உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, September 2, 2012

"பிரபல" பதிவாளர்களும் அவர்களுக்கு வரும் பின்னுட்டங்களும் ( உட்குத்து பதிவல்ல உண்மையை சொல்லும் பதிவு )
"பிரபல" பதிவாளர்களும் அவர்களுக்கு  வரும் பின்னுட்டங்களும் ( உட்குத்து பதிவல்ல உண்மையை சொல்லும் பதிவு )

நண்பா, இப்பதான் நான் பதிவு வெளியிட்டு இருக்கிறேன். உடனே பின்னுட்டம் போடுடா,,

ஓகே..இப்பவே முதல் வடை எனக்குதான் என்று போட்டுடுறேன்

டேய்...உன் பின்னுட்டம் வந்துடிச்சுடா .இப்ப பதிவு நல்லா இருக்குன்னு போடுடா

ஒகே நீங்கள் எழுதிய பதிவு மிக அருமையாக இருக்கிறது

டேய் ...இப்ப என் பதிவில் உள்ள ஏதாவது 2 வரியை காப்பி பேஸ்ட் பண்ணி அது பற்றி ஏதாவது எழுதுடா..

ஒகேடா ///...................................// உங்கள் பதிவில் உள்ள இந்த வரிகள் மிக அருமை என் நெஞ்சை திட்டது என்று போட்டுவிட்டேன் போதுமாடா?

போதாதுடா? இன்னும் சில கருத்துக்கள் சொல்லு

டேய் மச்சி இது உன்னோட 100வது பதிவு ஆகையால் அதை சொல்லி கருத்து போடுறேன்

 நீ என் நண்பேன்டா...போடுடா சிக்கிரம் அதைபற்றி

நண்பரே உங்களது நூறாவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்

நன்றிடா இன்னும் இன்னும் வேற ஏதாவது போடுடா...

நண்பரே நீங்கள் 100வது பதிவு இட்டு இப்போ நீங்க பிரபல பதிவாளர் ஆகிவிட்டீர்கள். தொடருங்கள் உங்கள் எழுத்து பணியை நாங்களும் உங்களைத் தொடர்கிறோம்.உங்களால் நம் தமிழ் சமுகம் முன்னேற்ற பாதையில் செல்கிறது.

வேற ஏதாவது ஜடியா இருக்க மக்கா?

ஹூம்ம்ம்ம்  டேய் இப்ப பாரு . 1 என்று போட்டுட்டேன்.

வாவ்.... நீ சூப்பர்டா..நம்ம ராமசாமிக்கு ஒரு போனை போட்டு நான் பதிவு போட்டதை சொல்லி அவனையும் பின்னுட்டம் போட சொல்லுவோம்டா..

டேய் அவங்க நாட்டுல இப்ப காலை மணி 5 தான் ஆகுதாடா

பரவாயில்லை அந்த நாயை எழுப்புடா

ஒகே மச்சி போன்போட்டு சொல்லுறேன் ஆனா ஈவினிங்க் மறக்காம சரக்கு வாங்கி தரணும்டா ஒகேவா

ஒகேடா

ஹலோ ராமசாமியா காலை வணக்கம் நண்பா  உன் தூக்கம் கலைச்சிட்டேனா?

டேய் தூக்கத்தையும் கலைச்சிட்டு இப்படி ஒரு கேள்வியா டேய் நாய் நீ மட்டும் என் கண்ணுல பட்டே கழுதை உதைக்கிறது மாதிரி உதைக்கபோறேன்...சரி கழுதை என்ன வேணும் உனக்கு டா

நம்ம நண்பன் சின்னசாமி இன்று ஒரு பதிவு போட்டுருக்கிறான் அவன் தளம் சென்று ஒரு கருத்து போடுடா

டேய் அவனுக்கு வேற வேலையில்லை எதையாவது காப்பி பேஸ்ட் பண்ணி அவன் பதிவு போல போட்டு இருப்பான் அதுக்கு ஒரு கருத்து வேணும்மா சரியா போச்சுடா

டேய் பாவம்டா அவன்...கொஞ்சம் அலட்டாம போடுடா அப்பதான் எனக்கு ஈவினிங்க் சரக்கு கிடைக்கும்

ஒகே ஒரு நிமிஷம் இருடா மூச்சா போயிட்டுவந்துடுட்டு போடுறேன்

இப்ப ஓகேவா பாரு " வடை போயிடுச்சே.". அந்த நாயி எப்பபாரு வடையை முதலில் எடுத்து போயிடுறது..

மச்சி இன்னொரு பின்னுட்டமும் போடுடா...

