உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, February 15, 2013

பாலியல் விஷத்தை கக்கி சமுகத்தை சீரழிக்கும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு உலக தமிழர்களின் சார்பில் கடும் கண்டணம்


பாலியல் விஷத்தை கக்கி சமுகத்தை சீரழிக்கும் குமுதம் ரிப்போர்ட்டருக்கு  உலக தமிழர்களின் சார்பில் கடும் கண்டணம்

நான் தமிழ்மணத்தில் வந்த ஒரு பதிவை  பார்த்த  போது  நான் மிகவும் ஷாக்காகி போனேன். அதில் பல கோடி தமிழ்மக்களின் தலைவராகவும் உள்ள கலைஞர் அவர்களின் படத்தையும் நடிகை குஷ்புவின் படத்தையும் போட்டு வந்த குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டைபடம்  மிகவும்  என்னை பாதித்தது ..அதில் பாலியல் விஷத்தை கக்கி சமுகத்தை சீரழிக்கும் செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

பொது நலத்தில் ஈடுபட்ட தலைவர்களை பற்றிய தகவல்களை தாங்கி வரையும்  கேலிப்படங்களுக்கும் கட்டுரைகளுக்கும் கட்டுபாடற்ற  சுதந்திரம் இருக்கிறது என்ற போதிலும் இவ்வளவு கேவலமாக அட்டைபடம் வரைந்து வெளியிட வேண்டியதில்லை என்பதுதான் எனது கருத்து .


இந்த மாதிரி செய்திகள் மக்களின் மனத்தில் விஷத்தை விதைக்கும் செயல் இந்த செயலை அனைத்து தர மக்களும் கண்டிக்க வேண்டும்


இதே மாதிரி ஜெயலலிதா பற்றிய ஒரு கேலவலமான செய்தியை சிங்கள கார்டுனிஸ்ட் வெளியிட்ட போது எந்த அளவிற்கு நாம் சினந்து எழுந்து கண்டணம் தெரிவித்தோமோ அது மாதிரி குமுதம் ரிப்போர்ட்டருக்கும் கண்டணம் தெரிவிக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல் அவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை சினிமாத்துறையினர், எழுத்தாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் குமுதம் குழுமத்தில் இருந்து வரும் அனைத்து பத்திரிக்கைகளுக்கும் எந்த வித ஒத்துழைப்பு கொடுக்க கூடாது. பொதுமக்களும்தான் கூடதான்.


இப்படி பத்திரிக்கைகள் விஷத்தை விதைப்பத்தினால்தான் நம் இளைய சமுதாயம் கெட்டுப் போய் பாலியல் பலாத்காரம் போன்ற செயல்களை செய்துவிட்டு அது தவறே இல்லாதது மாதிரி நடந்து கொள்கின்றனர்.


குமுதம் ரிப்போர்ட்டரின் இத்தகைய அயோக்கியத்தனத்தை தமிழ் பதிவுலகின் சார்பாக அவர்கள்...உண்மைகள் வலைத்தளம் மிகவும் வன்மையாக  கண்டிக்கிறது. அது போல மானமும் உணர்வும் உள்ள ஒவ்வொரு தமிழரும் இதை கண்டிக்க வேண்டும்.


அன்புடன்
மதுரைத்தமிழன்16 comments :

 1. பத்திரிகைகள் ஒரு சுயகட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். விற்பனைக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது கண்டிக்கத் தக்கதே

  ReplyDelete
 2. I am greatly shocked by the cover and cover story of Kumudam Reporter depicting Kushboo as Maniammai and Kalaignar as Periyar. This is the limit and everybody should raise their voice against the misuse of journalistic ethics by Kumudam Reporter. This is a it case For Kalaignar as well as Kushboo to file a defamation case against the magazine to teach them a lesson.

  ReplyDelete
 3. ஐயா, \\பொது நலத்தில் ஈடுபட்ட தலைவர்களை\\ என்று தானே சொல்றீங்க. நீங்க சொன்ன பொது நலத்தில் ஈடுபட்டாங்க? அவனவனும் பெண்டாட்டி பில்லைகுட்டிக்கு சொத்து சேர்த்தான், பதவி சேர்த்தான், அதுக்கு தமிழ்நாட்டையும் இலங்கை தமிழர்கள் உயிரையும் அடகு வச்சான். இதுல பொது நலம் எங்கே வந்தது? ஹெ ............ ஹெ ............ ஹெ ............

  ReplyDelete
  Replies
  1. YOU ARE 100%CORRECT KARUNANIDHI IS ALSO EQUALLY RESPONSIBLE

   Delete
 4. கண்டிக்கப்படவேண்டிய விஷயமே.

  ReplyDelete
 5. குமுதம் ஏற்கனவே மஞ்சள் பத்திரிகை வகையில்
  சேர்ந்து விட்டது , அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ,
  இதை வெளியிடுவதற்கு முன் ஒரு முறை தங்கள் வீட்டு
  பெண்ணை பற்றி யாராவது தவறாக பேசினால் என்ன
  செய்வோம் என்றும் சிந்திக்க வேண்டும் ,விற்பனைக்காக
  எதையும் செய்ய கூடாது ,இது குஷ்பூ வுக்கு மட்டும் அல்ல நாளை
  நம் வீட்டில் உள்ள பெண்ணுக்கும் நடக்கலாம் ,ஒரு மனைவி ,மற்றும்
  இரு பெண்களுக்கு தாயாகவும் உள்ள பெண்ணை பற்றி எழுதுகிறோம்
  என்ற அடிப்படை நாகரிகம் கூட இல்லாத இது போன்ற
  இழிவான பத்திரிகா தர்மம் இல்லாத செயல்களை கண்டிப்பதோடு
  நின்று விடாமல் , இது போன்ற பத்திரிகைகளை வாங்குவதை
  தவிர்த்து அவர்களுக்கு நல்ல முறையில் பாடம் கற்பிக்க
  வேண்டும் என்பதே என்னுடைய கருத்து ............

  ReplyDelete
 6. குமுதம் நிறுவனம் அடிக்கடி இப்படி அசிங்கபடுத்தி அசிங்கப்படுவது உண்டு! இந்த போக்கு வண்மையாக கண்டிக்கத்தக்கது! கண்டிப்பாக குரல் கொடுப்போம்!

  ReplyDelete
 7. குமுதம் செஞ்சாலும் தப்ப்தான், மஞ்சள் துண்டு செஞ்சாலும் தப்புதான், கருப்பு சட்டை வெள்ளைத் துண்டு அதாங்க வீர டிங் டாங்

  ReplyDelete
 8. குஷ்புவையும், திமுக தலைவரையும் கேவலபடுத்திய அடிப்படை நாகரிகம் கூட தெரியாத குமுதம் பத்திரிகைக்கு எனது கடுமையான கண்டனங்கள்

  ReplyDelete
 9. Kumutham Reporter Is not at all a magazine. This is a cancer to tamil society. Can it dare to write anything against Brahmin Jeyalalitha anti-people government. It can not do so. Because of its blood. Stupid fellows of Kumudam. woe to it

  ReplyDelete
 10. கண்டிக்கப்பட வேண்டும்

  ReplyDelete
 11. பொது வாழ்க்கையில் உள்ளவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாக ஏசுவதை ஒரு கலையாகவே செய்து அதை ஒரு மேடைக் கலாச்சாரமாகவும் அடித்த பெருமை முதலில் திமுகவுக்குதான். அறுபதுகளில் காங்கிரஸ் ஆண்ட காலங்களில் ஆளுங்கட்சியை சார்ந்த பெண் உறப்பினர் ஒருவரை அன்றைய குளித்தலை உற்ப்பினராக இருந்த இன்றைய திமுக தலைவர் சட்ட மன்றத்தில் எந்த மாதிரியான இரட்டை அர்த்த வசனங்களை அவிழ்த்து விட்டு அசிங்கப் படுத்தினார் என்பது இன்றைய தலை முறையினருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அது போல இன்று வரை ஜெயலலிதாவை ஆபாச விமரிசனங்களால் அர்ச்சனை செய்ய தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா அணுக்குண்டு அன்புரோஸ், நன்னீலம் நடராசன், வெற்றிகொண்டான் என்று ஒரு தனிப்படையை திமுக பராமரித்து வந்தது. இதில் சிலர் அவ்வப்போது கட்சி மாறி அதே வசனங்களை திமுக தலைமை மீது வாரியடிததும் உண்டு. மொத்தத்தில் விதைத்ததை அறுவடை செய்துதானே ஆகா வேண்டும்? காமராஜரை கூட விட்டு வைத்தார்களா என்ன?

  ReplyDelete
 12. பொது வாழ்க்கையில் உள்ளவர்களை தனிப்பட்ட முறையில் ஆபாசமாக ஏசுவதை ஒரு கலையாகவே செய்து அதை ஒரு மேடைக் கலாச்சாரமாகவும் அடித்த பெருமை முதலில் திமுகவுக்குதான். அறுபதுகளில் காங்கிரஸ் ஆண்ட காலங்களில் ஆளுங்கட்சியை சார்ந்த பெண் உறப்பினர் ஒருவரை அன்றைய குளித்தலை உற்ப்பினராக இருந்த இன்றைய திமுக தலைவர் சட்ட மன்றத்தில் எந்த மாதிரியான இரட்டை அர்த்த வசனங்களை அவிழ்த்து விட்டு அசிங்கப் படுத்தினார் என்பது இன்றைய தலை முறையினருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அது போல இன்று வரை ஜெயலலிதாவை ஆபாச விமரிசனங்களால் அர்ச்சனை செய்ய தீப்பொறி ஆறுமுகம், வண்ணை ஸ்டெல்லா அணுக்குண்டு அன்புரோஸ், நன்னீலம் நடராசன், வெற்றிகொண்டான் என்று ஒரு தனிப்படையை திமுக பராமரித்து வந்தது. இதில் சிலர் அவ்வப்போது கட்சி மாறி அதே வசனங்களை திமுக தலைமை மீது வாரியடிததும் உண்டு. மொத்தத்தில் விதைத்ததை அறுவடை செய்துதானே ஆக வேண்டும்?காமராஜரை கூட விட்டு வைக்கவில்லையே இவர்கள்?

  ReplyDelete
 13. காசுக்காக இப்படியெல்லாம் எழுதும் பத்திரிக்கையாளர்களை நடுரோட்டில் கட்டிவைத்து பதிக்கப்பட்ட பெண்களினாலேயே செருப்பில் அடிக்கச்சொல்லி ஒரு சட்டம் போட்டால் தான் இவர்கள் பெண்களை கேவலமாக எழுதுவது நிற்கும்.

  ReplyDelete
 14. கண்டிப்பாகக் கண்டிக்கப்பட வேண்டிய விசயம்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog