உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, December 22, 2012

மனித உருவில் உலாவரும் வெறி நாய்கள்...ஜாக்கிரதை


மனித உருவில் உலாவரும் வெறி நாய்கள்...ஜாக்கிரதை

சில தினங்களுக்கு முன்பு டில்லியில் மருத்துவ கல்லூரியில் படிக்கும் பெண் பஸ்ஸில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு வீசப்பட்டார் என்ற செய்தியை முதலில் படித்தேன் அதன் பின் பலாத்காரத்தை பற்றிய பதிவு ஒன்ன்று இடலாம் என்று நினைத்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக இடவில்லை. ஆனால் அதைபற்றி யாரவது பதிவுகள் தமிழில் எழுதி இருக்கிறார்களா என்று பார்த்தேன் சினிமாவை பற்றி காட்டும் அக்கறையை நமது தமிழ் பதிவாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு காண்பிக்கவில்லை என்பது மிக ஆச்சிரியமாக இருந்தது. ஒரு வேளை பலாத்காரம் என்பது இந்தியாவில் நடக்கும் ஒரு அன்றாட நிகழ்ச்சி, அதை பற்றி எல்லாம் எங்களுக்கு அக்கறை இல்லை என்பது போல இருந்தது.

அதன் பின் அந்த பலாத்கார செய்தியை மீண்டும் படித்த போதுதான் தெரிந்தது மொத்தம் ஆறுபேர் அந்தப்பெண்ணை வன்புணர்வு செய்து பின்பு இரும்பு ராடால் அவளது உறுப்பை சிதைத்திருக்கிறார்கள்.

என் வாழ் நாளில் இப்படி ஒரு பலாத்காரம்  செய்யப்பட்ட பெண்ணை பார்த்தது  இல்லை பெண் உறுப்பை மட்டுமல்ல உள்ளே இருக்கும் குடலையும் கூட சிதைத்து விட்டார்கள்...என்று  அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர் சொன்னதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியைப் படித்தப்போது மனசே பதறுகிறது.

அந்தப் பெண்ணின் கதறலை சுமந்துக்கொண்டே  நாட்டின் தலைநகரில்  பயணித்திருக்கிறது அந்தப் பஸ். கடைசியில் மொத்த ஆடையும் உருவப்பட்டு குத்துயிரும் குலையுயிருமாய் சாலையில் வீசப்பட்ட அந்த பெண், போலிஸ் வரும்வரை சீந்துவாரின்றி அனாதைபோல கிடந்திருக்கிறாள். நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு  இப்படியொரு கொடூரம் நடந்தேறியிருக்கிறது.

இப்படி பட்ட நிகழ்வு நம்ம குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு ஏற்பட்டு இருந்தால் எப்படி இருக்கும் என ஒரு கணம் சிந்தித்து பார்க்கவும். ஆனால் மக்கள் அப்படி நினைக்காமல் இந்த சம்பவத்தை நமது மக்கள் ஏதோ இந்த வாரம் வந்த வெளிவந்த திரைப்படம் போல பார்த்து  செல்வதாகவே எனக்கு தோன்றுகிறது.

மத்திய அரசாங்கமோ பாராளுமன்றத்தில் வால்மார்ட் இந்தியாவில் நுழைய  செலவிட்ட பணத்தை பற்றி எதிர்கட்சிகள் கேட்கும் கேள்விகளில்  இருந்து தப்பிக்கவும், பிற ஊழல்கள் பற்றிய செய்திகள் மற்றும் கேள்விகளில் இருந்து தப்பிக்க கிடைத்த ஒரு ஆயுதமாகவே இந்த சம்பவத்தை எடுத்து கையாளுகிறோதோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது

இந்த கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கும் அதனை புரிந்தவர்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை அந்த பெண்ணும் மிக கவர்ச்சிகரமாக ஆடை அணிந்து இந்த ஆண்களின் மனதை கவர்ந்தார் என்றோ அல்லது இவர்களுக்கு இடையே முன்பகை இருந்தாகவோ அல்லது எதாவது பார்ட்டியில் கலந்து அங்கு இவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு அதன் விளைவாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என்பதாக எங்கும் செய்தி இல்லை

எனக்கு மிகவும் ஆச்சிரியம் தரும் விஷயம் எதுவென்றால் இந்தியாவின் தலை நகரான டில்லியில்   அதுவும் படித்த பெண்  பஸ் எந்த பக்கம்  போகிறது என்ற பெயர்பலகை கூட இல்லாத இரவு நேர பஸ்ஸில் அதுவும் 6 ஆண்கள் மட்டும் உள்ள பஸ்ஸில் தன் நண்பருடன் ஏறினார் என்பதுமட்டும் என்னால் நம்ப முடியவில்லை. நம்ப முடிந்தது அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பது மட்டுமே..

எனக்கென்னவோ ஏதோ ஒரு அதிகாரக் கும்பல் சில நிகழ்வுகளை திசை திருப்ப இந்த மாதிரி ஒரு சம்பவத்தை திட்டமிட்டு நிகழ்த்தி ஊடகம் மூலம் பரப்பி இந்த மக்களின் உணர்ச்சியை அதுவும் பெண்ணைகளை உணர்ச்சியில் விளையாடி ஒரு நல்ல நாடகத்தை அரங்கேற்றி உள்ளனரோ என்று நினைக்க தோன்றுகிறது அதற்கு ஒரு பெண் பலியாடாக பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதுதான் இதயத்தை துளைத்தெடுக்கிறது.

இன்று  இந்தியாவின் ஒட்டு மொத்த ஊடகங்களும் இந்த வன்கொடுமையைக் கண்டு அலறுகின்றன. இந்தியாவில் ஒரு வருடத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் தலையே சுற்றும் .கடந்த வருடத்தில்  டெல்லியில் மட்டும் நடந்த கற்பழிப்புகள் 572 இந்த வருடமான 2012 நடந்தவைகள் 600 க்கும் மேற்பட்டவை என செய்திகள் தெரிவிக்கின்றன. இது எல்லாம் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்டவைகள் ஆனால் எத்தனை ஆயிரம் கற்பழிப்புகள் மானத்திற்கு பயந்து வெளியே தெரியாமல் புதைக்கபட்டுள்ளன என்பதை பலரும் அறிவார்கள். இத்தனை பலாத்காரம் நடந்தும் இந்த சம்பவம் மட்டும் மிக அதிகமாக பரப்பபடிகிறதே அது ஏன். பலாத்காரம் செய்யப்பட்ட மற்ற பெண்களும் பெண்கள் தானே. அதற்கு நம்ம அரசியல் வாதிகள் கண்டணம் செய்யாதது ஏனோ??????

இது எனது யூகச் செய்திதான் ஆனால் சுயநலத்திற்காக எதுவும் செய்யத் துணியும் இந்திய திருநாட்டில் எதுவும் நடக்கலாம் என்பதுதான் உண்மை


இறுதியாக  இச்சம்பவம் நடந்திட காரணம் என்ன என்பதை முழுவதும் ஆராய்ந்து.. இந்நிகழ்வுகள் உருவாகும் மூலத்தை கண்டறிந்து. அதன் அடிவேரையும் தேடி பிடுங்கி எறிந்து அதனை அழிக்க வேண்டும். அது இல்லாமல் இந்த  சம்பவத்தில் மட்டும் மாட்டிய அந்த ஆறுபேரை தூக்கு போடுவதிலேயோ.. மரணதண்டனை விதிப்பதிலேயோ எதிர்காலத்தில் இந்நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க முடியாது..

இப்போது இந்தியாவுள்ள அனைவரும் சொல்வது அவர்களை உடனே தூக்கிலிடுங்கள்.. அவர்கள் தூக்கிலிட வேண்டியவர்களே அதில் எனக்கு மாறுபாடான கருத்தில்லை...ஆனால் அவர்களை தூக்கிலிடுவதால் மட்டும் இதற்கு தீர்வுகாணமுடியாது. அதற்கு பதிலாக இவர்களுக்கு தரும் தண்டனைகள் மிகவும் கடுமையாக இருக்க வேண்டும் அந்த தண்டனையை பெறுவதன் மூலம் தவறு செய்தவர்கள் அந்த பெண் பெற்ற வேதனையை உணரவேண்டும் அதன் பின்னே அவர்களை தூக்கில் போட வேண்டும் .அவர்கள் பெரும் தண்டனையை பார்க்கும் எவரும் எதிர்காலத்தில் தவறு செய்ய பயப்படும்படியாக இருக்க வேண்டும். அதன் மூலம்தான் தவறை சிறிதளவு குறைக்க முடியும்.

தூக்கு போடுவதற்கு முன்பு வெறி நாய்கள் போல பெண்களை பலாத்காரம் செய்பவர்களுக்கு எப்படிபட்ட தண்டனை தரவேண்டும் என்பதற்கு சில தண்டனைகள் இங்கே வீடியோ க்ளிப்பாக தந்துள்ளேன்.

எச்சரிக்கைஇருதயப் பலவீனமானவர்கள் இதைப் பார்க்க வேண்டாம். எச்சரிக்கை ...


இந்த தண்டனைகள் மட்டும் குற்றத்தை குறைத்துவிடாது. அதனால் நாம் ஆண் குழந்தைகளை வளர்க்கும் போது பெண்களை மதிக்க பண்பை  கற்று தரவேண்டும். பெண்களின்  ஆடை அலங்கராத்தை குறை கூறுவதற்கு பதிலாக பெண்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை ஆண் குழந்தைகளுக்கு கற்று தர வேண்டும்.

குழந்தைகள் கையில்தான் எதிர்காலம் அதனால் ஆண் பெண் இருவரும் சமம் என்பதை கற்று தர வேண்டும்.  ஆண் பெண் இருவருக்கும் வேறுவேறு திறமைகள் இருந்தாலும் அவர்கள் இருவரும் குடும்பத்தில் சமமே என்பதை மிக தெளிவாக உணர்த்த வேண்டும்.


அதுமட்டுமல்லாமல் மீடியா மூலம் தவறாக சித்தரிக்கபடும் பால் (gender ) குற்றங்களை  படித்து உங்கள் ரத்தம் கொதிக்கலாம் அதற்கான எதிர்ப்பை நாம் இங்கு பதிவு  செய்யலாம் .Radio/TV/Web related complaints can be submitted to the Electronic Media Monitoring Centre.  Complain in the right forums about sexist media . For newspapers/magazines, you can complain to the Press Council of India. Here is a link  from the organization which describes the process in detail.You can also reach out to the National Commission of Women

இந்த சிஸ்டம் நமது நாட்டில் வேலை செய்வதில்லை என்று சொல்வதற்கு பதிலாக ஒரு முறையாவது முயற்சி செய்துபாருங்கள் அதனால் நீங்கள் இழக்க போவது எதுவும் இல்லை , ஆனால் முயற்சியே செய்யாமல் குறை கூறுவதிலும் தவறு செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை மட்டும்தான் என்று சொல்வதிலும் அர்த்தம் இல்லை.


முதலில் நாம் நல்ல பண்புகளை நம் குழந்தைகளுக்கு கற்று தந்து அடுத்த தலைமுறையாவது பெண்களை மதித்து அவர்களை ஒரு போகப் பொருளாக பார்க்காமல் அவர்களை சமமாக பாவிக்க கற்று தரவேண்டும்.


அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்

8 comments :

 1. Intha nikalchiyai thangal kuriyathu pola anaivarumae etho oru padamagavae karuthukindranar inum manathai vethanai adaiya seikirathu thangal intha valaithalathil oru nigalvai kurirunthirkal begam 40 years lady avargal koduthe thandanayai than ivarkaluku koduka vendum .

  ithulirukum video parka manam virumbavilai maaraga intha nigalvu manathin aalam vara sendru pathikindrathu

  indru varai penkaluku pathukapu ilai enbathai matumae uruthiyaga therikirathu.palikalil katayamaga penuku tharkapu kalayaga katru tharapada vendum ihuvum katayapaadamaaka pada vendum

  athu matumilamal pengalai adaka odukamaga valarka vendum endru ninaipavarkal thayavu seithu aan kulanthaiyaum athae pola valarka ninayungal.

  ungal karuthayae amothikirane thola ivarkaludaya thuku thandanai matravarkaluku sirantha paadamagavum ilai payamagavo kandipaga irukathu

  manam valikairthu  Nenju porukuthilai inatha naila kata manitharai ninaithu vitaaal........


  miga koduramana thandanai valanga pada vendum endru manam thudikairathu......  athodu nilamal pongal vidumuraiku naan epdi thola en ooruku selvane...


  PEngalae pongi yelungal ivarkaluku satam kodukum thandanai puakaniyungal.......


  Naam thaan ivarkaluku thandanai tar vendum indru antha pen naalai neengalo naaano en pen pilaya....... ingae entha krishnarum varamatarkal .....naam tan sutu yerika vendum..........

  intha ennam ulavarkal tayavu seithu inaiyungal sutu yerika poraduvome......
  ReplyDelete
 2. நண்பரே! உங்கள் கருத்து மிகவும் நன்று எனது பாராட்டும் கூட..உங்கள் சிந்தனையில் கேள்விகளில் சில மர்மம் கேள்விகள் உள்ளது..ஆண்களுக்கு பெண்ணின் மதிப்பை நாம் கற்று கொடுத்தல் கூட,பெண்களுக்கு அவர்கள் மதிப்பை புரிந்து கொண்டாலே நல்லது...

  ReplyDelete
 3. MEN OF QUALITY RESPECTS WOMEN'S EQUALITY try to teach this to our sons.

  ReplyDelete
 4. பலாத்காரம் செய்யப்பட்ட மற்ற பெண்களும் பெண்கள் தானே. அதற்கு நம்ம அரசியல் வாதிகள் கண்டணம் செய்யாதது ஏனோ????? 2G 3G 4G elam tan papome yosipome...... ithu tevaiya basu engaluku..... unmai thanae ..... nam naatu arasiyalvathikal manikavum tanilnadu politicians

  ReplyDelete
 5. news paperla pathu migavum pathikapatane ungaludaya pathivu mana aaruthalai tharukirathu tholarae but mananimathi......?

  ReplyDelete
 6. ம்ம் ரொம்ப சரியா சொன்னீங்க சகோ. நடந்தது மிகப்பெரிய தவறுதான். இருந்தாலும் அதில் நிறைய சந்தேகங்கள் எனக்கும் எழாமல் இல்லை.டெல்லியில் தொடர்ந்து தூத்துக்குடியிலும் இதுப்போன்ற ஒரு கொடூரம் 13வயது பிஞ்சுக்கு ஏற்பட்டுள்ளாது. எனக்கென்னமோ நம்ம குழந்தைகளை (ஆண், பெண்) வளர்க்கும் முறை சரியில்லையோன்னு தோணுது.

  ReplyDelete
 7. இதைப் பற்றி பதிவுலகம் அதிகம் எழுதாதது ஆச்சர்யம்தான்..அதிகரித்து வரும் பாலியல் வன்முறை வருந்துதற்குரியது.பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் மக்களின் உணர்வுகள் வெடித்துக் கிளம்புகிறது அது இந்த நிகழ்வாக இருக்கிறது என்றுதான் நான் கருதுகிறேன்.இதே சம்பவம் நாட்டின் வேறு பகுதிகளில் நடந்திருந்தால் கவனிக்கப் படாமல் கூடப் போய் இருக்கும்.
  அந்நியன் வருவானா?தண்டனை தருவானா?

  ReplyDelete
 8. பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதும் அவசியம்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog