உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, February 17, 2013

பெண்கள் போகப் பொருளாக பார்க்கபடுவதில்லை இந்த கூட்டங்களில் அது ஏன்? அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை







பெண்கள் போகப் பொருளாக பார்க்கபடுவதில்லை இந்த கூட்டங்களில் அது ஏன்? நம்மை சீரழிப்பது மேலைநாட்டு கலாச்சாரமா?? அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை


இந்த வாரத்தில் நான் இணையத்தில் படித்த கட்டுரை ஒன்று என் மனதை கவர்ந்தது அந்த கட்டுரை ஆசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம் இரண்டு முரண்பட்ட கலாச்சரத்தின் சாராம்சத்தை நன்றாக. வி.ளக்கி மிக அருமையான சிந்தனையை விதைத்துள்ளார் என்பதாகவே என் மனதிற்கு பட்டது. நமது இந்திய திருநாட்டின் பாரம்பரியக் கண்ணோட்டத்தில் ஒரு ஆன்மிக நிகழ்வில் பங்கு பெறும் ஒருவன் பிற பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் பார்க்கிறான்... அதுவே வர்த்தக மயமாக்கல், மேற்கத்திய நடைமுறைகளில் உள்புகும்போது போகத்தின் வழியில் காட்சிப் படுத்துகிறான்... என்பதை மிக தெளிவாக கூறியுள்ளார்.

இந்த கட்டுரை ஆசிரியர்  கோடிகளில் குழுமும் கும்பமேளாக் கூட்டத்தை உதாரணமாக கூறி இருக்கிறார். இது கும்பமேளாக் கூட்டத்திற்கும் மட்டுமல்ல ,மூஸ்லீம்கள் புனிதமாக கருத்து மெக்காவில் கோடிகளில் குழுமும் கூட்டத்திற்கும் சரி இது மிகவும் பொருந்தும். மெக்காவிலும் பல தேசத்தை சார்ந்த பெண்களும் குடும்பத்துடனும் தனியாகவும் வந்தால் அந்த பெண்களை எல்லோரும் சகோதரியாகவும், தாயாகவும் மட்டுமே பார்க்கிறார்களே ஒழிய காமக் கண்ணோட்டத்துடன் பார்ப்பத்தில்லை.


ஆனால் மேலை நாட்டுகலாச்சார வழியாக நாம் பார்க்கும் போதுமட்டும்தான் அவர்கள் போகப் பொருட்களாகவே பார்க்க படுகிறோம் என்பது மனதிற்கு தெள்ளத் தெளிவாக புரிகிறது. இது ஆணாகிலும் பெண்ணாகிலும் உணர்வுகளின் அடிப்படையில் இவ்வாறே அமைந்து விடுகிறது!


நான் படித்த அந்த கட்டுரையை  உங்களுடன் பகிர கிழே தந்துள்ளேன். அதில் என்னை கவர்ந்த வரிகளை சிகப்பு கலரில் காட்டியுள்ளேன்..

நீங்களும் படித்து உங்கள் மனதில் பட்டதை சொல்லிப் போகலாம் நன்றி

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்




தில்லி பலாத்கார சம்பவமும், கோடிகளில் குழுமும் கும்பமேளாக் கூட்டமும்! - ஒரு பார்வை!
By செங்கோட்டை ஸ்ரீராம்
First Published : 15 February 2013 05:43 PM IST

காதலர் தினம் (பிப்ரவரி-14)!

அட... இதற்குப் போய் எத்தனை விதமான கொண்டாட்டங்கள்?! இரவுக் கேளிக்கைகளும் அந்தரங்கங்களும் இந்த ஒரு தினத்தில் மட்டும் பகலில் அதுவும் எல்லோர் பார்வையிலும் படும்படியாக அரங்கேற்றம் கண்டிருக்கிறது? இதற்குப் பெயர்தான் நாகரிகமோ? நாகரிக வளர்ச்சியும் இதுதானோ? எங்கோ கற்கால மனிதர்களை அல்லவா இவையெல்லாம் நினைவூட்டுகின்றன?

தெருக்களும் பேருந்துகளும் இணையர்களின் இம்சைகளால் நிறைந்துவிட, பல நகரங்களிலும் பூங்கா(park) இன்று மூடப்பட்டுள்ளது என்ற பெயர்ப் பலகை தொங்கும் அளவுக்கு இந்தக் காதலர் தினக் கொண்டாட்டம் செல்லுவதற்குக் காரணம் என்ன?

இது ஒரு புறம் இருக்கட்டும்.... இன்று நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்று ஈவ் என்ஸ்லெர் என்ற அமெரிக்கப் பெண்மணியின் அழைப்பை ஏற்று, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சம நீதி கோரி உலகம் முழுவதும் நூறு கோடி பெண்கள் 202 நாடுகளில் வீதிக்கு வரப் போகிறார்களாம்! இந்தப் பெண்மணியை இத்தகைய அறிவிப்பினைச் செய்யத் தூண்டியது எது?

பலவந்தத்தின் மூலம், ஒத்துழைப்பில்லாமல் ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்டால், பெரும்பாலும் அந்தப் பெண் கர்ப்பமாவதில்லை” - இப்படி அமெரிக்க தேர்தல் பிரசாரத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டாட் அக்கின் பொதுக்கூட்டத்தில் பேசியதுதான் காரணம்!

இதைத் தொடர்ந்து, பெண் விடுதலை, சம நீதி என உலகம் முழுவதும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சில செய்தி நிறுவனங்களும் இந்த நூறு கோடியின் எழுச்சி (one billion rising) என்ற ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் கலந்த நூதனப் போராட்டத்தை முன் நின்று நடத்துகின்றன. நம் நாட்டில் இந்தப் போராட்டத்தில் முன்நிறுத்தப்படுவது தில்லியில் டிசம்பர் 16, 2012 அன்று ஒரு பெண் கொடூரமாக ஒரு காட்டுமிராண்டி கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலையான சோக நிகழ்வு!

இதை அடுத்து, தில்லி உலகின் பாலியல் பலாத்காரத் தலைநகரம் என்று ஒரு சித்திரத்தை உலக நாடுகள் பரப்பத் தொடங்கிவிட்டன. உலக நாடுகள் மட்டும்தான் என்றில்லை!  இந்திய ஊடகங்களும் இப்படி ஒரு பரப்புரையை நொடிக்கு நூறு தரம் போட்டுக் காட்டத் தொடங்கிவிட்டன. இந்தியாவின் பண்பாடு பெண் அடிமைத்தனம் நிறைந்ததாம்! அதுவே பலாத்காரங்களுக்குக் காரணம் என்று சிலர்சந்தில் சிந்து பாடினர்’! இந்த நூறு கோடியின் எழுச்சி (one billion rising) சுதந்திர யுத்தம் என்றும் சிலர் முழங்கினர்! இது உலகப் பெண்களின் முழக்கம் என்று பெருமிதம் கொண்டனர் சிலர்.

இந்த முழக்கம் இந்தியாவை எப்படி பாதித்துள்ளது..?

தில்லி பலாத்கார சம்பவம் நடந்தவுடனே டிச.29, 2012 அன்று அமெரிக்க தூதரகமும், .நா பொதுச் செயலர் பான் கீ மூனும் கண்டனம் தெரிவித்தனர். அவர்களின் கண்டனச் செய்தி உலகமெல்லாம் வெளியானது. பாலியல் பலாத்காரத்தைக் கண்டித்து பாரீஸ் நகரிலுள்ள இந்தியத் தூதரகம் வரை பேரணி நடத்தி மனுவும் கொடுக்கப்பட்டது. உலகம் முழுவதும், ஏதோ இந்தியா ஒரு காமாந்தக நாடு என்பது போன்ற தோற்றத்தை இந்த ஊடகங்களும் போராட்ட அமைப்புக்களும் ஏற்படுத்தின. இத்தனைக்கும் இந்த ஊடகங்கள் எல்லாம் இந்தியத் திருநாட்டின் முதலீட்டில் இந்தியத் திருநாட்டின் ஊடகவியலாளர்களைக் கொண்டு, இந்தியத் திருநாட்டு மக்களுக்கான செய்திகளைத் தருவதற்கு இங்கேயே இயங்குபவை! இந்த லட்சணத்தில், ஊடகங்களில் அன்னிய நேரடி முதலீடும், அன்னிய ஊடகங்கள் இந்தியத் திருநாட்டில் இயங்குவதற்கும் அனுமதித்தால்..?

சரி இது போகட்டும்! பிப்.10, 2013 அன்று அலகாபாத்தில் சுமார் 3 கோடி மக்கள் கும்பமேளா புனித நீராடலுக்காகக் கூடினர். ஒரே நாளில், ஓர் ஆற்றுப் படுகையில் இத்தனை பேர் கூடினால்..?

பாதுகாப்புக்கு வெறும் 12,000 போலீசார்தான் நிறுத்தப்பட்டனர்! அதாவது சுமார் 3 ஆயிரம் பேருக்கு ஒரு காவலர் என்ற அளவில்!

இவ்வளவு பேர் கூடினாலும், கூட்ட நெரிசல் காரணமாக ஓரிரு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அது சரியான திட்டமிடல் அல்லது முன்னேற்பாடு இல்லாமையாலோ, வழிகாட்டத் தவறுவதாலோதான்!

இந்தக் கும்பமேளா நிகழ்வுகளில் ஒரு வன்முறையோ, பெண்கள் மீதான தாக்குதலோ அல்லது, சாதாரணமாக இரவு 12 மணிக்கு சிறுமூளை கலங்கும் அளவுக்குக் குடித்துவிட்டு கும்மாளமிடும் ஆங்கிலப் புத்தாண்டுக்கொண்டாட்டங்களில் நடக்கும் சில்மிஷங்களோ எங்கும் காணப்படவில்லை!

தீபாவளி நேரம் என்று இல்லாமல் சாதாரண நாட்களில் கூட சிறு தெருவில் சுமார் பத்தாயிரம் பேர் ஒட்டி உரசிச் செல்லும் சென்னை தி.நகர், ரங்கநாதன் தெருவில் நடக்கும் ஒட்டு உரசல்கள்கூட இந்தக் கும்பமேளாவில் காணப்படவில்லை.

இன்பச் சுற்றுலா என்ற ரீதியில் குற்றாலத்துக்கும் பாபநாசத்துக்கும் ஒகேனக்கல்லுக்கும் கோவா கடற்கரைக்கும் இன்னும் எங்கெல்லாம் அருவிக் கரைகளும் ஆற்றுக் கரைகளும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் வக்கிரப் பார்வையுடன் சுற்றித் திரியும் கழுகுக் கண்கள் இந்தக் கும்பமேளாக் குளியலில் காணப்படவில்லை! இது கும்பமேளா சென்று திரும்பிய அன்பர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பகிரும் செய்தி. ஆனால், இந்த நிகழ்வு எந்த ஊடகத்திலும் வெளிச்சம் போட்டுக் காட்டப்படவில்லை! சமுதாய சிந்தனையாளர்களாலும் கண்டுகொள்ளப்படவில்லை. பாலியல் பலாத்காரத்தின் தலைநகரம் தில்லி- என்று முழங்கிய வாய்கள், இந்தக் கட்டுக்கோப்பான, தனி நபர் ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் நிகழ்வை மட்டும் மறைப்பது ஏன்?

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நாட்டின் ஒழுங்குமுறையைப் பின்பற்றும் பாரம்பரிய சமுதாயத்தில்...  நவீன சிந்தனையாளர்களின் பார்வையில் சொல்லப் போனால், "பிற்போக்கு-ஆணாதிக்கவர்க்கீய முறையைப் பின்பற்றும் சமுதாயத்தில்... போலீசார் துணையின்றி பாதுகாப்புடன் பெண்களால் வலம் வர முடிகிறது. ஆனால், அடிமைத் தளையை அறுத்தெறிந்து, தெள்ளிய அறிவுமுதிர்ச்சியும், உலகாயத சிந்தனையும் கொண்ட பெண்ணால் ராணுவமும், காவல் துறையும் துப்பாக்கிகளுடனும் விழிப்புடனும் வலம்வரும் தலைநகர் தில்லியில் பாதுகாப்பாக வலம் வர முடியவில்லையே?!

ஏன்.. இந்தியத் திரு நாட்டில் இப்படி ஓர் ஏற்றத்தாழ்வும் மாறுபட்ட இருவேறு காட்சிகளும்!

இப்படி ஒரு விவாதம் ஏதாவது ஒரு தொலைக்காட்சி சேனலிலாவது நடைபெறுமா என்று கைகள் ரிமோட் கருவி பொத்தானை அழுத்தி அழுத்தித் தேய்ந்து போனதுதான் மிச்சம்!

குடும்பத்தார் இருக்கிறார்கள்... காதலிக்க இடமில்லை... அதனால் பொது இடத்தில் கட்டிப் புரளுவோம் என்று முழங்குகிறார் தனியார் தமிழ் டிவி விவாதத்தில் ஒரு பெண்ணிய முற்போக்குவாதி!

ஆங்கில சேனல்களிலோ, உடையில்லாமல் வலம் வருவது எங்கள் தனிப்பட்ட உரிமை என்கிறார் ஒரு பெண்மணி! உரிமைக் குரல்கள் பல ஊடகங்களில் இப்படி எதிரொலிக்க...

கும்பமேளா போன்ற ஒரு பெரும் கூட்டத்தில்கூட எங்கள் நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக உலவுகிறாள் என்று முழக்கம் இடத்தான் ஆளில்லை!

கும்பமேளாவில் கலந்துகொண்ட அதே இந்தியர்கள்தானே தில்லியிலும், புத்தாண்டுக் கொண்டாட்டத்திலும் இடம்பெறுகிறார்கள். அப்படி என்றால்...?இரு வேறு நிகழ்வுகளிலும் மனிதர்களின் மனநிலை எப்படி வேலை செய்கிறது...?

இந்த நாட்டின் பாரம்பரியக் கண்ணோட்டத்தில் ஒரு ஆன்மிக நிகழ்வில் பங்கு பெறும் ஒருவன் பிற பெண்களை சகோதரியாகவும், தாயாகவும் பார்க்கிறான்...

அதுவே வர்த்தக மயமாக்கல், மேற்கத்திய நடைமுறைகளில் உள்புகும்போது போகத்தின் வழியில் காட்சிப் படுத்துகிறான்... இது ஆணாகிலும் பெண்ணாகிலும் உணர்வுகளின் அடிப்படையில் இவ்வாறே அமைந்து விடுகிறது!

ஒவ்வோர் ஊரிலும் ஆற்றங்கரைகளும் குளக் கரைகளும் உள்ளன. இன்றும் கிராமங்களில் ஆறுகளிலும் குளக்கரைகளிலும் பெண்கள் இயல்பாகத் தங்கள் காலைக் கடன்களில் ஒரு பகுதியாக துணி துவைத்து குளித்துமுடித்து ஈரத் துணியுடன் கரையேறி வீட்டுக்கு நீர் சுமந்து செல்கிறார்கள். அங்கெல்லாம் பெண்களை கேலி செய்து யாரும் மீள்வதில்லை. கிராமப் புற காட்சியமைப்பு கொண்ட சினிமாக்களில் காட்டப்படும் கேலிக் காட்சிகளைத் தவிர!

ஆனால் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் உயர் படிப்புடனும், ஜன்னல் ஜாக்கெட், தொப்புள் கம்மல் சகிதம் அலங்கார பவனி வரும் பெண்கள், படித்த, நாகரீக ஆண்களால் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்.

நாட்டின் நிலை இப்படி இருக்க, ஆங்கிலக் கல்வியால் மக்களை காமாந்தகர்களாக மாற்றும் மேற்கத்திய நாகரீகத்தை நாகரீகம் என்றும் அடிப்படை உரிமை என்றும் ஆதரித்துவிட்டு, நன்நெறி புகட்டி பெண்களை பாதுகாப்புடனும், மரியாதையுடனும் நடத்தும் இந்த நாட்டின் ஆன்மீக வழியை பெண் அடிமைத்தனம் என்று தூற்றும் மேல்தட்டு சிந்தனையாளர்களின் உள்மன நோக்கம்தான் என்னவோ?!


7 comments :

  1. ரொம்ப தெளிவா அழகா சொல்லியிருக்கீங்க. கெட்டதை வெளிச்சம் போட்டு காட்டிய ஊடகங்கள் நல்லதை என்னிக்கு வெளிக்காட்டும். உங்க ஒவ்வொரு கருத்தும் மறுப்பதற்கில்லை சகோ

    ReplyDelete
  2. விளம்பரங்களில் இருந்து ஆரம்பிக்குதோ...நல்ல அலசல்...

    ReplyDelete
  3. நல்ல கருத்தை எடுத்து கூரியுள்ளீர்கள் . நன்றி

    ReplyDelete
  4. கோவில்களில் மட்டும்தான் சாமி இருக்கிறது என்று நம்புகிறார்கள் போல தெரிகிறது. சுவரில் சிறுநீர் கழிப்பவர்களிடம் இருந்து சுவரை காப்பாற்ற சுவரில் சாமி படம் வரைந்து வைப்பார்கள். அதுபோல உலகமெங்கும் தெருவுக்கு தெரு சுவருக்கு சுவர் சாமி படங்களை வரைந்து வைத்துவிட்டால் குற்றங்களே நடக்க வாய்ப்பில்லை. உடனே செயல்படுத்துங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. எது கலாச்சாரம் எது நாகரீகம் என்ற தவறான புரிதலே எல்லாவற்றிற்கும் அடித்தளம்..ஊடகங்கள் எப்போதும் நல்லதை விட கெட்டதையே அதிகம் பிரதிபலிக்கின்றன என்பது முற்றிலும் உண்மை.

    ReplyDelete
  6. தேவநாதன், சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றியும் அலசியிருக்கலாமே

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை ( 383 ) அரசியல் ( 247 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 111 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 90 ) அமெரிக்கா ( 81 ) ஜெயலலிதா ( 71 ) நக்கல் ( 55 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 45 ) மோடி ( 43 ) தேர்தல் ( 40 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) நையாண்டி ( 31 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) போட்டோடூன் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சமுகம் ( 23 ) எண்ணங்கள் ( 21 ) சட்டம் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) காதல் ( 19 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) தமிழகம் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) vijay tv ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சாதனை ( 7 ) டிப்ஸ் ( 7 ) நக்கல்கள் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) சமையல் குறிப்பு ( 6 ) சிரிக்க ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) அழகு ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தொழில் நுட்பம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கலாய்ப்பு ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தமிழ் சமுகம் ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீதி ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல் கலாட்டா ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இந்தியர் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சரக்கு ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக அரசியல் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) மாணவர்கள் ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) ரெசிப்பி ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #dmk fail ( 1 ) #jayalalithaa ( 1 ) #modi ( 1 ) #olympic ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்.நையாண்டி ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமுகப் பிரச்சனை ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுடும் உண்மைகள் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிகட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மக்கள் ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog