உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, April 10, 2016

கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள்


நெட்டில் சுட்ட படம்
கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள்


மக்கள் தேமுதிக என்ற பெயரில் சந்துகுமார் ஒரு கட்சி துவக்கி உள்ளாரே ?


தேமுதிக கட்சி வளர தன் மனைவியின் தாலியை விற்றவர் இப்போது இந்த மக்கள் தேமுதிக கட்சியை ஆரம்பிக்க மனைவியை விற்றாரா என்று யாரும் கேள்விகள் கேட்டுவிடக் கூடாது என்பதுதான் என் கவலை.

விஜயகாந்தின் தேமுதிக, சந்திரகுமார் ஆரம்பித்த மதேமுதிகவினால் உடைந்து போய்விட்டதா?

எம்.எல்,ஏக்கள் பிரிந்து போனபோதே உடையாத கட்சி இது இப்போது இந்த நாலைந்து பேர் பிரிவதால் உடையபோவதில்லை. தேமுதிக உடையல 50 பேர் தனிபோய் ஸ்டாலினிடம் கொடுத்த மூதலீட்டை வைத்து புது கட்சி அரம்பித்து இருக்கிறார்கள் அவ்வளவுதான்..

தேமுதிக உடைவதற்கு வைகோதான் காரணம் என்று ஸ்டாலின் சொல்லுகிறாரே?

ஆமாம் வைகோ இல்லாமல் இருந்திருந்தால் விஜயகாந்த் திமுகவில் சேர்ந்து இருப்பார் அல்லவா அப்படி நடக்காததால்தான் நாங்கள் தேமுதிகவை உடைத்தோம் என்பதை ஸ்டாலின் இப்படி சொல்லுகிறார்


ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு கொள்கையை அமுல் படுத்துவோம் என்று சொன்னது பற்றி?

மது நடுக்கத்தை அவர்களுக்கு கொடுத்து இருப்பது புரிகிறது மது மனிதர்களுக்கு மட்டுமல்ல கட்சிதலைவர்களையும் தள்ளாடத்தான் செய்கிறது


மு.க.ஸ்டாலினுக்கு எதிரி அவரும் அவரது எண்ணங்களும்தான் என்று விஜயகாந்த சொன்னது பற்றி?

விஜயகாந்த காரித் துப்பாமல் நாசுக்காக சொன்ன ஹைலைட்டான வரிகள் இதுதான். விஜயகாந்த நன்றாகவே தேறிவிட்டார்,


வண்டலூர் அருகே துணை நகரம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வந்திருப்பது பற்றி?

கொள்ளை அடிக்க இப்படி ஒரு புதிய திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள் போல


தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்துவதற்காக, 50 வேன்களை பா.ஜ., தயார் செய்துள்ளதுபற்றி?

கோடை விடுமுறைக்காக தமிழக பாஜக தலைவர்கள் இலவச சுற்றால செல்ல பாஜக தலைமை ஏற்பாடு செய்துள்ளது போல இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : மக்களே எதிர்கால தமிழகம் என்ன ஆகுமோ என்று நாம் யோசிப்பதைவிட இன்றைய தமிழகம் எப்படி நாசமாகி போயிருக்கிறது என்று பாருங்கள்

4 comments :

 1. கேள்வி பதில்கள் ஸூப்பர் நண்பரே
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 2. கேள்வி பதில்கள்

  ReplyDelete
 3. கேள்வி பதில்கள் அருமை நண்பரே

  ReplyDelete
 4. ஹஹஹஹஹ் விஜயகாந்த் காரித்துப்பாமல் நாசுக்காகச் சொன்னதுதான் உங்களின் ஹைலைட்!! அப்புறம் கடைசி இரண்டு பதில்கள்

  தமிழக அரசியலும் சரி, தமிழகமும் சரி நாறிக் கொண்டு இருக்கிறது உங்கள் ஊர் வரை எவ்வளவு சென்ட் அடித்தாலும் போகாத நாற்றம்.

  கீதா
  இந்த கமென்டை போட்டுப் போகவே இல்லை...இப்ப மீண்டும்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog