உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, January 20, 2013

'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?


1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள  நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF
தனி படுக்கையில்  அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்
எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.
சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.
பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட்  நண்பர்களிடம் இல்லை.
தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.
ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம்  அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை
.
எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால்  செல்போன் மூலம் பறிமாறவில்லை உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன்,  எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

வேண்டும் பொழுது  நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.


எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்

உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல  எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

பெண்களை மிகவும் மதித்து வந்த காலம் அது. பழகிய பெண்களை படுக்கை அறைக்கு  அழைக்கும் போகப் பொருளாக நினைக்கும் எண்ணம் எழுந்ததில்லை.

இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள்


அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்

9 comments :

 1. கலர்ப் படங்களை விட கறுப்பு வெள்ளைப் படங்கள் எப்பவும் மனம் கவர்பவை என் வரையில்.

  ReplyDelete
 2. உண்மைதான் நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் தான் (நான் பிறந்தது 1972ல்). தினசரி 3 கிமீ நடந்து சென்று தான் பள்ளிக்கு செல்ல வேண்டும். செருப்பு கூட கிடையாது. மீண்டும் பழைய நினைவுகள் நன்றி நண்பரே.
  இசக்கிமுத்து, திருவாடானை

  ReplyDelete
 3. உண்மை தாங்க அந்த கால சூழலுக்கே மனம் ஏங்குகிறது.

  ReplyDelete
 4. கண்டிப்பாக நாம் அதிர்ஷ்ட்டசாலிகள் தான் அருமையான விளக்கங்கள் நன்றி பகிர்ந்தற்க்கு
  நான் இதை பற்றி ஒரு சிறு கவிதை ஒன்று என் http://poovizi.blogspot.in நினைவு குறிப்புகள் என்ற தலைப்பில் ........

  ஓ ....................
  வருமோ !
  என் வாழ்வின்
  பொற்காலம்
  எப்போது வரும் ?
  அடுத்த பிறவி !

  ReplyDelete
 5. நான் எப்பொழுதும் என் குழந்தைகளிடம் சொல்வதுண்டு. அவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் என்று.

  ReplyDelete
 6. உண்மை தான்...எல்லாத்தையும் விட கொடுமை மின்விளக்கினை பயன்படுத்தாத காலத்திலிருந்து இன்றைய நவீன உலகம் வரை எல்லாகாலத்திலும் வாழ்ந்துவரும் பரிதாபதிற்குரியவர்களை நினைத்துபாருங்கள்......

  ReplyDelete
 7. உண்மை..அருமையான ஏங்க வைக்கும் பதிவு.

  ReplyDelete
 8. நானும் இந்த விசயத்தில் கொடுத்து வைத்தவள் தான்.
  உங்களின் பதிவு என் இளமைக்காலத்தை
  அசைபோட வைக்கிறது. நன்றி “உண்மைகள்“

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog