Monday, September 24, 2012








அழியப்போகும் இந்திய சிறு வணிகமும்....அடிமையாக போகும் படித்த புத்திசாலிகளும்


வெள்ளையனே வெளியேறு என்ற பல போராட்டத்தின் மூலம் காந்தி நமக்கு அடிமை விலங்கை உடைத்து சுதந்திரத்தை காற்றை சுவாசிக்க செய்தார். ஆனால் அதே காந்தி பெயரை சொல்லி ஆளும் காங்கிரஸ் மீண்டும் வெள்ளையனுக்கு அடிமையாக்க இந்திய சட்டத்துடனும் உலகத்தில் படித்த  பிரதமர் என்று சொல்லப்படும்  புத்திசாலிஅடிமையான  மன்மோகன் சிங் என்பவரின் முழு ஒத்துழைப்போடும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதனுடைய முயற்சியாகதான்  சில்லைறை வணிகத்தில் அந்நிய முதலீடுகள் அனுமதி.



இதனை பல எதிர்கட்சிகளும் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் பலவும் எதிர்த்து வருகின்றன. அதன் விளைவாக ஆளுங்கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த மம்தா பானர்ஜி மட்டும் மிக தைரியமாகவும் கடுமையாகவும் எதிர்த்து இதுவரை தான் அளித்து வந்த ஆதரவையும் விளக்கியுள்ளார். ஆனால் அதை அவர் வருங்கால தேர்தலுக்காக அடிக்கும்   ஸ்டண்டு என்று  அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கும் பச்சோந்தி கும்பல்  பேசி அந்நிய மூதலீட்டிற்கான எதிர்ப்பை குறைக்க சதி செய்து வருகின்றன.


மம்தா பானர்ஜி  இதை தேர்தலுக்கு அடிக்கும் ஸ்டண்டாக எடுத்துகொள்கிறார் என்பது உண்மையாக இருந்தாலும் கூட இந்த அந்நிய மூதலீட்டினால் ஏற்படுப் போகும் விளைவுகளை நாம் மறந்து விடக் கூடாது. இது  கேன்சரை விட மிக கொடுமையானது. இதையெல்லாம் எதற்காக சொல்லுகிறேன் என்றால் ஒரு நாள் பந்த் நடத்திவிட்டு நாம் எதிர்ப்பை தெரிவித்துவிட்டோம் அதனால் அரசாங்கம் இதை அமுல் படுத்தாது என்று கருதி இருந்துவிட வேண்டாம் அந்த சட்டத்தை வாபஸ்வாங்கும் வரை தொடர் போராட்டம் நடத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் சில்லறை வியாபரிகளும் மற்றும் படித்த புத்திசாலி மக்களும் அந்த அந்நிய முதலாளிகளுக்கு அடிமையாகவும் ஆகிவிடுவீர்கள். நீங்கள் உண்பதில் இருந்தும் உடுத்தி தூங்கவது வரை எல்லா செயல்களுக்கும் அந்த முதலாளியின் சிந்தனைப்படிதான் நீங்கள் செயலாற்ற மூடியும்.  நாம் என்ன   செய்ய வேண்டுமென்பதையெல்லாம்  ஒரு சில நிறுவனங்களே நிர்ணயிக்கும்...


அந்நிய மூதலீடுக்கு ஆதரவு தெரிவிப்பர்கள்  வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் வந்தால்  எந்த இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிடம் நேரடியாக நியாமான விலைக்கு வாங்கி மக்களுக்கு மிக குறைந்த விலைக்கு விற்பார்கள் என்று சொல்லிவருகிறார்கள், இந்த  உணவுப் பொருட்களை மட்டும் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் விற்பனைகள் செய்தால் அவர்கள் சொல்வதில் மிக மிகச் சிறிய அளவில் உண்மை உண்டு . ஆனால் அவர்கள் நம் நாட்டிற்கு வருவது சமுக சேவை செய்ய அல்ல என்பது யாருக்கும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


அவர்களின் நோக்கம் லாபம் சம்பாதிப்பது மட்டும்தான் அதனால் உணவுப் பொருட்களை மட்டுமல்ல எல்லாப் பொருட்களையும் விற்கச் செய்வாராகள். அதனால் தாங்கள் அதிகம் லாபமடைய பொருட்களை எங்கு மிக மலிவாக கிடைக்கிறதோ அங்கே வாங்க முயற்சி செய்வார்கள்.அதனால் அவர்கள் உள்நாட்டு மார்க்கெட்டை விட்டு சைனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வார்கள். அதனால் உள்நாட்டில் உற்பத்தி செய்படும் பொருட்களின் விற்பனை குறைந்து படிப்படியாக அதனை உற்பத்தி செய்யும் தொழில்கள் சிரழிந்து மூடப்படும்..இப்படிபட்ட முதலாளிகளின் பேராசையால்தான் அமெரிக்க பொருளாதாரம் ஆடிக்கிடக்கின்றது. அமெரிக்க அரசாங்கம் பொருளாதாரத்தை நிலை நிறுத்த எந்த அளவு நிதி உதவியளித்தாலும் உற்பத்தி என்பது உள்நாட்டில் நடக்க வில்லை என்பதால் பொருளாதரத்தில் சுழற்சி ஏற்பட முடியாமல் அந்த நிதி இந்த முதலாளிகளின் பாக்கெட்டுகளில் விழுந்து வெளிநாட்டில்தான் முதலீடாக குவிகின்றது. வால்மார்ட் போன்றவைகளினால் உள்நாட்டில் அழிந்த தொழில்கள் மற்றும் பல ரீடெயில் பிஸினஸ்கள் மற்றும் சிறு தொழில்கள் கணக்கில் அடங்காதவை .அவர்களினால் வேலை வாய்ப்பு பெருகுமா என்று பார்த்தாலும் அது சொல்லக்கூடைய அளவில் இருக்காது. மேலும் அவர்கள் ஏற்படுத்தும் வேலை வாய்ய்ப்பும் சொல்லிக் கொள்ளும் அளவில் வருமானத்தை தரக் கூடிய அளவில் இருக்காது என்பதும் உண்மைதான் இப்படிபட்ட நிறுவனங்கள் தரும் ஊதியம் என்பது அடிமைகளுக்கு தரப்படும் ஊதியத்தை போன்றதுதான்.

அமெரிக்காவில் இன்னும் பல இடங்களில் வால்மார்ட் நுழைவதை தடுக்க  மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதை எதிர்க்க காரணம் என்ன என்பதை அவர்கள் நினைப்பதை இங்கே அப்படியே தந்து இருக்கிறேன்.


http://www.huffingtonpost.com/ellen-snortland/walmart-grocery-stores_b_1885153.html


here are so many reasons for being against Walmart; see what your particular favorite is and take any number of the actions I'm going to list at the bottom of this column.

Job Creation -- Are you in favor of jobs for local people? Me too! There are, however, gullible people who are excited about Walmart opening a Neighborhood Store because Walmart will supposedly be creating local jobs. WRONG!! In fact, Walmart's presence will decrease employment. How? First of all, Walmart refuses to commit to employing local people. That means they will -- and do -- hire anyone they please, no matter where they live. In addition, Walmart's predatory pricing will inevitably destroy competing small local businesses, which means that people will LOSE their jobs when Walmart sinks its claws into the neighborhood.

Anti-blight -- Uninformed people think, "Yeah, there's development happening with a new Walmart store!" While one corner of a blighted area may get upgraded, consider that awful "ghost town" look when small local businesses are forced to shut their doors.

Lower Costs -- When you go for cheaper short-term prices, the long-term effect is just the opposite. A large corporation like Walmart can afford to have ridiculously low prices until it has driven out the competition. When that happens -- as it always does -- then Walmart will raise its prices. Do you love your local Ma and Pa gift store? In Altadena, that's Webster's Fine Stationers. Everyone has their own favorites. Love your local pharmacy where they know your name? You can kiss all that goodbye if Walmart comes in.

Are you against genetically modified organisms? Are you against slave labor and sweatshop conditions overseas? Are you pro-union? If so, you are anti-Walmart, whether you know it or not.

A brilliant way to take a local action that makes a global difference is to take a stand against Walmart, whether you live in Pasadena, Iowa or North Dakota. This is one instance where being a NIMBY can make a difference! (NIMBY means "Not In My Back Yard.")




மக்களே வெளிநாடுகளில் தயாராகும் பொருட்களை வாங்கி அனுபவித்து கொண்டு உங்களது அடையாளங்களையும் கலாச்சாரத்தையும் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் இப்போதே சிந்தித்து போராடவில்லையெனில் உங்களின் வாரிசுகள் அடிமைகளாகும் நாட்கள் வெகு தூரம் இல்லை என்பது  மிக உண்மை. இருக்கும் உரிமைகளை விட்டுவிட்டு அதனை மீண்டும் பெற போராட நேரம் செல்வழிக்காமல் இருக்கும் போதே அதை காப்பாற்ற நேரம் செலவழிப்பதுதான் புத்திசாலிதனம்.


என் மனதில் பட்டதை நான் சொல்லிவிட்டேன்... அதை புரிந்து கொண்டு செயல்படுவது செயல்படாததும் உங்கள் கையில்தான்

அதுவரை

உங்களிடம் விடை பெறுவது

உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்

டிஸ்கி : எனது கிறுக்கல்கள் உங்களுக்கு பிடித்து இருந்தால் மீண்டும் வருமாறு கேட்டு கொள்கிறேன். பிடிக்கவில்லையென்றால் எது பிடிக்கவில்லை என்று சுட்டி காட்டுங்கள் நன்றி

3 comments:

  1. அருமையான பதிவு எப்போதுமே நாம் அடிமை பட்டே இருக்க அரசியல் வாதிகளின் அட்டுயியமும் ஒழிய வேண்டும்

    ReplyDelete
  2. namathu naattil sirutholil kooda lancham kodukkaamal aarambikka mudiyaathu.arasu,arasu pallikal hospital,tholaipesi pokkuvaraththu ellaame avanambikkai chinnangal.elaikal padu ?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.