Monday, June 29, 2015



avargal unmaigal
ஹெல்மேட்

கணவன் தலைக்கு ஹெல்மேட் மாட்டிய பின்தான் மனைவி கையிலே பூரிக்கட்டையை தொட வேண்டும் என்று தமிழக அரசு முதலில் சட்டம் கொண்டு வர வேண்டும் # அப்பாவி கணவனின் ஆசை

டூவிலரில் போகும் போது ஹெல்மேட் போடணும் என்று சட்டம் போடும் தமிழக அரசு ஏன் #"சென்னை ஏர்போர்ட்டுக்கு" போகும் போது கண்டிப்பாக ஹெல்மேட் போடணும் என்று சட்டம் இயற்றவில்லை

கட்டாயம் ஹெல்மேட் என்று சட்டம் கொண்டு வந்ததை போலவே கட்டாயம் 'காண்டம்' என்று சட்டம் கொண்டு வந்தால் பல  உயிர்களை காப்பாற்றலாமே( எயிட்ஸில் இருந்தும் புதிய உயிர்கள் பிறப்பதிலிருந்தும்)



மோடி

செய்தி :பொது இடங்களில் துப்பினால் இனி அபராதம்...குப்பை போட்டால் தண்டனை...விரைவில் சட்டம்..
மோடி அரசின் ஆட்சியை பார்த்து பலர் காரித்துப்ப ஆரம்பித்ததினால் இந்த சட்டம் போடப்பட்டு இருக்குமோ என்னவோ?


யோகாவை பள்ளிக்கூடத்தில் பாடமாக வைக்கும் மோடி ஏன் நீதியை(மாரல்) பாடமாக வைக்கவில்லை?
இந்திய மக்கள் அனைவரையும் தன்னை போல உள்ளவர்கள் என்று கருதியதால் நீதி, நேர்மை, நியாயம், ஒழுக்கம் எல்லாம் படிச்சு என்ன பண்ணாப் போறாங்க விட்டிருப்பார்

க்ளீன் இந்தியா  என்ற திட்டத்தை ஆரம்பித்த மோடி அந்த திட்டத்தை செயல்படுத்தி தமது அமைச்சரவையை சுத்தம் செய்யலாமே

செய்தி :பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்த மகளுடன் செல்பி எடுத்து பகிருங்கள் தந்தைகளுக்கு மோடி அறிவுரை
ஆமாம் அப்படியே மனைவியின் முக்கியத்துவத்தை உணர்த்த மனைவியுடன் செல்பி எடுத்து பகிருங்கள் .மோடி தவிர நாட்டில் உள்ள நல்ல கணவர்களுக்கு


போன ஜென்மத்தில் மோடி திருப்பதியில் நாவிதர் வேலை பார்த்து இருக்கலாம் அதனால்தான் என்னவோ அவர் இந்திய மக்கள் அனைவருக்கும் மொட்டை போட முயற்சிக்கிறார்

தினமும் தவறாது யோகா பயிற்சி செய்யும் சிறை கைதிகளுக்கு, அவர்களின் தண்டனை காலம் குறைக்கப்படும் என்று, மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதனால்தான் என்னவோ வருங்காலத்தில் சிறைக்கு போகும் அனைத்து அரசியல் தலைவர்களும் இப்போதே யோகா கற்க ஆர்வமாக உள்ளார்களோ

40 லட்சம் பேரை தமிழகத்தில் உறுப்பினராக  சேர்த்த பாஜகவால் ஆர்கேநகர் தொகுதியில் மட்டும் நானூறு  பேரைக் கூட சேர்க்க முடியாததால்தான் அங்கு பாஜகவால் போட்டியிட முடியவில்லை - #ýதமிழிசை!!


கலைஞர் :
கலைஞர் புள்ளி வைச்சா ஜெயலலிதா அதில் நுழைஞ்சு கோலம் போட்டு முடித்து விடுவார் போல இருக்கு..நான் மெட்ரோ ரயில் திட்டத்தை பற்றி சொன்னேன் ஹீஹீ

மெட்ரோ திட்டம் ஆரம்பிச்சு வைச்சது நாங்கதான். ஸ்டாலின் தமிழகத்தில் பவர்கட் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதும் நாங்கள்தான் என தளபதி சொல்ல மறந்தது ஏனோ?


மெட்ரோ ரயில் திட்டத்தை ஆரம்பிச்சு வைத்தது கலைஞர் .ஆனால் உடன்பிறப்புக்கள் இணைய தளங்களில் அதை ஸ்டாலின்தான், தன் சொந்த காசை போட்டு ஆரம்பித்து வைத்தது போல கலைஞர் பெயரை இருட்டடிப்பு செய்து எழுதிவருகினரே இது நியாம்தானா உடன்பிறப்பே

avargal unmaigal


ஜெயலலிதா

செய்தி :ஜெ வழக்கில் கர்நாடக அரசு அப்பீல்..
யாருடா அங்க அந்த "பன்னீர் செல்வத்தை குளிக்க வைச்சு ரெடிபண்ணுங்கடா"...மூன்றாவது தடவையாக முதலமைச்சர் ஆவதற்கு

மெட்ரோ ரயில் பயணத்தை  ஒரு எஞ்சினியர் பலியான பின்தான் தொடங்கி வைக்க வேண்டும் அப்போதுதான் உங்களுக்கு நல்லது என்று எந்த ஜோசியக்காரனாவது அம்மாவுக்கு சொல்லி இருப்பான் போல அதனாலதான் அம்மா வெயிட் பண்ணி தொடங்கி வைத்து இருக்கிறார் போல(இறப்பு இயற்கையாக நடந்ததுதான் ஆனால் எல்லா விஷயத்திற்கும் ஜோசியம் அம்மா பாரப்பதால் அதை வைத்து கிண்டல் செய்து எழுதப்பட்டது)

செய்தி: பாலியல் பலாத்காரம் செய்தவரே அந்தப் பெண்ணை திருமணம் செய்ததால் விடுதலை-சென்னை உயர் நீதிமன்றம்
நீதிபதி நிறைய சரத்குமார் விஜயகாந்த், விஜயகுமார் நாட்டாமையாக நடித்த தமிழ் படங்களை பார்த்ததினால்தான் இப்படி தீர்ப்பு சொல்லி இருப்பாரோ

மதுக்கடைகளை தமிழக அரசு மூடிவிடக் கூடாது அப்படி மூடிவிட்டால் பல பேஸ்புக் பேராளிகளுக்கு என்ன ஸ்டேடஸ் போடுவது என்பது கூட தெரியாமல் போய்விடும். அவர்களின் நலனுக்காக மட்டும் அரசு டாஸ்மாக்கை மூடக் கூடாது # என்ன நான் சொல்லுறது சரிதானே

இந்தியாவில் மது பழக்கத்தில் தமிழ் நாடு மூன்றாவது இடம் - செய்தி.
இதில் கூட தமிழகம் முதலிடம் பெறவில்லை எங்கள் ஆட்சி இருந்திருந்தால் நாங்கள் இதில் முதலிடம் பெற்று இருப்போம் :கலைஞர்

சிந்திக்க

******* பள்ளிக் கூட ரிசல்ட் வந்ததும் மாநிலத்தில் முதலாகவந்தவர் இரண்டாவதாக வந்தவர் என்று பத்திரிக்கைகளில் போட்டோ போடும் போது அதற்காக உழைத்த ஆசிரியர்களின் படங்களை போட்டு கெளரவித்தால் அது அவர்களை மேலும் ஊக்க மூட்டுவதாகவே அமையும் அல்லவா? *********


உபயோகம் இல்லாத விஷயங்களை இந்திய பள்ளிக் கூடங்களில்  சொல்லித்தருவதில்லை அதனால்தான் நீதிக்கதைகள், நேர்மை, நியாயம், ஒழுக்கம் இவைகளைப் பற்றி சொல்லித்தருவதில்லை

ஊர் எல்லாம் செய்தி பரவ வேண்டுமா அப்படியானால் ஒரு பெண்ணிடம் அந்த செய்தியை ரகசியம் என்று சொல்லிச் செல்லுங்கள்

மேகியை சாப்பிட்டால் உடல் நிலைகெடுமாம் ஆனால் உப்புமாவை பார்த்தாலே நமக்கு மனநிலை கெடுதே அதை மட்டும் இந்த மோடி அரசாங்கம் தடை செய்யமாட்டேங்குதே. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

மனைவியின் அறிவுரைகளால் பலன் ஏதும் இருக்காதுதான் ஆனால் அந்த அறிவுறைகளை ஏற்காவிட்டால் நிச்சயம் பூரிக்கட்டையால் பலன் கண்டிப்பாக கிடைக்கும். # என்ன நான் சொல்லுறது


இந்தியாவிற்கு சுதந்திரம் காந்தி வாங்கி கொடுத்து இருக்கலாம் ஆனால் இந்திய மக்களுக்கு கருத்து சுதந்திரம் தந்தவர் மார்க்குதான் அதனாலதான் இத்தனை பேர் பேஸ்புக்கு மூலமா கருத்துகளை சுதந்திரமா சொல்ல முடியுது.


இந்த ஸ்டேடஸ் எல்லாம் எனது பேஸ்புக் தளத்தில் நான் எழுதி வெளியிட்டது. எனது பேஸ்புக் பக்கம் வாராமல் இருப்பவர்களுக்காக் இங்கு வெளியிடப்படுகிறது பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/avargal.unmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. பெரும்பாலும் முகநூல் பக்கம் வர நேரம் கிடைப்பதில்லை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சிலவற்றைப் படித்திருக்கிறேன்!

    ReplyDelete
  3. முழுசா படிக்கலை ! ஆனா சொல்லியே ஆகணும்னு தோணுது சகா:))))) அந்த பொதுஇடத்தில் துப்பும் சட்டம்:))))) சூப்பரு!!!!:)))) lol

    ReplyDelete
  4. அய்யயோ!!! செல்பி!!! செம! செம! இது அதைவிட சூப்பரு!!!

    ReplyDelete
  5. அந்த நீதிபதி நெசமாவே படிச்சுத்தான் பாஸ் பண்ணினாரா?? இல்லை சிலரைபோல காசை அடிச்சு பாஸ் பண்ணினாரா??##@###

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.