Wednesday, September 12, 2012



ஆண்களின் முன்னேற்றம் தடைபெற காரணம் பெண்களா?


குழந்தைகளை பார்த்தால் எப்போதும் சந்தோஷமாகவும் கலகலப்பாகவும்  இருப்பார்கள் காரணம் துன்பம் தருகின்ற நிகழ்வுகளையெல்லாம் மனதில் வைத்திருக்காமல் சந்தோஷமான நிகழ்வுகளையும் அனுபவங்களையும் மட்டும் மீண்டும் மீண்டும் நினைத்தும் சொல்லியும் மகிழ்வார்கள். ஆனால் காதல் உணர்வு கொண்ட இளைஞர்களை பார்த்தால் எங்காவது ஒரு இடத்தில் உட்கார்ந்து எதையாவது சிந்தித்துக் கொண்டு விட்டத்தை பார்த்து கொண்டு  அது படுத்துகிற பாட்டில் அப்படியே மனது உருகி போய் விடுகிறார்கள்.


ஒரு பெண்ணால் ஏற்படுகின்ற உணர்வுகள் அவனை உற்சாகமூட்டி வாழ்க்கையை முன்னேற்றிக் கொண்டிருக்கிறது என்றால் அவன் வாழ தெரிந்தவன் ஆனால்   ஒவ்வொரு நொடியும்  இடைவெளி இல்லாமல் காதலித்தவள் பற்றிய  சிந்தனையிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள்   தடைபட்டுக் கொண்டிருக்கின்றன

அதனால்தான் கல்வி கற்கும் போது காதல் உணர்வுகள் மனதில் தோன்றினாலும் மனதை அடக்கி முன்னேற வேண்டும் இந்த இளம் வயதில் வரும் காதல் உடற்கவர்சியினால் வரும் காதல் இது ஒரு சுறாவளி போன்றது அதில் மாட்டாமல் வருபவர்கள் மட்டும்தான் மிக அதிக முன்னேற்றத்தை காண்கிறார்கள். இதில் சில பேர் மட்டும் விதிவிலக்கு சுறாவளியில் மாட்டினாலும் தப்பித்து வெளிவந்து விடுவார்கள்   இப்படி இளம் வயதில் வரும் காதல்கள் அநேகமாக தோல்வியில் முடிந்துவிடுகிறது அதுமட்டுமல்லாமல் எதிர்கால முன்னேற்றத்தையும் படுகுழியில் தள்ளிவிடுகிறது.இப்படி இளைஞனை  உருக்கிக் கொண்டிருக்கும் பெண் உணர்வுகள் தெய்வீகமான உணர்வுகள் என்று நினைத்து மனதை அலைபாயவிடாதீர்கள்.

காதல் உணர்வு என்பது இளம் வயதில் மட்டும் வருவதல்ல அது எல்லா வயதிலும் வரும் அதனால் தான் நாம்  ஒரு நல்ல முன்னேற்றத்தை அடைந்த பின் காதல் உணர்வுக்கு நம் மனதில் இடம் கொடுத்தால் அது தோல்வி அடையாமல் வாழ்வின் இறுதிவரை தொடந்து வந்து சந்தோஷத்தை கொடுத்து மலர் போல மணம்வீசி உங்கள் வாழ்க்கையை மற்றுமல்ல உங்களைச் சுற்றியுள்ள அனைவரின் வாழ்க்கையையும் மலரச் செய்வீர்கள்

இப்படி நீங்கள் செய்தால் எந்த பெண்ணாலும் உங்கள் முன்னேற்றத்தை தடை செய்யமுடியாது அதே நேரத்தில் பெண்களை நாம் குறை சொல்லவும் வேண்டியிருக்காது. அப்படி நாம் செய்யாமல் இருந்தால் பித்துபிடித்து அலையதான் நேரிடும். இது போன்ற பித்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஒரு சமுதாயத்தின் ஏன் ஒரு நாட்டின் முன்னேற்றம்கூட  பின்தங்கிவிடும். இப்படி காதல் பித்து பிடித்தவர்களால் ஆக்கப்பூர்வமான எந்த செயலையும் செய்ய முடியாது .


இளைஞரின்  வாழ்க்கை என்பது உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் உட்பட்ட வாழ்க்கையாகும் இந்த வயதில் நாம்  ஆசாபாசங்களையும் சலனங்களையும் தவிர்த்துவிட்டு வாழ்வது என்பது சாத்தியமில்லை ஆனால் அவைகள் பொங்கி வழிய விடாமல் ஒரே சீராக வைத்திருக்கும் போதுதான் நம்  வாழ்க்கையும் சீராக ஒழுங்கு முறையுடன் இயங்கி நாம் நினைத்தபடி வெற்றி பெற முடியும்.

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் மனதில் தோன்றிய எண்ணங்கள் உங்கள் பார்வைக்காக

9 comments:

  1. இளைஞர்களுக்கு தேவையான கட்டுரை.. எத்தனை இளைஞர்கள் வாழ்வைப் பற்றி சிந்திகிரர்கள் என்பது இக்காலத்தில் கேள்விக் குறியாகவே உள்ளது

    ReplyDelete
  2. இது உண்மை......மிகவும் நல்ல கருத்து...



    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. இளவயதில் காதல் உணர்வுகளை கட்டுப்படுத்துவது சிறப்பான விசயம்! வெற்றிக்கு வித்திடும் விசயம்! இதை தெளிவாக சொன்னமைக்கு மிக்க நன்றி!

    இன்று என் தளத்தில்
    ஓல்டு ஜோக்ஸ் 2
    http://thalirssb.blogspot.in/2012/09/2.html


    ReplyDelete
  4. வேணுமின்னே எந்த எலியும் பொறிக்குள்ள போயி தலையை விடுறதில்லீங்கண்ணா............... தானா நடக்கிறது........ மாட்டிகிடதுக்கப்புரம்தான் முழிக்கிறதா இருக்குது. ஆனா கொஞ்சம் பல்லை கடிச்சுகிட்ட்டா..... ரெண்டு வருஷத்துக்கப்புறம்........... அட இதுக்காடா இப்படி அலைஞ்சோம்.......

    ReplyDelete
    Replies
    1. பட்டபிறகுதான் நமக்கு எல்லாம் புரிகிறது நண்பரே

      Delete
  5. கூப்பிட்டா மலர்தேடி வண்டு வரும்?
    தேதி குறிப்பிட்டா கொய்யாவை கிளிகள் கொத்தும்?
    சிந்தித்தால் வருகின்ற கவிதை போலே
    கண்கள் சந்தித்தால் வரவேண்டும் உண்மைக்காதல்...........!!

    ReplyDelete
  6. நல்ல கருத்துக்கள்... அந்த கத்தி மேல் நடக்கும் காலத்தை கடந்து விட்டால் எல்லாமே நலம்...

    இப்போது நடைபெறுவது : பெண்களின் முன்னேற்றம் தடைபெற காரணம் ஆண்களா...?

    ReplyDelete
  7. ஒவ்வொரு ஆணும் பெண்ணின் முதுகில் ஏறி தானே
    முன்னேறுகிறார்கள்.... உங்களுக்குத் தெரியாதா “உண்மைகள்“

    ReplyDelete
  8. இங்கு வந்து பதிவிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். சில சமயங்களில் நேரமில்லாததால் தனித்தனியாக் நன்றி சொல்ல இயலவில்லை அதற்காக மன்னிக்கவும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.