சாவுகிராக்கிடா நீங்க..நீங்களும் உங்க பதிவும்....  சரி பதிவுலக சிங்கமே நீங்கள் இட்ட 100வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

ஓகே நன்றிடா நீ இப்ப போய் படுத்து தூங்குடா

டேய் காலங்காத்தால எழுப்பிவிட்டுட்டு இப்ப தூங்குடாவா மவனே நீ மட்டும் கையில கிடைச்சே ...

மச்சி வெளிநாட்டில் உள்ள நம்ம நண்பரும் கருத்து சொல்லிவிட்டார் இப்ப சரக்கு அடிக்க போகலாமா?

மச்சி இரு வேற யாரு ஏதோ சொல்லி இருக்காங்க அது என்னனு பாத்து சொல்லுறேன்.

ஹீ.ஹீ யாரோ ஒரு புது பதிவாளர் போல உங்க பதிவு மிகவும் "சூப்பர்" என்று சொல்லிவிட்டு இன்று என் தளத்தில் பெண்கள் பேய்களும் " என்று பதிவிட்டு இருக்கிறேன் என்று பின்னுட்டம் இட்டு இருக்கிறார்.

டேய் இருடா இன்னொறு பின்னுட்டம் வந்திருக்கு அது என்னன்னு படித்துவிட்டு வருகிறேன்.

உங்கள் பதிவுகளை எங்கள் திரட்டியில் சேர்த்து அதிக ஹிட்டுக்களை பெறுங்கள்.. வலைத்தள முகவரி www.tamiltrashcollection.com

ஆஹா இன்னொரு பின்னுட்டமும் வந்திருக்கு

உங்கள் வலைத்தளத்தை இன்று வலைசாரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் வந்து பார்த்து கருத்து சொல்லிவிட்டு போங்கள் என்று போட்டிருக்கிறார்

அடுத்தாக ஒருத்தர் இன்று எனக்கு கிடைத்த அவார்டை உங்களுக்கு பகிர்ந்து அளித்திருக்கிறேன், அதை எனது பதிவிற்கு வந்து பெற்று கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்மேலும் ஒன்று வந்திருக்கிறதுடா... குறைந்த முதலீட்டில் கோடிஸ்வரானாக ஆக வேண்டுமா விபரங்களுக்கு எங்களுது வலைத்தளத்திற்கு வாருங்கள் முகவரி www.cheating_tamil_people_veryeasy.com

நண்பா அப்படி நீ என்ன பதிவுடா போட்ட இன்று கொஞ்சம் சொல்லடா?

தமிழ் சமுகமும் அதன் சிந்தனைகளும் என்று பதிவிட்டு உள்ளளேன். இது சமுக அவலங்களை எடுத்து உரைக்கும் ஒரு சமுகப்பதிவு ஆகும்


இப்பதாண்டா புரியது உன் பதிவிற்கு வந்த பின்னுட்டங்களை பார்க்கும் போதுதான் தெரியுது பதிவிற்கு ஏற்ற கருத்துக்களையும் சிந்தனைகளையும் வழங்கிய நம் தமிழ் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பது புரிகிறது.

உஷ்,,,, நில்லுடா சில நிமிஷம் நான்  அவர்களுக்கு தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி என்று பதில் பின்னுட்டம் போட்டுவிட்டு  வந்துடுறேன்


சரிடா சிக்கிரம் வாடா அப்பதான் நாம சரக்கு அடிச்சிட்டு நாளைக்கு என்ன பதிவு போடுறது என்று சிந்திக்க முடியும்மடா//


நீ சரியாதாண்டா சொல்லுற இப்படி நாம பதிவு எழுதிதாண்டா நாம் சமுகத்தை மாற்றி உலகின் வல்லரசு நாடாக மாற்ற முடியும்

மக்களே வந்ததுதான் வந்தீட்டிங்க இப்ப உங்களுக்கு எப்படி கமெண்ட் போடணும் என்று தெரிஞ்சு இருக்கும் அதனால மறக்காமா பின்னுட்டம் இட்டு செல்லுங்கள்

போன என் பதிவை படித்துவிட்டு என் வலைத்தளம் பற்றிய லிங்கை மற்றவர்களுக்கு அனுப்பி இருப்பிங்க என்று நினைக்கிறேன் அதனால சாமி உங்களை கண் குத்துற சம்பவத்தில் இருந்து தப்பித்து இன்று என் பதிவை உங்களால் படிக்க முடிகிறது..

அதனால் இன்று இன்னொரு எச்சரிக்கையை நீங்கள் என் நண்பர்களனதால் அதை உங்களுக்கு தெரிவிப்பது என் கடமை. இந்த பதிவை படித்தவர்கள் மறக்காமல் பின்னுட்டம் போடுங்கள் இல்லையென்றால் நீங்கள் இரத்த வாந்தி எடுப்பிர்கள் என்று இந்த சமுகப் பதிவு மூலம் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.ஹீஹீ....

அப்ப வரட்டா மக்களே ...

நான் குடும்பத்துடன்  பாஸ்டன் நகருக்கும் அதற்கு அருகில் உள்ள சிறு நகரத்திற்கும் சுற்றுலா சென்றதால் பல பதிவுகளை படிக்க முடியவில்லை அதே நேரத்தில் என்னால் கமெண்ட்ஸ்களையும் தர முடியவில்லை. இன்னும் இரண்டு தினங்களுக்கு அப்புறம் எல்லா வலைதளங்களுக்கு சுற்றுலா சென்று எனது கருத்தை தெரிவிக்கின்றேன்

உங்களின் தொடர் ஆதரவிற்கு எனது நன்றிகள்

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்


16 comments :

 1. நான் இது வரை ரத்த வாந்தியே எடுத்ததில்லை. அந்தஃ டெக்னிக்கைப் பற்றி ஒரு பதிவு போடவும்.

  ReplyDelete
  Replies
  1. உங்க நல்ல மனசுக்கு அப்படியேல்லாம் நடக்காது சார்

   Delete
 2. அவன் அவன் அன்னாடம் வயித்துப் புழைப்புக்கே வழியில்லாம அல்லாடுறான். இவனுங்கலாம் ! இப்படிக் கருத்துச் சொல்லிக்கினு அலையுறானுங்க ...

  ReplyDelete
 3. நான் எப்போதுமே தங்கள் பதிவுகளுக்கு
  பின்னூட்டம் இட்டு விடுவதால்
  ஆரோக்கியமாக இருக்கிறேன்
  ஆரோக்கியம் விரும்பும் பதிவர்கள்
  இந்த ரகசியத்தைப் பின்பற்றலாம்
  சுவாரஸ்யமான பதிவு

  ReplyDelete
 4. ஆகா............இப்படி எல்லாம் நடக்குதா?

  ReplyDelete
 5. பார்ரா.....இப்படி எல்லாம வேற இருக்கா...ச்சே இது தெரியாமா இம்புட்டு நாளு வீணா போச்சே

  ReplyDelete
 6. நல்ல பதிவு தோழரே.... நேரம் கிடைத்தால் எனது பதிவுகளுக்கும் வந்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
  http://varikudhirai.blogspot.com
  http://varikudhirai.blogspot.com/2012/08/they-planted-tea-on-hills.html

  ReplyDelete
 7. அடாடா... பிரபல பதிவராகறதுக்கு இப்படில்லாம் வழி இருக்குன்னு தெரியாம இருந்துட்டேனே... கூடிய சீக்கிரம் நானும் ஆயிடுவேன் பிரபல பதிவரா.. நைட் 12 மணிக்கு போஸ்ட்டை போட்டுட்டு என் போன் வந்தா டென்ஷன் ஆகாம எடுத்துரணும். என்ன...? ஹி... ஹி...

  ReplyDelete
 8. பதிவு முழுசும் தமாஷா கீது பா........... ராமசாமின்னு போட்டீங்களே அது பன்னிகுட்டி ராம்சாமியா? அடிப்பேன் உதைப்பேன்னு லாங்குவேஜ் பார்த்தா அவரை மாதிரியே இருக்கே!!!

  ReplyDelete
 9. சிவப்பு கலர்ல எதை பார்த்தாலும் ..எனக்கு மயக்கமே வந்திடும்ம்...
  நானும் பின்னூட்டம் போட்டுட்டேன் ..

  ReplyDelete
 10. ஐ.... உண்மையைக் கூட சொல்லுறீங்களா...?

  ReplyDelete
 11. ஓ... இதுதான் பின்னூட்ட டெக்னிக்கா?

  ReplyDelete
 12. பிரபல பதிவர் ஆவது எப்படி என்று நீங்கள் புத்தகம் போடலாம்!

  ReplyDelete
 13. ஹா ஹா ஹா !!!
  நான்கூட என் நண்பர் மூலமா உங்க வலைப்பதிவிற்கு வந்து பின்னூட்டம் போடுகிறேன், காரணம் நாளைக்கு ரத்தவாந்தி எடுத்து செத்துட கூடாது பாருங்க..:-)))))))))))))))))))

  சும்மா நகைச்சுவைக்கு சொன்னேன், நல்லா எழுதிருக்கீங்க இதோ இப்பவே உங்களை பாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். என் வலைப்பதிவில் VIDEO GIF அனிமேஷன் உருவாக்குவது எப்படி? ன்னு ஒரு பதிவு போட்டிருக்கேன் வந்து பாருங்க..
  http://semmalai.blogspot.com/2012/09/semmalai.blogspot.com.html

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog