உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, March 5, 2012

தொழில் நுட்ப துறையில் இந்தியர்கள் தான் முன்னோடி என்று உலகுக்கு நிருபித்தார் மன்மோகன்சிங்
தொழில் நுட்ப துறையில் இந்தியர்கள் தான் முன்னோடி என்று உலகுக்கு நிருபித்தார் மன்மோகன்சிங்


அமெரிக்க வந்த மன்மோகன்சிங்கிடம் பேசிய ஒபாமா தொழில் நுட்பத்தில் நாங்கள் தான் முன்னோடி என்பதை நான் உங்களுக்கு நிருபித்து காண்பிக்கிறேன் என்று சொன்ன அவர். அமெரிக்காவில் உள்ள காட்டின் உட்பகுதிக்கு கூட்டி சென்று அவரை அங்கு குழி தோண்ட சொன்னார். நூறடி குழி தோண்டியதும் அவரிடம் நீங்கள் எதையாவது கண்டுபித்தீர்களா என்று மன்மோகன் சிங்கிடம் கேட்டார் ஒபாமா. அதற்கு மன்மோகன் சிங் ஆமாம் நான் ஒரு வயரை கண்டு பிடித்தேன் என்றார்.

அதற்கு ஒபாமா பார்த்திங்களா 200 வருடங்களுக்கு முன்னாள் நாங்கள் டெலிபோன் பயன்படுத்தியுள்ளோம் என்று பெருமை பட்டு கொண்டார்.

இந்தியா வந்த மன்மோகன் சிங் தன் அமைச்சரைவை கூட்டத்தில் இதை சொல்லி வருத்தப்பட்டார் அவர்களும் அதை கேட்டு கூனி குறுகி போய்விட்டனர். இறுதியில் மன்மோகன் சிங் மனக்குமறலுடன் கலைஞருக்கு ஒரு போனை போட்டார். அதை கேட்ட கலைஞர் அவரிடம் மிக ரகசியமாக ஏதோ சொன்னார். அதை கேட்டு அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

போனை வைத்ததும் உடனே ஒபாமாவை இந்தியாவிற்கு வருமாறு அழைத்தார். அதை கேட்டு ஒபாமாவும் இந்தியா வந்தார்
 இந்தியா வந்த ஒபாமாவிடம் பேசிய மன்மோகன்சிங் தொழில் நுட்பத்தில் நாங்கள் தான் உலகுக்கே முன்னோடி என்பதை நான் உங்களுக்கு நிருபித்து காண்பிக்கிறேன் என்று சொன்ன அவர். இந்தியாவில்  உள்ள காட்டின் உட்பகுதிக்கு கூட்டி சென்று அவரை அங்கு குழி தோண்ட சொன்னார். 400 அடி  குழி தோண்டியதும் அவரிடம் நீங்கள் எதையாவது கண்டுபித்தீர்களா என்று ஒபாமாவிடம் கேட்டார் மன்மோகன் சிங். அதற்கு ஒபாமா என்னால் ஒன்றும் கண்டுபிடிக்கமுடியவைல்லை என்று சொன்னார்

அதற்கு மன்மோகன் பார்த்திங்களா 200 வருடங்களுக்கு முன்னாள் நாங்கள் நாங்கள் வயர்லஸ்(WIRELESS) போன் பயன்படுத்தியுள்ளோம் என்று பெருமை பட்டு கொண்டார்.


 பாத்தீங்களா மக்காஸ் நாம் எப்படி எல்லாம் சமாளித்து நம் இந்திய நாட்டின் கவுரவத்தை காப்பாற்றுகிறோம் என்று.

10 comments :

 1. அய்யோ அய்யோ....சமாளிப்புகேசன்

  ReplyDelete
 2. ada daa!

  ippadithaan makkalaiyum
  emaathuraanga!?

  ReplyDelete
 3. குப்புற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டலபா!!

  ReplyDelete
 4. சமாளிப்பதில் திறமைசாலி மன்மோஹன்சிங்கா
  கலைஞர் கருணாநிதியா
  ஒட்டு மொத்த இந்திய அரசியல் வாதிகளா
  இல்லை...........

  ReplyDelete
 5. கேட்ட நகைச்சுவை என்றாலும், புதிய கதாபாத்திரங்கள் அருமையாக பொருந்துகின்றனர்.

  ReplyDelete
 6. மன்மோகன் சிங்கையும், கலைஞரையும் கலாய்ச்சதால் நான் வெளி நடப்பு செய்கிறேன்.

  ReplyDelete
 7. இந்தியா மானத்தை எப்படி காப்பாத்தியிருக்காங்க. அவங்களை போய் குறை சொல்லிக்கிட்டு...,

  ReplyDelete
 8. நம்ம கலைஞர் தாத்தா ஐடியா அல்லவா
  சொல்ல்வா வேணும்
  மிகவும் ரசித்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog