உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, January 5, 2013

ஜெயலலிதா கலைஞர் சந்திப்பு நடந்தால் ?


ஜெயலலிதா கலைஞர் சந்திப்பு நடந்தால் ?மின்சாரப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்ற குழப்பத்தில் மண்டை காஞ்சுப்போன ஜெயலலிதா அவர்கள் காற்று வாங்க மெரினா காந்தி சிலை அருகே உள்ள கடற்கறையோரம் வந்தார். அதே நேரத்தில் குடும்பத்தில் உள்ள பிரச்சனையால்  மண்டை காஞ்சுப்போன கலைஞர் அவர்களும் காற்று வாங்க வீல் சேரில் வந்தார். அப்போது அவர் காலில் ஏதோ வந்து மாட்ட அதை தள்ளிவிடுவதற்காக சற்று குனிந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த ஜெயலலிதா ஏதோ வயதானவர் நம்மை குனிந்து வணங்குகிறாறே என்று நினைத்த அவர் பதிலுக்கு இரு கரம் கூப்பி வணங்கத் தொடங்கினார். குனிந்த கலைஞர் தலை நிமிர்ந்த போது அம்மா அவர்கள் அவரைப் பார்த்து கரம் கூப்பி வணங்கி இருப்பதை பார்த்து கண் கலங்கிவிட்டார் அவர் கண் கலங்குவதை பார்த்த அம்மாவும் கண்கலங்க இறுதியில் இருவரும் உணர்ச்சி வசப்பட்டு எதிரி என்பதை மறந்து நட்புடன் பேச ஆரம்பித்தனர்.


ஜெ : என்னங்க ரொம்ப நாளைக்கு அப்புறம் நேரில் பார்க்கிறோம்.. உங்க உடல் நிலை ரொம்ப பாதித்திருக்கிறது போல இருக்கே?

: ஆமாங்க டாக்டரிடம் காண்பித்தேன் அவர் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது வயதாகிவிட்டாலே இப்படித்தான் இருக்கும் என்று சொன்னார்கள்

ஜெ : இதுக்கெல்லாம் டாக்டரிடம் போவார்களா? இதற்கெல்லாம் கேரளாவில் இருந்து சாமியாரை வரவழைத்து ஜாதகம் பார்க்க வேண்டும் அதன் பின் அவர்கள் சொல்லுவது படி பல கோயில்களில் யாகம் செய்ய வேண்டும் அப்படி செய்தால் உங்கள் பிரச்சனைகள் பல நீங்கும் அப்புறம் நீங்கள் என்று இளமையாக இருந்து பல போராட்டங்களை நடத்த முடியும்

; ஹீ.ஹீ எனக்கு ஆன்மிகத்தில் அவ்வளாவா ஈடுபாடு கிடையாது நான் பகுத்தறிவு வாதி அதனால் அந்த சாமியார் லிஸ்டையும் எந்த கோயிலில் யாகம் நடத்த வேண்டிய விபரத்தையும் என் மனைவிக்கிட்ட அல்லது பெண் பிள்ளையிடம் மறக்காமா கூப்பிட்டு சொல்லுங்கள் அப்புறம் அவங்க பார்த்துகுவாங்க..


ஆமாம் நீங்களும்தான் மெலிஞ்சிட்டிங்க... என்னை நினைத்து பயந்து கவலைப்பட்டு மெலிஞ்சுட்டீங்களா?

ஜெ : அட அட நீங்க நல்லா ஜோக் அடிக்கிறீங்களே உங்கள நினைச்சு பயமா  உங்க புள்ளைங்களே உங்களை பார்த்து பயப்பாடாதுங்க... தமிழகத்தையே என் காலில் விழ வைக்கும் எனக்கு உங்களை பார்த்து பயமா?

எனக்குள்ள பயமெல்லாம் எதிரிகளை பார்த்து இல்ல என் கூட இருக்கும் தோழியும் அவர் குடும்பத்தையும் நினைத்துதான் . உங்க குடும்பத்தில உங்களுக்கு அப்புறம் யாரு தலைவர் என்று தெரிஞ்சுக்கதான் போட்டி ஆனா இங்க  நான் உயிரோட இருக்கும் போதுதே என்னை கவிழ்த்துவிட்டு முதலைமைச்சார வர முயற்சிக்கிறாங்க... அதுதான் எனக்கு பெரும் கவலையா இருக்கு

; ஆமாம் அது சரிதான் போன வருடம் உங்க தோழியை வீட்டை விட்டு வெளியே அனுப்பினீங்க அப்பறம் என்னடான்னா நீங்களே திரும்பி கூப்பீட்டிங்க

ஜெ : அதை ஏன் கேட்கிறீங்க அவரை அனுப்பிச்சிட்டு, பத்திரிக்கை நண்பரை கூடச் சேர்த்தேன். அவரை கூடச் சேர்த்தவுடனே அவர்தான் கட்சி தலைவர் மாதிரி நடக்க ஆரம்பித்தார் அதுமட்டுமல்ல மற்றவங்க அடிக்கும் கொள்ளையில்  ஆட்டோமெடிக்காக எனக்கொரு கமிஷன் வரும். ஆனா இவர் வந்தவுடன்  எல்லோரும் இவருக்கு பயந்து தருவதை நிறுத்த ஆரம்பிச்சுட்டாங்க.....இந்த நிலமை நிடிச்சா நான் மடத்துல ஆண்டியா போய் இருக்க வேண்டி இருந்திருக்கும் நல்ல வேளை எனக்கு புத்தி தெளிஞ்சது.


அதுனால இனி என் வாழ்க்கையில் இனி தோழரோ அல்லது தோழியோ வேண்டாம் என்று முடிவு செய்து விட்டு தோழியை எனது உதவியாளராக மாற்றிவிட்டேன். அது மட்டுமல்ல, வரும் கமிஷன் அவர் மூலமே வரும்படி செய்து விட்டேன். எதிர்காலத்தில் பிரச்சனை வந்தால் எல்லாவற்றிர்கும் அவர்தான் காரணம் என்று கண்ணிர்விட்டால் நம்ம முட்டாள் தமிழ் மக்கள் அப்படியே நம்பிவிடுவார்கள். அதை வைத்து இன்னொரு முறை ஆட்சிக்கு வந்திடலாம், அப்படி வரவில்லையென்றால் நீங்கள் வருவீர்கள் அப்படி நீங்கள் வந்தால் ஐந்து வருடம் நான் கொட நாட்டில் நல்ல ரெஸ்ட் எடுத்து வருவேன். அதன் பின் உங்க ஆட்சி போரடித்தால் நான் மீண்டும் வருவேன் அவ்வளவுதாங்க... என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்


ஆமாம் ஆமாம் நான் என் சோக கதையை சொல்லுகிறேனே நீங்க உங்க குடும்ப கதையை சொல்லுங்களேன்.

; அதை ஏன் கேட்கிறிங்கம்மா?  என் செல்லப் பொண்ணு கனிமொழி தான் நேரடியாக  செய்யாத தவறுக்கு பலி ஆடாக  ஆக்கபட்டதை நினைத்துதான் என் மனம் கலங்குகிறது ஆனா அவள் மேல் விழுந்த பழியை துடைக்க இது வரை நான் காத்து வந்த மானம் மரியாதையெல்லாம் அந்த டெல்லிகாரங்களுக்கு அடகு வைச்சிட்டு என் பொண்ணை காப்பாற்ற இப்போது கப்பம் கட்டி வருகிறேன்... உங்களையும் அந்த டெல்லிகாரம்மாவையும் ஒப்பிட்டு பார்த்தா நீங்க தங்கம் என்றுதான் சொல்லுவேன். நீங்க எனக்கு எதிரியாக ஆனதுக்கு நீங்க காரணம் இல்ல, அந்த எம்ஜியார்தான் காரணம் அவர் மட்டும் தனியா கட்சி ஆரம்பிக்காம இருந்து இருந்தா நம்ம ரெண்டு பேருக்கும் பிரச்சனை இருந்து இருக்காது.. நீங்களும் புகழ் பெற்ற நடிகையாக இருந்து ஒவ்வொரு வருடமும் நான் நடத்தும் பாராட்டு விழாவில் உங்களுக்கு  சிறந்த நடிகை அவார்டு கொடுத்து இருப்பேன். ஹூம்ம்ம்ம்ம்ம் விதி என் வாழ்க்கையில் விளையாடிவிட்டதுங்க....

இப்ப என் வயித்துல பால் வார்த்த செய்தி நீங்க அறிவிச்சதுதானுங்க.... நீங்க 40 தொகுதியிலும் தனியாக நிற்க போறாதா சொன்னதுதாங்க... எனக்கு இப்ப ஒரு ஐடியா தோணுதுங்க நீங்க 40 தொகுதியிலும் நில்லுங்க நானும் காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிக்குக்கூட கூட்டணி வைத்து எந்த இடத்துல ஜெயிக்க முடியுமோ அந்த தொகுதியில் என் கட்சியை போட்டியிட வைச்சுக்கிறேன்.

இறுதியில் நம்ம இரண்டு கட்சியும் மட்டும்தான் ஜெயிக்குமுங்க.. தேர்தலுக்கு அப்புறம் நான் உங்களை பிரதமர் பதவிக்கு சிபாரிசு பண்ணுறேன்..நிச்சயம் நீங்க போட்டியில்லாமல் பிரதமர் பதவிக்கு வந்திடலாம். அதன் பிறகு நம்ம இரண்டு கட்சிக்கும் நான் தலைவராக ஆகிவிடுறேன், அதன் பிறகு ஸ்டாலின் தம்பியை முதலைமைச்சார ஆக்கிடலாம். அழகிரியை மத்திய உள்துறை மற்றும் ராணுவ அமைச்சராக்கிவிடலாம் கனியை வெளிநாட்டு அமைச்சராக்கிவிடலாம். வேணுமுன்னா உங்க தோழியை வருங்காலத்தில் ஜனாதிபதி ஆக்கிடலாம் என்ன சொல்லுறீங்க...


ஜெ : என்னங்க அது நிஜமா நடக்குமாங்க....


; என்னை நம்புங்க....அந்த டெல்லிகாரங்களுக்கு எவ்வளவு நன்றியுள்ளவனாக நான் இருந்தாலும் என்னை மறைமுகமாக போட்டு தாக்கு தாக்குன்னு தாக்கின்னாலும் நான் பொறுமையாக இருக்கிறேன். ஆனா உங்களுக்கும் எனக்கும் இந்த முதலைமைச்சர் போட்டியை தவிர வேற ஏதும் கிடையாதுங்க... இனிமே எனக்கு முதலைமைச்சர் பதவி வேணாம் உங்களுக்கும் வேணாம். உங்களையும் ஸ்டாலினையும் பதவியில் அமர்த்தி என் குடும்பத்தில் அமைதி நிலவுவதை பார்த்து விட்டு கடவுள் என்னை அழைக்கும் போது மெரினா பீச்சில் எனக்கொரு இடத்தை தேடி அமர்ந்து கொள்கிறேன்....

தீடிரென்று என் மூஞ்சியில் தண்ணிர் அடித்தது. நான் நினைத்தேன் மெரினா கடற்கரையில் உள்ள அலைதான் அடித்தது என் நினைத்தால் என் மனைவிதான் என் மூஞ்சியில் தண்ணிர் கொட்டிவிட்டு என்னங்க் மெரினா பீச்சு அது இது என்று ஏதோ உளறுறீங்க.. என்ன கனவா கேர்ள் பிரெண்டுகூட ஆட்டமாம போடுறீங்க என்று சத்தம் போட்டவாறே பூரி கட்டையை எடுக்க போனாள்.

இந்த மனைவிகளுக்கே இதே நினைப்புதான் புருஷங்காரன் எப்ப பார்த்தாலும் பொண்ணுகளேயே பற்றியே கனவு காணுவதாக நினைத்து கொள்கிறார்கள்.

இந்த பொண்ணுகளை தவிர்த்தா உலகில் வேறு ஏதும் நினைக்கவே இந்த ஆண்களால் முடியாத என்ன... ஆண்கள் எப்போதும் நண்பர்கள், சரக்கு, அரசியல்  இதைப்பற்றிதான் எப்போதும் நினைப்பார்கள் என்று இந்த பொண்ணுகளுக்கு எப்பதான் புரிய போதோ ?.

கடவுளே இந்த பொண்ணுககிட்டே(மனைவிக்கிடே) இருந்து எங்களை காப்பாற்று அப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஅன்புடன்
உங்கள் அன்புக்குரிய
மதுரைத்தமிழன் கண்ட கனவுகள்...நீங்கள் படித்து சிரித்து தலையில் அடிக்க

10 comments :

 1. Replies
  1. பார்த்து சிரிங்க.....அப்புறம் ரத்தத்தின் ரத்தங்கள் அல்லது உடன் பிறப்புகள் வந்து மொத்த போறாங்க

   Delete
 2. நல்ல நகைச்சுவை

  என் வலைப்பூ http://rebacca-vethathiri.blogspot.in/

  ReplyDelete
 3. Replies
  1. பகல் கனவு அல்ல இது ஒரு பதிவுக் கனவு யாரு கண்டா ஒருவேளை தமிழக தலைவர்கள் இதைபடிக்க நேர்ந்தால் இப்படியும் ஒரு வழி இருக்கா என்று நினைத்து கூட்டாக செயல்படலாம். நம் தலைவர்கள் அடிக்கடி சொல்வது போல யாரும் நிரந்தர எதிரிகளும் அல்ல நண்பர்களும் அல்ல. அதனால் எதுவும் நடக்கலாம். தலைவர்களுது ஓரே குறிக்கோள் பொது சொத்தை சுரண்டுவதுதான்

   Delete
 4. என்னா ஒரு பிளானிங்கு...........?

  ReplyDelete
 5. ஹஹஹஹ நல்லா சிந்திக்கிறிங்க.

  ReplyDelete
 6. ஹைய் நன்பா எப்படி இப்படி கனவு வருது சுப்புரப்பு!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 7. ஹைய் நன்பா எப்படி இப்படி கனவு வருது சுப்புரப்பு!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog