உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, April 26, 2016

இந்த வயதிலும் கலைஞரின் தைரியம் வியக்க வைக்கிறது..

இந்த வயதிலும் கலைஞரின் தைரியம் வியக்க வைக்கிறது..


இந்த வயதிலும் கலைஞரின் தைரியம் வியக்க வைக்கிறது.. அப்படி என்ன அவர் தைரியமாக செய்கிறார் என்று கேட்கிறீர்களா?


ஒருத்தரை தன் பக்கத்தில் வைத்து கொண்டே அவரை ஒழிக்க போகிறேன் என்று பொது மேடையிலே அவர் பேசுவது தைரியம் அல்லாமல் வேறு ஏதில் சேர்க்க முடியும். அப்படி அவர் என்ன தைரியமாக எப்ப எங்கே பேசினார் என்று கேட்கிறிர்களா?

தற்போது நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் தயாநிதி மாறனை பக்கத்தில் வைத்து கொண்டே  அவரை ஒழிப்பேன் என்று கூறியதுதான் எல்லோரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

யோவ் மதுரை அவர் அப்படி பேசியதற்கு ஆதாரம் இருக்கா என்று நீங்கள் கேட்கும் சத்தம் இங்கே அமெரிக்காவிலும் கேட்கிறது.


எதையும் ஆதாரம் இல்லாமல் எழுதுவது கிடையாது. அவர் பேசியதற்கு ஆதாரம் இதுதான்.. நான் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்பேன் என்று கலைஞர் பேசி இருக்கிறார். அப்படியென்றால் அவர் தயாநிதி மாறனைத்தானே ஒழிக்கப் போகிறார் என்று சொல்லி இருக்கிறார்.. இது கூட புரியாமல் தயாநிதி மாறன அவர் அருகில் சிரித்து கொண்டிருக்கிறார்.இப்ப சொல்லுங்க நான் சொன்னது சரிதானே?


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments :

 1. ஹா..ஹா..
  சரிதான்..

  ReplyDelete
 2. நீங்க சொன்னது சரிதான் நண்பரே....


  அருமையான காமெடி சொல்லிருக்கீங்க...

  ReplyDelete
 3. உங்கள் ஊர்ஜிதம்சரிதான்)))

  ReplyDelete
 4. அருமை நம்பரே

  ReplyDelete
 5. உங்கள் 'அறிவை'க்கண்டு நானும் வியக்கிறேன்.........

  ReplyDelete
 6. பிரிக்க முடியாதது என்ன? ஊழலும் கருணாநிதி குடும்பமும்! அப்புறம் எப்படி ஒழிப்பார்? நல்ல காமெடி!

  ReplyDelete
 7. ஹஹஹஹ்ஹ் செம எங்கேயோ போய்ட்டீங்கப்பா.....

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog