Monday, September 1, 2014



வலைத்தள உலகில் வந்த சுனாமி (பிள்ளையாரால் ஸ்டாலினுக்கு பிரச்சனை ஆனால் அது எனக்கு சாதனை)


வழக்கமாக எனக்கு பூரிக்கட்டையால்தான் ஹிட் கிடைக்கும் ஆனால் இந்த விடுமுறை நாட்களில் எனக்கு ஹிட்டுக்கள் வேற முறையில் மிக அதிகமாக கிடைத்தன


எதை ஆரம்பித்தாலும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தால் நல்லது நடக்கும் என்பார்கள் அது மற்றவர்களை பொருத்த வரையில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அது என்னைப் பொருத்த வரை மிக அதிர்ஷடமாகவே இருந்து வந்திருக்கிறது


கடந்த வாரம் செப்டம்பர் 28 ல் பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை என்ன  என்று கேட்டு பதிவிட்டு விட்டு விநாயக சதுர்த்தி வருவததால் வழக்கமாக இருக்கும் என் தள பேனரை அகற்றிவிட்டுவிட்டு விநாயக் சதுர்த்தி வாழ்த்தையே பேனராக தாயரித்து வெளியிட்டு இருந்தேன்



அதன் பின் நடந்த சம்பவம்தான் என்னை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. வழக்கமாக நான் பதிவு எழுதி வெளியிட்டால் அதற்கு சராசரியாக குறைந்த் பட்சம் 2000 ஹிட்டுகளில் இருந்து அதிக பட்சமாக 5000 வரை சில சமயங்களில் 6000 லிருந்து 7000 வரை ஹிட்டுக்கள் வரை கிடைக்கும். ஆனால் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு விநாயக படத்துடன் பேனரை வெளியிட்ட பின்பு வழக்கமாக கிடைக்கும் ஹிட்டுகளை விட மிக அதிகமாக கிடைக்க ஆரம்பித்தன. அதனை பார்த்த சந்தோஷத்தில் விஜய் டிவி பற்றி சூப்பர் சிங்கர் தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை  என்ற ஒரு பதிவும் வெளியிட்டேன். அதன் பின் அன்றைய தின இரவில் வந்த ஹிட்டுக்களை பார்த்த போது 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹிட்டுக்கள் கிடைத்தன 


அதை பார்த்த சந்தோஷத்தில் இவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்  என்று ஒரு பதிவை இட்டேன் அவ்வளவுதாங்க அதன் பின் செப்டமர் 30 ல் எனக்கு கிடைத்த 18 ஆயிரத்திற்கும் மேல் கிடைத்தன உடனே ஸ்டாலின் மானம் காக்க கலைஞர் எடுத்த முடிவு  என்ற பதிவை போட்டு அன்று இரவு வந்த ஹிட்டுக்களை பார்த்தால் அசந்தே போயிட்டேன் காரணம் அன்று எனக்கு கிடைத்த ஹிட்டுக்கள் 39 ஆயிரத்தது 822 ஹிட்டுக்கள் இன்றும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹிட்டுகள் கிடைத்தன.




நார்மலாக விடுமுறை தினத்தை ஒட்டி வெளியிடும் பதிவுகளுக்கு அதிக ஹிட்டுக்கள் கிடைப்பததில்லை ஆனால் அப்படி ஒரு எண்ணத்தையே மாற்றி அமைத்துவிட்டது இந்த விடுமுறை நாட்கள்.



எது எப்படியோ இந்த விடுமூறை தினத்தில் மகிழ்ச்சியை இந்த ஹிட்டுக்கள் மூலம் தந்த அனைவருக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள் நன்றிகள்


இந்த ஹிட்டுக்கள் தொடர்ந்தாலும் தொடாரா விட்டாலும் எனது மொக்கை பதிவுகள் உங்களை தொடரும்....


நன்றி சொல்லிட்டு அப்படியே போய்விடுவேன் என்று நினைத்தீர்களா அதுதான் இல்லை ஒரு ஜோக் சொல்லி உங்களை சிரிக்க வைத்துட்டு போறேன்///


நெட்டில் படித்த ஜோக் பழசுதான் ஆனால் இப்பப் படிச்சாலும் சிரிப்பு நிச்சயம் வரும்.


ஒரு அப்பா வீட்டுக்கு ஒரு ரோபோ வாங்கி வந்தார்.அந்த ரோபோ யார் பொய் சொன்னாலும் கண்டு பிடித்துவிடும் அத்தோடு பொய் சொல்பவருக்கு பளார் என்று ஒரு அறையும் கொடுக்கும்.



சாப்பிடும் சமயம் அவர் அதை சோதித்துப்பார்க்க விரும்பினார்
மகனிடம் கேட்டார்
"மகனே இன்று மாலை எங்கே போயிருந்தாய்?"
பையன்," அப்பா நண்பன் வீட்டுக்குப் படிக்கப் போயிருந்தேன்."
உடனே ரோபோ மகனின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டது



உடனே பையன் சொன்னான்,"சாரிப்பா நான் படம் பார்க்க சென்றிருந்தேன்."
"சரி என்ன படம் பார்த்தாய்.?"
"கார்ட்டூன் படம் சின்னப் பசங்களுக்கானது."



பளார் என்று இன்னொரு அறையும் கிடைத்தது அவரின் மகனுக்கு.
"சாரிப்பா! மலையாள பிட்டுப்படம்தான் (light porn movie )பார்த்தேன்."



அப்பா," அடப்பாவி ஒன்னோட வயசில SEX ன்னாலே என்னன்னு தெரியாது எனக்கு என்றார்."
இப்போது அப்பாவுக்கு பளார் என்று ஒரு அறை கிடைத்தது



அப்பா கன்னத்தைத் தடவிக்கொண்டிருக்கும் போது அம்மாகாரி சொன்னாள், " அவன் உங்களோட பிள்ளைதானே வேற எப்படி இருக்கும்?"



இப்போது அம்மாவுக்கும் பளார் என்று ஒரு அறை   விழுந்தது..


நீங்கள் விரும்பினால் இங்கும் தொடரலாம்
பேஸ்புக் முகவரி https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் முகவரி https://twitter.com/maduraitamilguy
அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்!!!///ஜோக்.......பிரம்மாதம்.என்னா குடும்பம்,என்னா குடும்பம்,ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
  2. பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு பிடித்த கதை என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது தான், பிள்ளையார் பிடித்து ஹிட் அடித்த கதையை கேள்விப்படுகிறேன்.

    இவ்வளவு ஹிட்கள் தங்களின் உழைப்புக்கு கிடைத்த பரிசுகள். உங்களின் மொக்கைப் பதிவுகளை படிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறதே. மன்னிக்கவும் தங்களின் நக்கல், நய்யாண்டி . பதிவுள்கள் என்று சொல்வதற்கு பதில் ஒரு ஃப்லோல "மொக்கை" என்று வந்துவிட்டது.

    சரி, அந்த ரோபோ, நீங்கள் என்ன பொய் சொன்னதற்காக உங்களை அடித்தது???

    ReplyDelete
  3. நல்ல குடும்பம்:))) மறுபடி உங்களை பார்த்தது சந்தோசம்:)) முன்னைவிட கொஞ்சம் இளைச்ச மாதிரி இருக்கீங்களே:))

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சார்! ஒருவாரமாய் எந்த பதிவும் படிக்க வில்லை! பிள்ளை பிறந்திருக்கிறான்! அதனால் வலைப்பக்கம் வரவில்லை! பிறகு படிக்கிறேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் சுரேஷ் சார்!!

      Delete
  5. வாழ்த்துகள் மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  6. செமை ஜோக் சகோ. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ! மேலும் சிறக்க. vacation ஆல வந்ததால லக் எதோ வேலை செய்கிறது போல. இவ்வளவு ஹிட் என்றால்.ஒரே நாளில் வெள்ளிதிசை தான்.

    ReplyDelete
  7. ஹிட்டுக்கள் தொடர வாழ்த்துக்கள் . (பூரிக்கட்டை ஹிட்டுகளும்தான். அப்பதானே எங்களுக்கு விதம் விதமான காமெடி பதிவுகள் கிடைக்கும்.)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.