. அதுதான் இணையம் பற்றியும் இன்றைய இளைஞர்களின் மனநிலை பற்றியும்தான்சரி பொறுத்து இருந்து பார்ப்போம் ஸ்டாலினின் பார்முலா அழகிரியின் பார்முலாவை வெல்லுமா என்று அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவதுஉங்கள் அபிமானதிற்குரிய வலைப்பதிவர்

மதுரைத்தமிழன்

டிஸ்கி: இங்கு வரும் பதிவுகள் எந்த கட்சியினரிடம் இருந்தும் பணத்தை வாங்கி கொண்டு எழுதும் பதிவு அல்ல.....
6 comments :

 1. ஓட்டுக்குத்தான் பணம் கொடுக்கறது நடக்கும். வலைத்தளத்தில் திட்டவுமா பணம்? அரசியல் கூட்டங்களில் பேசுவதற்கு/திட்டுவதற்கு நடிகர்களை அழைத்துப் பணம் கொடுப்பது போல் - இப்படித்தானே வடிவேலும் திட்டி மாட்டிக்கிட்டார் - இப்போது சமூக வலைத்தள மக்களையும் இழுத்துப் போடுகின்றார்களா? மக்கள் மயங்காமல் இருந்தால் நல்லது

  எந்தக் கட்சியுமே தாங்கள் என்ன செய்யப் போகின்றோம், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன திட்டங்கள் வைத்திருக்கின்றோம் என்பது பற்றி எல்லாம் பேசித் தங்களை முன்னிறுத்திக் கொள்ளாமல் பிற கட்சிகளைத் திட்டுவதுதான் அரசியல் நாகரிகம் போலும்..நல்ல அரசியல் நாகரிகம்!!

  கீதா

  ReplyDelete
 2. நடுநிலையோடு ப்ளாக்கரில் எழுதினால் ஏதாவது வெஞ்சனத்துக்கு கிடைக்குமா ? சொல்லுங்கள் நண்பரே...
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 3. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை இது, இவங்களுக்கும் ஒரு பி பார்ட்டி ஏஜென்ட் வரணும் இணையதளத்தின் நண்பர்கள் மூலமாக, அப்படி வரும்போது நாமும் சம்பாதிக்கலாம் ஹி ஹி...

  ReplyDelete
 4. "இங்கு வரும் பதிவுகள் யாரிடமும் பணம் வாங்கிக்கொண்டு எழுதப்பட்டதல்ல" - எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்று சொல்வது போல் உள்ளது. சரி. சரி... கலாய்க்கமாட்டேன். தனியா என் பேங்க் அக்கவுண்ட் நம்பர் தருகிறேன். 50% அதில் போட்டுவிடவும்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog