Monday, September 24, 2012




படித்ததில் பிடித்தது : வெற்றி உங்கள் அருகில்


சக பதிவாளர் ஆயிஷாபாரூக் அவர்களின் வலைத்தளத்தில் படித்தது. இது எனக்கு மிகவும் பிடித்ததால் அவர் அனுமதியுடன் என் வலைத்தள வாசகர்களும் படித்து மகிழ இந்த கவிதையை அளிக்கிறேன். அனுமதி வழங்கிய ஆயிஷாபாரூக் அவர்களுக்கு எனது நன்றிகள். நல்ல செய்திகள் நாலு பேரைச் சென்று அடைய வேண்டுமென்பதே இந்த பதிவின் நோக்கம் ஆயிஷாபாரூக் அவர்களின் வலைத்தளத்திற்கான முகவரி : http://ayeshafarook.blogspot.com/2012/09/blog-post_23.html

மனமதை திறக்கலாம்



சேர்ந்திடும் நீர்த்துளிகள்
கடலாக மாறாலாம்
அடைந்திடும் தோல்விகள்
அனுபவ பாடமாகலாம்
துணிந்திடும் இதயம்
பயத்தை விரட்டலாம்

உடைந்த மனம்
எதையும் தாங்கலாம்
அடைந்த அவமானங்கள்
சகிப்பை வளர்க்கலாம்
காணுற்ற அலட்சியங்கள்
பொறுமையை அளிக்கலாம்

தீயக் குணங்கள்
தீமையை தரலாம்
பேராசை மனம்
பேரழிவை வழங்கலாம்
வஞ்சக  எண்ணம்
அமைதியை பறிக்கலாம்

போராடும் குணம்
பலவற்றை வெல்லலாம்
தோல்விகளின் வரவு
வெற்றிகளை பெருக்கலாம்
வாழ்வின் பயணம்
உண்மையை உணர்த்தலாம்

சேர்த்திடும் சேமிப்பு
வறுமையை விரட்டலாம்
பயின்றிடும் கல்வி
காலத்திற்கும் உதவலாம்
நல்ல எண்ணங்கள்
நல்வாழ்வை கொடுக்கலாம்

எனது வரிகள்
மனமதை திறக்கலாம்
உணர்த்திடும் பொருள்
அறிவினை உயர்த்தலாம்
விரைந்திடும் செயல்
புதியப்பாதையை காட்டலாம்


இன்றைய இளைய சமுதாயம் தோல்வியை தாங்கும் மனதை இழந்து வருகிறது, தாங்கள் செய்யும் செயலில் தோல்வி அடைந்தால் உடனே அதிலிருந்து பின்வாங்கின்றனர். முதல் முயற்சியால் வெற்றியை கண்டவர் வெகுச்சிலரே, அடுத்தடுத்த முயற்சியில் வெற்றியை கண்டவர்கள் இங்குப்பல கோடியுண்டு, தோல்வியால் முயற்சியிலிருந்து பின்வாங்கி விதியை குறைகூறுபவர் மூடரே! துவள வேண்டாம் அன்பர்களே! வெற்றி உங்கள் அருகில்!!!

அன்புடன்

========================

மனதுக்கு நம்பிக்கையை தரும் வார்த்தைகள் ஆயிஷாபாரூக்  அவர்களின் இதயத்தில் இருந்து இணையம் வழியாக உங்கள் இதயத்திற்கு. இதை படித்து உங்கள் வீட்டில் உள்ள இளைஞர்களுக்கு படிக்க கொடுங்கள்

நன்றி


அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் படித்ததை ரசித்ததை உங்களின் பார்வைக்காக வழங்குகிறேன்

6 comments:

  1. Thanks to share this dear friend...

    ReplyDelete
  2. //போராடும் குணம்
    பலவற்றை வெல்லலாம்
    தோல்விகளின் வரவு
    வெற்றிகளை பெருக்கலாம்
    வாழ்வின் பயணம்
    உண்மையை உணர்த்தலாம்//
    இந்த வரிகள் மிகவும் அருமையாக உள்ளது...உங்கள் பகிர்வுக்கு நன்றி....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

    ReplyDelete
  3. சூப்பர் கவிதை.. நன்றி

    ReplyDelete
  4. நானும் படித்து ரசித்த அருமையான பதிவு
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  5. அருமைங்க. ஆயிஷா பாரூக் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும். படிக்கத் தவறிய என்போன்ற பலருக்கும் பயன்படும் விதமாக தேடித்தந்த உங்களுக்கும் அதுவே!

    ReplyDelete
  6. நல்ல பகிர்வை பலரும் அறிவதற்கு மீண்டும் பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.