உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, December 16, 2010

நீங்க ஜெயிலுக்கு போக ரெடியா? அப்ப நீங்க விக்கிலீக்ஸ் பற்றி படிங்க எழுதுங்க & கமெண்ட் எழுதுங்க

நீங்க அமெரிக்காவில் வசிக்கிறீர்களா ?அப்ப விக்கிலீக்ஸ் பற்றி படிப்பதும் எழுதுவதும் கமெணட் எழுதுவதும் தப்புங்க அதற்க்காக உங்களுக்கு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.நீங்கள் இந்தியாவில் இருந்தால் என்ன தப்பு வேணுமானாலும் பண்ணலாம் ,மக்கள் தப்பை மறைத்து விடுவார்கள் அவர்களூக்கு பணபலம் இருந்தால் அல்லது மக்கள் கூடிய சிக்கிரம் மறந்து விடுவார்கள். வேணா பாருங்களேன் ஒரு நடிகர் இன்னொரு நடிகையை காதலிகிறார் அல்லது கல்யாணம் செய்து கொள்ளப்போகிறார் அல்லது விவாகரத்து செய்ய போகிறார் என்ற செய்தி அல்லது நித்யானந்தா போன்ற சாமியார்களின் ஒரு வீடியோ க்ளீப் வந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழல் விசயம் அப்படியே அமுங்கி காணாமல் போகிடும்,கூச்சல் போடுகிற எதிர்கட்சிகளூக்கு ஒரு வேண்டு கோள். யார்தாங்க ஊழல் பண்ணல இப்ப அவங்க பண்ணிட்டாங்க வர எலக்ஷ்ன்ல தோற்க்கப் போறங்க அப்புறம் நீங்க ஜெயிக்க போறீங்க அப்புறம் நீங்க என்ன பண்ண போறீங்க? நீங்க என்ன நாட்டுக்கு நல்லதா பண்ணப் போறிங்க? நீங்களும் இதைவிட பெரிசா பண்ணுவிங்க அவ்வளவுதான. இதுக்கு போய் சும்ம கத்தீக்கிட்டு இருக்காதீங்க நடக்கற வேலையை பாருங்க.ச்சே எதையோ சொல்லவந்து எதையோ பேசிக்கிட்டு இருக்கேன்... அமெரிக்காவில் இருக்கும் தமிழர்கள் ஏதுக்கும் இதைப் போய்படிங்க. வீக்கீலீக்ஸ் எல்லாம் நமக்கு எதுக்கு வந்தமா தமிழ் ப்ளாக் படித்தோமா நாலு பேறுக்கு கமெண்ட் போட்டமா + ஓட்டு போட்டமா இல்லை வம்பு இழுத்தமா என்று போய்கிட்டே இருக்கனும். ஒகே வா சரி சொல்லவந்தத சொல்லிர்றேண்.கீழேயுள்ள லிங்கை க்ளிக் பண்ணுங்க எல்லாம் உங்களுக்கு புரியும்.

Have you read, discussed or commented on the Wikileaks scandal? Then prepare for prison, comrade

http://blogs.computerworld.com/17521/espionage_act_makes_felons_of_us_all

7 comments :

 1. ஓ...இந்த கூத்தெல்லாம் வேற நடக்கா...?? அது பத்தி பேச கூடாதுன்னு தான் உங்க ஊரில் சொல்லிருக்காங்க...எங்க ஊரில் இந்நேரம் ஜூலியன் இருக்கவே மாட்டாரு..எப்பவோ என்கவுன்ட்டர் இல் போட்டு தள்ளிருப்பாங்க...:))

  ReplyDelete
 2. தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

  http://tamilthirati.corank.com/

  ReplyDelete
 3. இப்படி எண்கவுண்டருக்கு பயந்துதாங்க நம்ம ஊருப் பக்கமே வரதில்ல்லை எவனையாவது போடுரதுக்கு பதிலா நம்மை போட்டுடிங்கனா... வம்பே வேண்டாண்டா சாமி

  ReplyDelete
 4. இது வேறையா?????

  கொடுமை

  ReplyDelete
 5. இது வேறயா?...

  போராடுவோம் போராடுவோம்...இறுதிவரை போராடுவோம் னு மக்கள்ஸ் கோஷம் எழுப்பலையா?..

  ReplyDelete
 6. உடனே யாராவது தமிழ் பட டைரக்டருங்க இதை சினிமாவா எடுக்கிறேன்னு கேமராவ தூக்கிட்டு கெளம்பிருவாங்க...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog