Thursday, September 20, 2012





கலைஞரின் போராட்ட காமெடிகள்


டீசல் விலை உயர்வு உட்பட, மத்திய அரசின் மூன்று முக்கிய முடிவுகளை எல்லா கட்சிகளும் எதிர்த்து வருகின்றன. இதில் ஆளுங்கட்சியனரோடு கூட்டணி வைத்த தலைவர்களும் தங்கள்  எதிர்ப்பை தெரிவித்து கொண்டிருக்கின்றனர். அதில் முக்கிய அங்கம் வகித்து வந்த  திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி எதிர்த்து, மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை,வாபஸ் பெற்றார்.


ஒரு பெண் அரசியல்வாதி இப்படி தைரியமான முடிவை எடுக்கும் போது எந்த போராட்டத்திற்கும் அஞ்சாத கலைஞர் அவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் நடந்த பந்தில் தானும் கலந்து கொள்வதாக அறிவித்தார். கலைஞரின் குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருந்த போதிலும் இப்படி ஒரு தைரியமான முடிவை எடுத்த அவரைப் பாராட்ட வேண்டும் என்று கருதி அவரை சந்தித்து பாராட்டி அவருடன் ஒரு மினி பேட்டியை எடுத்து வந்தார் மதுரைத்தமிழன்.

அந்த பேட்டி உங்களின் பார்வைக்காக

மதுரைத்தமிழன் : கலைஞர் அவர்களே இந்த தள்ளாதவயதிலும் நீங்கள் இப்படிபட்ட கடும்போராட்டமான "பந்தில்" நீங்கள் கலந்துகொண்டீர்கள் ஆனால் இந்த தினமலர் நீங்கள் நடத்திய போராட்டத்தை கப்சிப் போராட்டம் என்று அழைத்துள்ளார்களே அதை பற்றி நீங்கள் சொல்வது என்ன?

கலைஞர் : நாம் அஹிம்சை வழியில் நடத்திய போராடத்தை இந்த பார்பனிய ஆதரவு பத்திரிக்கைகள் கிண்டல் செய்கின்றன. நாம் பஸ்ஸை உடைத்தோ பொதுமக்களின் சொத்துகளுக்கோ சேதம் விளைவித்தோ போராட்டம் நடத்தி இருந்தால் இவர்கள் அப்போதும் கிண்டல்தான் செய்து கொண்டிருப்பார்கள். மேலும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே இப்படி அஹிம்சை வழியில் போராட்டம் நடத்தினேன் ஆனால் அந்த அம்மையார் மட்டும் எப்படிபட்ட போராட்டம் நடத்தினார் என்று அவர்கள் ஒன்றும் எழுதவில்லையே. இதில் இருந்து அவர்கள் ஒரு பக்கமாக அதுவும் பார்பனியத்திற்கு ஆதரவாகவும் நமக்கு எதிராகவும் எழுதுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே

மதுரைத்தமிழன் : மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மம்தா பானர்ஜி  ஆதரவை,வாபஸ் பெற்றது போல நீங்களும் வாபஸ் பெறுவீர்களா?

கலைஞர் : வாபஸ் என்பதை ஒரு நொடியில் செய்துவிடலாம் அப்படி செய்தால் அரசாங்கம் கவந்துவிடும் அதன் பின் வரும் தேர்தலால்  நாட்டிற்கு அநாவசியமான செலவு மேலும்  அதன் பின் மதவாதிகளின் ஆட்சி வந்துவிடும்,அப்படி ஒரு மாற்று அரசங்கம் வந்தால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை (  என் காதில் மெதுவாக மக்கள் என்பது என் குடும்ப ஆட்களைத்தான் இதை வெளியே சொல்லிவிடாதே ஒகேவா?)

மதுரைத்தமிழன் : இன்று நடந்த போராட்டத்தினால் நீங்கள் என்ன சாதீத்தீர்கள்?
கலைஞர் : நாங்கள் மன்மோகன்சிங்க் அரசாங்கம் செய்வதெல்லாம அப்படியே கண்மூடி ஆதரிப்பதில்லை என்று பொதுமக்களுக்கு தெரியஸ் செய்தோம்.

மதுரைத்தமிழன் : உங்கள் போரட்டத்தினால மத்திய அரசு தங்களது கொள்கையை மாற்றி கொள்ளும் என எதிர்பார்க்கிரீர்களா?
கலைஞர்: நிச்சயம் மத்திய அரசாங்கம் என எதிர்ப்பை கவனத்தில் எடுத்து கொள்ளும் மேலும் இது பற்றி விரிவாக மன்மோகன் சிங்க்கு நான் கடிதம் தமிழில் எழுதப்போகிறேன். அதை அவர் படித்த பின் அவர் கொள்கையை மாற்றிக் கொள்வார் என நம்புக்கிறேன்.

மதுரைத்தமிழன் ; அவருக்கு நீங்கள் தமிழில் எழுதினால் புரிந்து கொள்வாரா?

கலைஞர்  : இங்கே பாரு மதுரைக்கார நான் தொடர்ந்து மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதும் அழகிரியை டெல்லி அனுப்பியதும் இந்த வடநாட்டுக்காரர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கதான் அதன்படி அழகிரியிடம் மன்மோகன் சிங் தமிழ் படித்து கொண்டிருக்கிறார் அதனால் கூடிய சிக்கிரத்தில் அவருக்கும் தமிழ் எழுதபடிக்க தெரியும் அப்போது மன்மோகன்சிங் முதலில் படிப்பது என் கடிதம் தான்.


மதுரைத்தமிழன் ; அப்ப கடிதம் எழுதுவதோடு உங்கள் போராட்டம் முடிந்துவிடுமா என்ன?
கலைஞர் : நான் மக்களுக்காக போராட பிறந்தவன். என் உடம்பில் உயிர் இருக்கும் வரை எனது போராட்டம் தொடர்ந்து இருக்கும்.

மதுரைத்தமிழன் ; ...அப்படியா அப்ப உங்கள் அடுத்த தொடர் போராட்டம் பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா?
கலைஞர் : நான் நடத்திய இந்த பந்துக்கு ஆதரவு போராட்டத்திற்கு இந்த மத்திய அரசாங்கம் செவி கொடுக்கவில்லை என்றால் எனது அடுத்த போராட்டம் மிக கடுமையாக இருக்கும். இதுதான் எனது அடுத்த போராட்டம் அதன் படி மத்திய அரசாங்கம் நமது கருத்துக்கு செவி சாய்க்கும் வரை நான் பேஸ் புக்க்கில் எந்த விசயத்தையும் சேர் செய்ய போவதில்லை. அதற்கும் அரசாங்கம் செவி சாய்க்கவில்லை யென்றால் டிவிட்டரில் நான் எழுதுவதை நிறுத்திவிடுவேன் அதன் பின் தினசரி காலையில் குடிக்கும் காபியை க்டிக்காமல் ஒரு மணி நேரத்திற்கு குடிக்காமல் இருப்பேன் இப்படி பல போராட்டத் தொடர் திட்டம் என்னிடம் உள்ளது( இப்படி எல்லாம நான் போராட்டம் நடத்தி முடிப்பதற்குள் இந்த ஆட்சி முடிந்துவிடும் ஹீ.ஹீ)


மதுரைத்தமிழன் ஐயா உங்களை ஏன் எல்லோரும் சாணக்கியர் என்று அழைப்பதன் அர்த்தம் இப்போது நான் புரிந்து கொண்டேன். நன்றி ஐயா நன்றி


அன்புடன்
உங்கள் அபிமானதிற்குரிய
மதுரைத்தமிழன்

20 Sep 2012

1 comments:

  1. இவரோட உண்மையா போராட்டம் இவர் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு பதவி கிடைக்காத போது மட்டும் தான் நடத்துவார். மத்தபடி வாய்ச்சொல் வீரர் மட்டுமே............

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.