விற்பனையை அதிகரிக்க விகடன் பொய்ச் செய்தியை பரப்புகிறதா? (படிக்கவே மனம் பதறும் செய்தி)
ஜீவியை திறந்ததும் முதலில் படிப்பது கழுகார் சொல்லும் செய்திகள்தான். அப்படி படித்த போதுதான் மனம் பதறும் செய்தியை படித்தேன். நிச்சயம் இது பரபரப்புக்காகவும் சர்குலேஷனை அதிகரிப்பதற்காகவும் மட்டும்தான் இந்த மாதிரி செய்திகளை விகடனார் வெளியிடுகிறார் என்றே நினைக்கிறேன். இதில் சொன்னபடி தமிழகத்தில் இந்தமாதிரி காட்டுமிராண்டிதனங்கள் நடப்பது இல்லை என்பதுதான் நான் கருதுவது.
இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்து இருந்தால் ஜூவி உண்மையிலேயே துப்பு துலக்கி, உண்மையை வெளிக் கொணர்ந்து அந்த கயவர்களின் முகத்திரையை கிழித்து கடுமையாக தண்டனை வாங்கித்தர வேண்டும்.அதை விகடன் செய்யுமா? அல்லது இப்படி பட்ட ஒரு கற்பனை செய்தியை வதந்தி போல பரப்புவதை தடுத்து நிறுத்துமா? இப்படி ஒரு தவறான செய்தியை பரப்புவதன் மூலம் விசாரணையை மிகவும் தாமதப்படுத்துவதும், திசை திருப்புவதும் நடக்க வாய்ப்பு இருப்பதால் குற்றவாளிகளுக்கு விகடன் உடந்தையாகி போகிறாதா என்று மக்களின் மனதில் கேள்விகள் தோன்றக் கூடிய வாய்ப்புகள் ஏற்படுகின்றன.
விகடனுக்கு எனது வேண்டுகோள் : நீங்கள் தந்த செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதை மேலும் துப்பு துலக்கி உண்மையை வெளியிட வேண்டும் அல்லது இந்த மாதிரி கேவலமான கற்பனை செய்திகளை உங்கள் இதழ்களில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டுமென்பதுதான். இதை விகடன் பொறுப்பு ஆசிரியர் கவனத்தில் கொள்வாரா? விகடன் ஒரு பாரம்பரிய இதழ் என்பதால்தான் இந்த வேண்டுகோள்.. இதை விகடனார் எப்படி எடுத்து கொண்டு எதிர்காலத்தில் எப்படி செயல்படுவார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
நான் ஜூவியில் படித்த செய்தியை இங்கு தருகிறேன்... படித்ததும் நீங்கள் என்ன நினைக்கிறிர்கள் என்பதை மறக்காமல் சொல்லவும்.
''கிரானைட் விசாரணை 'சீஸன் டூ’-வில், அத்து மீறல்களுக்கு ஆதரவு வழங்கிய அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் ஆரம்பமாகின்றன. கிரானைட் குவாரிகளில் புதிய இயந்திரங்களை இயக்கத் தொடங்கும் போதும் புதிதாகக் குவாரிகளுக்குப் பூமி பூஜை போடும் நேரங்களிலும் நரபலி கொடுக்கப்படுவதாக முன்பே ஒரு புகார் படபடத்தது. இது தொடர்பாக 'ராடு’ குமார் என்ற மந்திரவாதியை இப்போது தேடுகிறது போலீஸ். தேனி மாவட்டத்துக்காரரான இந்த 'ராடு’ குமார், கேரளாவில் ஒரு வருடம் தங்கி இருந்து மலையாள மாந்திரீகம் படித்தவராம். இவரைவைத்தே குவாரிகளுக்குள் நரபலி பூஜைகள் நடத்தப்பட்டதாகத் துப்புக் கொடுத்தவர்கள், 'கீழவளவு குவாரியில் சில மாதங்களுக்கு முன், வடநாட்டுப் பையன் ஒருவனை, உயிரோடு நிற்கவைத்து அவனது வலது காலைத் துண்டாக நறுக்கித் துடிக்கக் துடிக்க நரபலி கொடுத்தார்கள். இன்னொரு குவாரியில் புதிதாக வந்திருந்த கிரேனை இயக்குவதற்கு முன், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பையனை கீழே குனிந்து பார்க்கச் சொல்லிவிட்டு, எலுமிச்சம் பழத்தில் ஏற்றுவதுபோல் அவன் மீது கிரேனை ஏற்றிப் பலி கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லும் தகவல்களை நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை!''
''ஐயையோ!''
''கிரானைட் கற்களை வெட்டுவதற்கு மண்ணெண்ணெய் மூலம் எரியும் பவர்ஃபுல் பர்னர்களைப் பயன்படுத்துவார்கள். இந்த பர்னர்களில் இருந்து வரும் தீப்பிழம்புகள் மிகக் கடுமையான வெப்பத்துடன் இருக்கும். கீழவளவு குவாரியில் மண்ணெண்ணெயைத் திருடி விற்றான் என்ற குற்றத்துக்காக ஒரு பையனை அந்த பர்னரை வைத்தே பொசுக்கிக் கொன்றதாகச் சொல்கிறார்கள். 'வடமாநிலங்களில் இருந்து கூலிஆட்களை மாதேஷ் என்ற நபர்தான் அழைத்து வருவார். பெரும்பாலும் இங்கே நரபலி கொடுக்கப்படுவது அவர் அழைத்து வரும் நபர்களைத்தான். 'காரியம் முடிஞ்சதும் ஏதாவது காரணத்தைச் சொல்லி மாதேஷ் மூலமா எல்லாத்தையும் செட்டில் பண்ணிடுவாங்க. சில நேரங்களில், ரோட்டில் மனநிலை சரியில்லாமல் திரியும் அப்பாவிகளையும் குவாரிக்குள் கொண்டுபோய் நரபலி கொடுத்திருக்காங்க’ என்று சொல்லி போலீஸையே பதற வைத்தார்களாம்!''
அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன்
ஒருவருடம் கழித்து படித்தால், கழுகு, குருவி எல்லாமே கற்பனையே...அதே சமயம், முட்டாள் மந்திரவாதி, சாமியார், மதத் தலிவர்கள் பேச்சைக் கேட்டு நரபலி நடநிது கொண்டு தான் இருக்கிறது..
ReplyDeleteஇதில் கொடுமை, ஜனநாயகத்தின் எல்லா தூண்களும் இதை நம்புகிறது....
பரிகாரம் என்ற புடல்னகா தான் காரணம்; ஏழை செய்யும் பரிகாரம் தேங்காய் பணம்...
பணக்காரன் செய்யும் பரிகாரம் மனித உயிர்...
எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்...
நிச்சயம் விகடன் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் .
ReplyDeleteஅடித்த கொள்ளை அனைத்தையும் கேள்விப்பட்டதில் விகடன் செய்தி பற்றி சந்தேகம் ஏற்பட்டால் அவர் 2012 ம் ஆண்டில் வாழும் (அப்)பாவி என்ற முடிவுக்கு வர முடிகிறது
ReplyDelete