Wednesday, September 5, 2012


           

 பள்ளிக்கு செல்லும் அந்த முதல் நாள் அனுபவங்கள்

இன்று நீயூஜெர்ஸியில் உள்ள அநேக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு அப்புறம் இன்று திறக்கின்றன. அப்பா அம்மாக்களுக்கு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சந்தோஷம் .குழந்தைகளை வீட்டில் இருந்து பார்த்து வந்த பெண்களுக்கு அப்பாடி ஒரு வழியாக பள்ளிகள் திறக்கின்றன என சந்தோஷம். முதன் முதலாக பள்ளிக்கு போகப் போகிறோம் என்று சிறு குழ்ந்தைகளுக்கு சந்தோஷமாக இருந்தாலும்  அவர்களுக்கு முதல் நாள் கொஞ்சம் நெர்வஷாக இருப்பார்கள் .ஏற்கனவே பள்ளி சென்ற குழந்தைகளுக்கு தமது பழைய நண்பர்களை பார்க்க போவதில் சந்தோஷம் அதே நேரத்தில் சில குழந்தைகள் பள்ளிகள் திறந்துவிட்டால் ஹோம் வொர்க் எல்லாம் செய்யவேண்டும் என்று கவலைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

இப்படி முதல் நாள் பள்ளி திறப்பதை ஒட்டி எனக்கு வந்த நகைச்சுவை படங்களையும் நான் படித்த நகைச்சுவைகளையும் இன்று உங்கள் பார்வைக்காக வைக்கிறேன்.








பள்ளியில் இருந்து வந்த குழந்தை அம்மாவிடம்  எங்களுக்கு புதிய டீச்சர் வேண்டும் என்று  சொல்லியது
அம்மாவும் எதற்கு என்று கேட்டார்
இன்று வந்த டீச்சருக்கு எதுவுமே தெரியவில்லை எங்களிடமே கேள்விகள் கேட்டு கொண்டே இருக்கிறார் ஒன்றுக்கு கூட பதில் தெரியாமல் உனக்கு தெரியுமா உனக்கு தெரியுமா என்று ஒவ்வொருவரிடமும் கேட்டு கொண்டே இருக்கிறாரம்மா


அம்மா எங்க வரலாற்று ஆசிரியர் சரியான லூசும்மா?
டேய் அப்படி எல்லாம் சொல்லக்கூடாதுடா..
அப்புறம் என்னம்மா நான் பிறக்குறத்துக்கு முன்னாடி நடந்த நிகழ்ச்சியை பற்றி என்னிடம் கேள்வி கேட்டுட்டே இருக்காரும்மா.


கணக்கு டீச்சர் மதுரைத்தமிழனிடம் டேய்  8 டோட 199 யை கூட்டி அதை 73 ஆல் பெருக்கி வரும் விடையை 2 ஆல் வகுத்தால் என்ன வரும்டா?

மதுரைத்தமிழன் : தப்பான ஆன்ஸ்ர்தான் வரும் டீச்சர் (காரணம் நாங்க 7C ஸ்டுடென்ஸ் )


டீச்சர் மதுரைத்தமிழனிடம் டேய் கொஞ்சம் பாடத்தை கவனிடா
மதுரைத்தமிழன் டீச்சரிடம்  நான் கொஞ்சமாதான் பாடத்தை கவனிக்கிறேன். மீதி கவனமெல்லாம் பக்கத்து சீட்டில் இருக்கும் அழக்கான பெண்மேல்தான் இருக்குது டீச்சர்

அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைதமிழன்

7 comments:

  1. நினைவு கூர்ந்து எழுதியதற்கு நன்றி...

    ஜோக்ஸ் + படங்கள் : ஹா... ஹா...

    ReplyDelete
  2. நியூஜெர்சியில் உள்ள பள்ளிக்கூடங்களை அங்குள்ள பாடத்திட்டங்களைப் பற்றி எழுதலாமே?

    ReplyDelete
  3. டீச்சர் மதுரைத்தமிழனிடம்...டேய் ! ”தெரியும்” - இதுக்கு எதிர்பதமாவது சொல்லுடா ??

    தெரியல டீச்சர்....

    ReplyDelete
  4. டீச்சர் பாவம் .....

    ReplyDelete
  5. என்னுடைய சிறுவயது நிகழ்ச்சிகளை எல்லாம் ஞாபகத்திற்கு கொண்டு வரவழித்து விட்டீர்கள் உண்மைகள்.
    டீச்சருக்கு ஒன்றுமே தெரிவில்லை ஜோக் நன்றாக இருக்கிறது.

    (மதுரை தமிழன் “உண்மைகள்“ சரியான பதில் தான் கொடுத்திருக்கிறார்)

    ReplyDelete
  6. சிறு வயது சேட்டைகளையும், செயல்களையும் கண்முன்னே கொண்டுவந்து விட்டீர்கள்.அருமையான பதிவு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.