Sunday, January 27, 2013



விஸ்வரூபத்தால்  கமலை விட்டு நழுவியதா பத்மபூஷண் விருது?

விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசனுக்கு பத்மபூஷண் விருது கிடைக்காமல் போனதாகத் தெரிகிறது.பத்மபூஷண் விருது பெறுவோரின் தகுதிப் பட்டியலில் கமலஹாசன் பெயர் இருந்ததாகவும், கடைசித் தருணத்தில் அவரது பெயரை மத்திய அரசு நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது.

"பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாள் வரை, கமல் பெயர் விருது பெறுவோர் தகுதிப் பட்டியலில் இருந்தது. அவரது விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தைத் தொடர்ந்து கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. இதனால், பத்ம விருதுக்கு கமலின் பெயரை அறிவிப்பதில் மத்திய அரசுக்கு குழப்பம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே விருது பெறுவோர் பட்டியலை வெளியிடுவதில் வெள்ளிக்கிழமை தாமதம் ஏற்பட்டது. எனினும் இறுதி நேரத்தில் அவரது பெயர் நீக்கப்பட்டது' என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.இம்முறை பத்மபூஷண் விருதுக்காக, அறிவிக்கப்பட்ட 24 பேரில் 8 பேர் கலைத் துறையைச் சேர்ந்தவர்கள்.

பலமுறை தேசிய விருது பெற்ற கமலஹாசனுக்கு ஏற்கெனவே பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது. பத்மபூஷண் விருதுக்காக கமலஹாசன் பெயரை தமிழக அரசு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது


Courtesy : திணமணி
By dn, புது தில்லி
First Published : 27 January 2013 01:09 AM IST


டிஸ்கி : இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால்  தமிழகத்தின் நம்பர் ஒன்றாக இருக்க கூடிய செய்திதாளில்  வந்திருக்கிறது. இந்த செய்தியை படிக்கும் போது  எனக்கு அது யூகச் செய்திபோலவே எழுதி இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

இதை படிக்கும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று நீங்களும் இங்கு சொல்லாமே

3 comments:

  1. ஒரு மனுசனை சுத்தி எவ்ளோ அரசியல் சதி வலைகள்...????

    ReplyDelete
  2. கமலுக்கு இதெல்லாம் புதுசில்லை நண்பா, பார்ப்போம் என்னா நடக்குதுன்னு...!

    ReplyDelete
  3. இந்தியாவில் எல்லாவற்றிலும் அரசியல்! அதனால் இந்த செய்தி உண்மையாகவும் இருக்கலாம்! தினமணி பொய் கூறாது!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.