உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, April 2, 2016

கோமாளி நடிகர்களும் ஏமாளி தமிழக ரசிகர்களும்கோமாளி நடிகர்களும் ஏமாளி தமிழக ரசிகர்களும் (நடிகனுக்கு நடிக்க மட்டுமே வரும் கொடுக்க மனசு வராது)

3500 உறுப்பினர்களை கொண்டது நடிகர் சங்கம். இது நடிகர்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்டது . இதற்கு  ஒரு சில மாதங்களுக்கு முன்னால் தேர்தல் நடத்தப்பட்டு புது நிர்வாகிககள் பதவி ஏற்றனர். அவர்கள் பதவி ஏற்றதும் முதலில் சொன்னது இந்த சங்கம் நடிகர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது அதனால் இந்த சங்கம் பொது விஷயங்களில் தலையிடாது குரலும் கொடுக்காது என்று சொன்னார்கள். சரி மானஸ்தர்கள் தங்களுக்கு வரும் பிரச்சனைகளை தங்களுக்குள்ளே சமாளித்து கொள்வார்கள் என்றும் பொது பிரச்சனைகளையோ அல்லது தங்களது பிரச்சனைகளையோ பொது மக்களிடம் கொண்டு செல்லமாட்டர்கள் என்ற எல்லோரையும் என்ன வைத்தார்கள்.


அப்படிபட்ட மானஸ்த களவானிகள் இப்போது பொதுமக்களிடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் அது இதுதான் நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் நடத்துகிறோம் என்று  அறிவித்து இருக்கிறார்கள் .நடிகர் சங்க கட்டிடம் 26 கோடியில், பிரம்மாண்ட அரங்குகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடம், நடனப் பயிற்சிக் கூடம் உள்ளிட்ட அம்சங்களுடன் ரூ.26 கோடியில் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதாக பிளான் போட்டு இருக்கிறார்கள்.

அடேய் பரதேசிகளா பொது மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க மாட்டோம் என்று சொன்ன நீங்கள் உங்கள் கட்டிட பிரச்சனைகளை தீர்க்க மட்டும் பொது மக்களிடம் வருவது ஏன்? அவர்கள்  பணத்தை ஏமாற்றி பறிக்க வருவது ஏன் ? 100, 200 ரூபாய் சம்பளம் வாங்கும் ரசிகனிடம் காசுபறிக்க பார்க்கும் நடிகர் சங்கம் 30 கோடி சம்பளம் வாங்கும் நடிகனிடம் பணம் கேட்க மறுப்பது ஏன்?


ஏண்டா கோடி கோடியாக சம்பாதிக்கும் நீங்கள் அதில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை நன் கொடையாக கொடுத்து உங்களுக்கு வேண்டிய சங்க கட்டிடத்தை கட்டிக் கொள்ள வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு ஊர்பணத்தை ஏமாற்றி பறிக்க முன் வருவது ஏன்

சரி நீங்கள் சம்பாத்தியம் செய்த பணத்தில் இருந்து உங்களுக்கு கொடுக்க மனமில்லை அப்படி உங்கள் மனநிலை இருக்கும் போது உங்கள் நடிப்பு திறமையை வைத்து  ஒரு நல்ல நாடகம் போட்டு அல்லது கலை நிகழ்ச்சிகளை  செய்து  அல்லது எல்லோரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தை தயாரித்து அதில் இருந்து வரும் லாபத்தை கொண்டு சங்க கட்டிடம் கட்டினாலாவது உங்களை பாராட்டலாம்.

ஆனால் அதைவிட்டுவிட்டு கிரிக்கெட் வீரர்களாக இல்லாத  கூத்தாடி நீங்கள், கிரிக்கெட் போட்டி நடத்தி கிரிக்கெட் விளையாட்டையும் கேவலப்படுத்தி மக்களையும் கோமாளியாக்கி அதன் மூலம் நீங்கள் சம்பாதிப்பது கேவலம் இல்லையா? ஏண்டா உங்களுக்கு  நடிக்க வரும் அளவிற்கு  கொடுக்க மனசு வராதா?

(இதில் அஜித் சற்று விதிவிலக்கா இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்து இருக்கிறது.நடிகர் அஜித் மக்களிடம் பணம் பறிக்காமல் சகநடிகர்களிடம் பணம் கேட்டு நடிகர் சங்க கடனை அடைத்து கட்டிடம் கட்டுவோம் என்றும் தினமும் தன் குடும்ப செலவுக்காக சம்பாதிக்கும் மக்களிடம் பணம் பறிப்பது தவறு என்றும் சொல்லி இருக்கிறார் ஆனால் அதை மற்றவர்கள் ஏற்காததால் நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கட் போட்டியை அவர் புறக்கனிக்கின்றார் என்றும் செய்தி கசிந்து இருக்கிறது இந்த் செய்தி எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அஜித்திற்கு ஒரு ராயல் சல்யூட்) ..

நலிவுற்ற நடிகர்களூக்கு உதவுவதாக சொல்லிக் கொள்ளும் இந்த சங்கம் பொது மக்களிடம் இருந்து பணம் பறிப்பதற்கு பதிலாக வசதி படைத்த நடிகர்கள் இந்த நலிவுற்ற நடிகர்களுக்கு தாங்கள் நடிக்கும் படங்களில் சிறு சிறு வாய்ப்பை  ஏற்படுத்தி கொடுக்கலமே அல்லது தங்கள் நடத்தும் தொழில்களில் சிறு சிறு வேலைகளில் அவர்களது படிப்பு திறனுக்கு தகுந்த வேலைகளை போட்டு தரலாமே இப்படி எல்லாம் செய்து சமுகத்தில் மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக திகழலாமே

நடிகர் சூர்யா அகரம் பவுண்டேசன் மூலம் பண்னுவதுமாதிரி  நடிகர்கள் சங்கதினர் நடிப்பில் நலிவுற்ற குடும்பத்தினருக்கு  உதவி செய்யலாமே......

இப்படி எல்லாம் செய்யாமல் தமிழக மக்களை ஏமாற்ற செய்வது சரியா?  மக்களே இந்த கோமாளிகள் ஆடும் கிரிக்கெட் போட்டியை புறக்கணியுங்கள் இவர்களை ஆதரிப்பதற்கு பதிலாக உங்களுக்கு தெரிந்த கஷ்டப்படும் குடும்பங்களுக்கு அந்த பணத்தை கொடுத்து உதவுங்கள்.

உங்களால் அப்படி செய்ய முடியும் என்றால் நீங்கள் மானம்முள்ள தமிழன்  இல்லையென்றால் உங்களுக்கும் இந்த கூத்தாடிகளுக்கும் வித்தியாசம் இல்லை


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

 1. ``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.

  ReplyDelete
 2. செம தமிழா! பாராட்டுகள். இப்பதான் இதைப்பத்தி நானும் மகனும் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் அனைத்துக் கருத்துகளும்....பேசிவிட்டு அவன் கிளினிக் கிளம்பிச் சென்றதும் ப்ளாக் பக்கம் வந்தால் உங்கள் பதிவு...கூத்தாடிகளைச் சொல்லுவதை விட மக்கள் இவற்றைப் புறக்கணிக்க வேண்டும். அஜிச் சொல்லியிருக்கலாம். அவர் பொதுவாகவே இது போன்ற கருத்துகள் உடையவர்தான்.. அவர் பெயரில் இருந்த ரசிகர் மன்றத்தையே அதனால்தான் அவர் கலைத்தார். அவர் வித்தியாசமானவர்தான். மட்டுமல்ல தைரியமாகச் செய்யக்கூடியவரும் கூட.

  கீதா

  ReplyDelete
 3. ஸூப்பர் நண்பரே சவுக்கடியான வார்த்தைகள் இந்தப் விளங்காப்பயலுக ரசிகனுக்கு இன்னும் புரியவில்லையே அவர்களைத் திட்டி என்ன செய்வது நானும் இதனைக்குறித்து ஏற்கனவே எழுதி இருந்தேன் என்னைப் பொருத்தவரை ரசிகர் மன்றம் வைத்திருப்பவர்களை 6 மாதம் பொடாவில் உள்ளே தள்ள வேண்டும் இதற்கு அனுமதி கொடுக்கும் நடிகனுக்கு ஒரு வாரம் சிறையில் இட்டால் போதும் எவனும் அனுமதி கொடுக்க மாட்டான் இருப்பினும் நடக்காதே காரணம் ஆட்சி ஆண்ட, ஆளும், எல்லாப் பயலும் சினிமாக்காரன்தானே இந்த நாடு நாசமாப் போகட்டும் என்னையும் சேர்ந்துதான்
  இதற்கு 10 ஓட்டுப்போட ஆசை ஆனால் முடியலை ஆகவே 1

  ReplyDelete
 4. கூத்தாடிகளை நம்பும் கோமாளிகள்.... கோமாளிகள் இருக்கும் வரை கூத்தாடிகளுக்கும் கொண்டாட்டம்.....

  ReplyDelete
 5. அருமையான பதிவு. சவுக்கடி போன்ற வார்த்தைகள். உறைக்க வேண்டுமே.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog