உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, May 19, 2013

அமெரிக்கர்களுக்கு நமது பழக்க வழக்கத்தை புரிய வைப்பது இப்படிதான்

அமெரிக்கர்களுக்கு நமது பழக்க வழக்கத்தை புரிய வைப்பது இப்படிதான்.


நமது பழக்க வழக்கங்களையும் என்ன சொன்னாலும் இந்த மேலைநாட்டினருக்கு புரியாது. அவர்களுக்கு அதை ஃப்ராக்டிகலாக சொல்லி விளங்க வைத்தால்தான் கொஞ்சமாவது புரியும் .

அப்படிதாங்க ஒரு நாள் நம்ம வீட்டிற்கு வந்த அமெரிக்கருடன் பேசிக் கொண்டிருந்த போது இந்தியர்கள் டாய்லெட்டுக்கு போய்விட்டு தண்ணிர் விட்டு அலம்புவதை பற்றி பேச்சு நடந்தது. அப்போது நான் சொன்னேன் அந்த முறை மிகவும் சுகாதரமானது என்று சொல்லி விளக்கினேன். ஆனால் அவரோ அமெரிக்க முறைதான் நல்லது என்று சொல்லி விவாதித்தார். எங்களின் விவாதம் ஒரு முடிவிற்கு வரவில்லை அதன் பிறகு சாப்பிடும் நேரம் நெருங்கியதால் அவருக்கு நமது இந்திய உணவை பறிமாறினோம்.   சாப்பாடு நன்றாக இருக்கிறது ஆனால் மிகவும் காரமாக இருக்கிறது என்று சொன்னார். அதன் பின் சாப்பிட்ட சில மணி நேரத்தில் பாத்ரும் போய்விட்டு வந்த அவர்  இந்தியர்கள் பேப்பர் கொண்டு துடைத்தால்  பேப்பர் எரிந்து விடும் என்பதால் தண்ணிர் கொண்டு அலம்புவதன் ரகசியம் இப்பதான் எனக்கு புரியுது என்று சொன்னார்.

பாத்தீங்களா மக்காஸ் இவர்களுக்கு எப்படி எல்லாம் நம்ம பழக்க வழக்கத்தை புரிய வைக்க நாங்கள் இங்கு கஷ்டப்படுகிறோம் என்று.


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments :

 1. இவனுக கண்ணோட்டமே வேற மாதிரிதான் எப்போதும், அதான் நிலாவுக்கு ராக்கெட் விட்டது நாங்கதான்னு செட்டப் வேலை செஞ்சிட்டு இருக்கானுக போல ஹா ஹா ஹா ஹா...!

  ReplyDelete
 2. அடடே.... ரொம்பவே சிரமப்படறீங்க போங்க... சூப்பரு!

  ReplyDelete
 3. நல்லாத்தான் எரிய வச்சுருக்கீங்க. சாரி புரிய வச்சிருக்கீங்க!

  ReplyDelete
 4. காரம் கொடுத்து புரியவைத்துள்ளீர்கள்.

  ReplyDelete
 5. Cleaning by water is not only Indian culture, almost 80% Humans are doing the same, only remaining inhumans are using other way.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog