Tuesday, October 31, 2017

அமலாபாலின் அழகை ஆராதிக்க தெரியாதவர்கள் அவர் மீது வீண்பழி சுமத்தலாம்மா?


#அமலா பால் கார் வாங்க செய்திருக்கிற தப்பை ஆயிரக் கணக்கானவங்க செய்திருக்காங்க. செய்துகிட்டு இருக்காங்க.ஆனால் அமலா பால் மீது மட்டும் வழக்கு

இதில் இருந்து தப்பிக்க லாயரை நம்புவதைவிட மத்திய அரசை பாராட்டிவிட்டு ஹெச்.ராஜாவை சந்தித்தால் எல்லாம் சுமுகமாக முடிந்திடும்.... இந்த அறிவு அந்த புள்ளைக்கு இருக்குமா என்று தெரியவில்லையே.. இதை என் சார்பாக அவரிடம் யாரவது தெரிவித்துவிடுங்களேன்.


இந்தியாவின் வரி விதிப்பின் கொள்கை வித்தியாசமாக இருக்கு. காரை வாங்கும் இடத்தில் என்ன வரியோ அந்த வரியைதானே வசூலிக்க வேண்டும் அது இல்லாமல் காரை எங்கே ரிஜிஸ்டர் பண்ணுகிறமோ அந்த  இடத்தின் வரியை செலுத்த சொல்லுகிறார்கள். நல்ல வேளை பாண்டிச்ச்சேரில் சரக்கு சாப்பிடும் மற்ற மாநிலத்தார்கள் அவரவர் மாநில வரியைத்தான் கட்டணும் என்று சட்டம் போடவில்லை.  


சரி எதிர்காலத்தில் நீங்கள் இப்படி ஒரு காரை வாங்கி வரியை சேமிக்க வேண்டுமானல் பாண்டிச்சேரியில் ஒரு வீட்டை உங்கள் பெயரிலே  வாடகைக்கு ஒரு மாதம் முன்பே எடுத்துவிட்டு அதன் பின் அந்த வீட்டை ஆதாரமாக வைத்து காரை வாங்கிவிடுங்கள் என்ன வீட்டுவாடகை ஒரு 10000 ஆயிரமாக இருக்கும் ஆனால் அதனால் நாம் சேமிப்பது பல லட்சங்கள்..


இந்த மாதிரி வீடு வாங்குபவர்களுக்கு என்றே கார் டீலர்கள் சிறிய வீட்டை கட்டி வாடகைக்கு விடலாம். அதனால் அவர்களுக்கும் வருமானம் கிடைக்கும் ..

சரி அமலாபாலிற்கு இப்படி செய்யலாம் என்று சொன்ன அந்த அறிவாளி யார் அவரைத்தான் முதலில் உள்ளே பிடிச்சு போடனும். அப்படி ஐடியா சொல்லமல் இருந்திருந்தால் ஒழுங்கான வரி செலுத்தி இருப்பாரே. குற்றம் செய்பவரை அதை தூண்டிவிடுபவருக்குதானே தண்டனை தரவேண்டும்

டிஸ்கி : அமலாபால் உன்னை வரிக்கா டார்ச்சர் பண்ணினால் நாட்டைவிட்டு வெளியேறி இந்த மைச்சான் இருக்கிற ஊருக்கு வந்திடும்மா



கொசுறு:

என்னம்மோ ரஷ்யன் தமிழ்நாட்டுல வந்து பிச்சை எடுப்பதை பேசுறீங்களே. இங்கே அமெரிக்காவ்ல் தமிழன் வந்து பிச்சை எடுப்பதை யாரும் படம் எடுத்து போடமாட்டுறீங்க... உங்ளுக்கு தமிழன் என்றாலே இளக்காரமாக ஆகி போச்சு (அமெரிக்காவில் தமிழன் பிச்சை எடுக்கிறானா நம்பமுடியவில்லை என்பவர்களுக்கு அந்த பிச்சைகாரன் நாந்தானப்பா இந்த ஆதாரம் போதுமா?)


அன்புடன்
மதுரைதமிழன்

கடவுளே அதிரா மற்றும் ஏஞ்சல் கண்ணுல இந்த பதிவு படாதவாறு பார்த்து கொள்ளப்பா? இல்லைன்னா அமலாபால் அழகை பார்த்து தேம்ஸ் நதியில் இரண்டு பேரும் குதிச்சுறுவாங்க
31 Oct 2017

16 comments:

  1. தும்பை வி்ட்டுட்டு வால பிடிக்கிறவங்கதானே அதிகாரிங்க....

    ReplyDelete
  2. யாரங்கே போலீஸ் :) சிபிஐ fbi raw எல்லாரும் இங்கே பாருங்க ஒருத்தர் அமலா பாலுக்கு சப்போர்ட் செய்றார் இவர் தான முதல் குற்றவாளி :)

    இன்னும் என்ன செய்றீங்க முதல் இவரை பிடிங்க

    அவரே ஓத்துக்கிட்டார் அமலா பாலுக்கு இவர் மச்சானாம் :)

    ReplyDelete
  3. உண்மையில் நீங்க தான் உங்களுக்கு எதிரி :)
    பதிவை வாசிச்சிட்டே வரும்போது அமலாபாலுக்கு சப்போர்ட்டா நிறையா பாயிண்ட்ஸ் எடுத்துகிட்டே வந்தேன் எழுத :) அந்த டிஸ்கி பின்குறிப்பு எல்லாத்தையும் மாற்றிடுச்சி :)

    ReplyDelete
  4. அமலா பால் மட்டும் இல்லை, இப்படி செய்தவர்கள் யார் யார் என்று விசாரிக்க கிரண் பேடி உத்தரவிட்டிருக்கிறாராம். அமலா பாலுக்காக மட்டும் நீங்கள் கவலைப்படுகிறீர்களா!!! இந்தியர்கள் அனைவரும் வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டிருக்க, இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பார்த்த அந்த ரஷ்ய இளைஞரைப் பாராட்ட வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. வேலைவாய்ப்பு ஹா ஹா சூப்பரு

      Delete
    2. என்ன... ஸ்ரீராம்... ஏதேனும் உள்குத்து இருக்கா? இருந்தாலும், 'இந்திய வேலைவாய்ப்பு' - சூப்பர்.

      Delete
  5. இன்றிரவே அமலாபாலுடன் கலந்து ஆலோசிக்கலாம் என்று இருக்கிறேன்.

    ஆனால் செல்பேசி எண் இல்லையே...

    ReplyDelete
  6. அஞ்சு... சிஸ்டருக்கு, பிரதர் சப்போர்ட் பண்ணுவது ஒன்றும் புதுசில்லையே....:).. ட்றுத் நீங்களாவது போராட்டம் நடத்தி உங்கட சிஸ்.. அமலாவைக் காப்பாத்த என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
    எனக்கு பீவர் வந்தமாதிரி ஒரு பீலிங்கா இருக்கு அதனால ஓவரா இங்கு பேச முடியல்ல:)..

    ReplyDelete
    Replies
    1. அதிரா நீங்கள் நிஜமாகவே அப்பாவிதான்னு ப்ரூவ் பண்ணிவிட்டீர்கள்!!! மதுரையிடம் அமலாபாலை ஸிஸ்ட்ர் என்று சொல்லலாமோ!!!!!

      Delete
    2. அப்புறம் மதுரை தமிழன் வடிவேலு ஸ்டைலில் அழப் போகிறார். அமலாபால் என் ஸிஸ்டர்னு அதிரா சொல்லிட்டாங்கனு!!

      Delete
  7. அஞ்சு, அதிரா போல நினைச்சு :)....அமலாபாலுடன் தனகிட்டீங்க:).. அவ விடுவாவோ:)..எக்ஸ்பிரெஸ் பிளேனில வந்து கொண்டிருக்கிறா.. ஓடிப்போய்க் கராஜ் டோர் பின்னால ஹைட் பண்ணுங்கோ:)...:) ஒரு பூரிக்கட்டையையே இவரால ஜமாளிக்க முடியல்லயாம்ம்ம்:) அதில வேறு அமலா கேய்க்குதோ:)... உங்களுக்கு 7.5 சனி ஆரம்பம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்:)...

    ReplyDelete
  8. சினிமா பிரபலங்களை சொன்னால்தானே பரபரப்பு வரும் ....என்னாது என்று திரும்பி பார்ப்பாங்க இல்லனா வேற யாரென்றாலும் அப்ப்டியான்னு போயிகிட்டே இருப்பாங்க

    ReplyDelete
  9. கார் டீலர்களுக்கான யோசனை அருமை.

    ReplyDelete
  10. அப்படி எதுக்கு போடணுமோ அதுக்கு போட்ட நல்லாத்தான் இருக்கும் ......எதற்கு திடீரென்று இந்த விளம்பர யுக்திரென்று லேட்டாதான் புரிய வைப்பாங்க...... எதை மறைக்க

    ReplyDelete
  11. மதுரை தமிழன் எங்க ஊர் சுரேஷ் கோபி கூட பாண்டிச்சேரியில்தான் கார் வாங்கியிருக்கிறார் வரி கட்டலைனு செய்து கூட வந்தது அதெல்லாம் கண்ணில் படாதே உங்களுக்கு. அமலா பால் மட்டும்!!!!

    ReplyDelete
  12. மதுரைத் தமிழன்-நித்திரை கலைந்து எழுந்துவாங்க. நீங்க போட்டிருப்பது 15 வருடத்துக்கு முந்தைய அமலா பால் படம். அந்தம்மா, அமலா விஜய் ஆகி, அப்பறம் அமலா மீண்டும் பால் ஆகி.........

    ரஷ்ய நாட்டு இளைஞர் - இவர் 'பிச்சைக்காரன்' படம் பார்த்து அதன் படி நடக்கின்ற ரஷ்ய நாட்டு பில்லியனைர் மகனாக இருக்கப்போகிறார். பணம் போடுபவர்களுக்கு அவர் கம்பெனியில் 'மேனேஜர்' வேலை, அவருடைய வேண்டுதல் முடிந்தபிறகு கொடுப்பார்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.