உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, February 9, 2013

நீங்கள் இதுவரை அறியாத கறிவேப்பிலையின் மருத்துவ பலன்கள்

நீங்கள் இதுவரை அறியாத கறிவேப்பிலையின் மருத்துவ பலன்கள்
   

இந்தியாவில் அதுவும் செளத் இந்தியாவில் உணவில் மிக முக்கியமாக சேர்க்கப்படுவது கறிவேப்பிலை. இதை உணவில்   வாசனையை அதிகரிக்க மட்டுமே பயன்படுகிறது என்று பலர் கருதிக் கொண்டு  அதில் உள்ள மருத்துவ பலன்களை அறியாமல் , சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள்.

கறிவேப்பிலையின் மருத்துவபலன்கள் :

-மலச்சிக்கல் பிரச்சனைக்கு கறிவேப்பிலை மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. சாப்பிட்ட பிறகு கோக் போன்றவைகளை க்டித்து விட்டு அடுத்த நாள் டாய்லெட்டில் மலம் கழிக்க ஒரு மணி நேரமாக  கஷ்டப்படுபவர்கள் அவர்கள் உணவிற்கு பின் மோரில் சிறிது பெருங்காயப் பொடி, கறிவேப்பிலையை போட்டு  அந்த இலையையும் சேர்த்து  குடித்து வந்தால் அது மலம் மிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலை நீக்கிவிடும்

- உணவு செரிமானத்திற்கும் மயக்கத்தில் இருந்து தெளிவதற்கும் இது மிகவும் பயன்படுகிறது. கறிவேப்பிலையை அரைத்து ஜூஸ் எடுத்து அதில் சிறிது எலுமிச்சை பழ ஜூஸை சில துளிவிட்டு சிறிது அளவு சுகர் சேர்த்து அருந்தி வரலாம்.

- சிறிது இலையை தினசரி மென்று தின்று வந்தால் அது உங்கள் உடல் எடையை  குறைக்க உதவுகிறது.

- கண்பார்வைக்கு கறிவேப்பிலை மிகவும் உதவுகிறது இதனை சாப்பிட்டு வருவதன் மூலம்  cataract யை தடுக்க முடியும்.

தலை முடி கருகருவென இருப்பதற்கும் நரை வராமல் தடுப்பதற்கும் இது மிகவும் பயன்படுகிறது.. இப்போது எல்லாக் கடைகளிலும் கறிவேப்பிலை பொடி கிடைக்கிறது அதை நாம் சாதத்திலும் நாம் சுடும் தோசை வகைகளிலும் சேர்த்து வரலாம். அதுமட்டுமல்லாமல் கறிவேப்பிலையை  நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஆயிலில் போட்டு உற வைத்தும் அல்லது காய்ச்சியும் தலையில் தேய்த்து பலன் காணலாம்

கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய பல ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

Scientific information: The scientific name of curry plant is Murraya Koenigii Spreng and it belongs to the Rutaceae family. The plant is a native to India and is usually found in tropical and subtropical regions. It is cultivated in various countries such as China, Australia, Nigeria and Ceylon. Height of the plant ranges from small to medium. The useful parts of this plant are the leaves, root and the bark.

கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் , பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இது தான் கறிவேப்பிலைக்கு  மணத்தை தருவதுமட்டுமல்லாமல்  பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.

இந்திய உணவில்  வாசனைக்கு சேர்க்கப்படும் அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.  நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்.  இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.

கறிவேப்பிலையை உபயோகபடுத்தி எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு, தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண்மை மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது

.
100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.


கேரளா பல்கலைகழகத்தில், கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி ஆராய்ச்சி செய்த  மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்று கண்டறிந்தனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.. பாதிக்கிறது என்றும் செல்களிலுள்ள புரோட்டின் அழிவதால் விளைவாக கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன என்றும் அறிந்தனர். தாளிக்க  செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.


இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும் அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதை நாம் தலைமுறையாக சொல்லி கடைபிடித்து வந்தாலும் பலர் இதன் மருத்துவ குணத்தை நம்பமாட்டார்கள் ஆனால் அதையே மேலை நாட்டார் ஆராய்சி செய்து அறிவித்து அதனை மெடிசனாக அறிமுகப்படுத்தினால் அதனை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகிப்பாரகள். அவர்களுக்கு நம் முன்னோர் சொல்வதை, நம்புவதைவிட மேலை நாட்டினர் சொன்னால் கண்மூடி அதை தேவ வாக்காக கடைபிடிப்பார்கள்.

அப்ப நீங்க எப்படி இப்பவே கறிவேப்பிலை வாங்க போறீங்களா அல்லது கறிவேப்பிலை மரத்தை உங்கள் வீட்டில் நடப் போறிங்களா இல்லை இதுலேயெல்லாம் எங்களுக்கு நம்பிக்கை இல்லை அமெரிக்காகாரன் மெடிசனாக அல்லது தலைக்குதேய்க்கும் கீரிமாக இதை பயன்படுத்தி தயாரித்த பின் தான் உபயோகிக்க போறீங்களா?

என்னவோ பண்ணுங்க... நான் படிச்சதை அறிந்ததை இங்கே சொல்லி இருக்கிறேன்,,பயனுள்ளதாக கருதிதானால் பயன் படுத்தி பாருங்கள். இதுசார்ந்த உங்கள் அனுபவங்களை முடிந்தால் சொல்லிவிட்டு போங்கள்

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


Health Benefits of Curry Leaves

Most people think that curry leaves just add flavour to the food and they throw the leaves away while eating. But curry leaves more importantly offer a number of health benefits without side effects which include

    Stops diarrhoea: Research studies conducted by Ashish Pagariya and  Maithili, V. concluded that the carbazole alkaloids present in curry leaves or Murraya Koenigii had anti-diarrheal properties. Experiments on lab rats showed that carbazole extracts from curry leaves had significantly controlled castor oil induced diarrhoea. A bunch of curry leaves can be grounded and the paste can be eaten or the juice of the leaves can be consumed. 
    Antioxidant properties: Research studies conducted by Mylarappa B. Ningappa et al. at Jawaharlal Nehru Center for Advanced Scientific Research, Molecular Parasitology and Protein Engineering Laboratory, Bengaluru, India, have indicated that curry leaves or Murraya Koenigii as a good source of antioxidants.  The presence of various vitamins like vitamin A, B, C and E help in reducing oxidative stress and free radical scavenging. Curry leaves can be added to your curries, vegetable stews and soup. They are also available in dried powder form.
    Gastrointestinal protection: Usage of curry leaves is recommended as a cure for gastrointestinal issues in Ayurveda. They are considered to possess mild laxative properties. Make juice of a bunch of curry leaves and add lime juice, to be consumed for indigestion or a paste made from the leaves can be added to buttermilk and taken every morning over empty stomach.
    Anti- diabetic properties: Perhaps one of the biggest health benefits of curry leaves is its use in diabetes control. Research conducted at the Department of Biochemistry and Molecular Biology in University of Madras, Chennai had showed that anti-hyperglycemic properties of curry leaves were beneficial in controlling blood glucose levels in diabetic rats.
    Lowers cholesterol levels: Curry leaves are also known to reduce bad LDL cholesterol level. Studies conducted at the Department of Biochemistry in University of Kerala, India have shown that curry leaves have the potential to reduce LDL cholesterol levels.
    Good for eyesight: Curry leaves contain high amounts of vitamin A and are good for eyesight. Vitamin A contains carotenoids which protect cornea, the eye surface. Deficiency of vitamin A may cause night blindness, cloud formations in front of the eye and loss of vision loss in some cases.
    Fights cancer: The chemical constituents found in curry leaves such as phenols are helpful in fighting cancers such as leukemia, prostate cancer and colorectal cancers. Research on curry leaves at the Department of Medical Chemistry in Mejio University, Japan showed evidence of cancer fighting properties in carbazole alkaloids extract from curry leaves.
    Radio-protective and chemo-protective: Studies on the extracts of curry leaves have shown positive results in reducing the effects of chemotherapy, radiotherapy, protection against chromosomal damage, protection of bone marrow and prevention of free radicals in the body.
    Protects against pathogen attack: Research on curry leaves has revealed that they are also effective against fighting bacterial and fungal infections. The leaf extracts from the plant have been comparable to popular anti-biotic drugs.
    Protects liver:  Liver plays a major role in the digestive system and it needs to be protected from attack of free radicals as well as viral and bacterial attacks. Research on curry leaves indicated that the tannins and carbazole alkaloids present in curry leaves exhibited good hepato-protective properties. They are also helpful in protecting liver from various diseases such as hepatitis and cirrhosis.
    Good for hair growth: Curry leaves are believed to help in strengthening hair roots. Dry curry leaves powder mixed in oil can be applied to your hair with quick massage. The paste from curry leaves could also be applied in case of gray hair. Doing these on a regular basis can improve hair growth
    Skin care: Curry leaves are also helpful in skin care. The juice or paste of the leaves can be applied on burns, cuts, bruises, skin irritations and insect bites for quick recovery.

18 comments :

 1. இப்படி நிறைய படிக்கிறோம் செயல்படுத்துவது தான் இல்லை என்ன செய்ய ?பயனுள்ள தகவல்.

  ReplyDelete
 2. என் டிராஃப்ட்ல இருந்த போஸ்டை எடுத்து நீங்க போட்டுட்டீங்களா?! போங்க சகோ! உங்க பேச்சு க்க்க்க்க்க்க்கா

  ReplyDelete
 3. SUPER NEWS.,IT'S VERY EASY TO FOLLOW FOR ALL PERSONS.

  ReplyDelete
 4. கறிவேப்பிலையில் இத்தனை மருத்துவ குணமா? தினம் சாப்பிட்டு விட வேண்டியது தான்.

  ஒரு சந்தேகம். "அந்த நாள் வந்திடாதோ " என்ற பதிவை எழுதியிருக்கிறீர்கள் போல் தெரிகிறது.
  ஆனால் அதை க்ளிக் செய்தால் கறிவேப்பிலைக்கு வந்துவிடுகிறது.
  ஒன்றும் புரியவில்லை.

  ReplyDelete
 5. கறிவேப்பிலையின் நற்குணங்கள் அடங்கிய இவ்வளவு பெரிய மருத்துவ கட்டுரையை அறிய பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி மதுரை தமிழன்.

  ReplyDelete
 6. உபயோகமான தகவல்.
  நிறைய மூலிகைகள் சாதாரணமாக
  நாம் பயன்படுத்தும் இலைகளிலேயே
  இருக்கு. இதை படித்த தூண்டுதலின்
  விளைவாகவாவது நான் என் அம்மா செய்யும்
  கறிவேப்பிலை பொடி செய்ய ஆசை.
  ம்ம்ம்... பார்க்கலாம்.

  ReplyDelete
 7. நல்ல அரிய தகவல்கள்

  ReplyDelete
 8. Really its very usefull matter
  ARUN EXPORTS
  8220081531

  ReplyDelete
 9. பாதுகாத்து வைக்க வேண்டிய பகிர்வு.மிகவும் பிரயோஜனமான தகவல்களுக்கு நன்றி.

  ReplyDelete
 10. கறிவேப்பிலையை வீட்டில் வளர்த்து உபயோகித்தால் இன்னும் நல்லது.

  ReplyDelete
 11. வீட்ல இருக்கிற கருவேப்பிலை மரத்தை மொட்டையடிக்க வேண்டிய தான் !

  ReplyDelete
 12. நல்ல பகிர்வு.

  இதன் முக்கியத்துவத்தை முன்னோர்கள் அறிந்திருந்ததால்தான் கறிவேப்பிலை சட்னி,சாதம், துவையல் என அடிக்கடி சமைத்தார்கள்.
  இப்பொழுது இச் சமையல்கள் குறைந்துவிட்டன.

  தேங்காய் எண்ணையுடன் காச்சி தலைக்கு வைப்பார் எங்கள் அக்கா.

  ReplyDelete
 13. நல்ல தகவல்.
  நன்றி “உண்மைகள்“

  ReplyDelete
 14. அருமையான தகவல்கள் ,மிக்க நன்றி ,
  வாரம் ஒரு முறை இது போன்ற மருத்துவ
  பயனுள்ள தகவல்களையும் பகிர வேண்டும்
  என்று கேட்டுக் கொள்கிறோம் .........

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog