Monday, September 11, 2017

@avargal unmaigal
நடிகர் விஜய்யின் மனிதாபிமானம் பாராட்டக் கூடியதுதே


அனிதாவின் மரணம் அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல தமிழர்கள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை கொடுத்தது சிலருக்கு கொடுக்காமல் இருந்திருக்கலாம் . நமக்கு அதைப் பற்றி கவலை இல்லை.

அனிதாவன் மரண செய்தியை அறிந்து அவரது குடுமப்த்தினர் அதிர்ச்சி அடைந்தாலும் மிக அதிரிச்சியும் கவலையும் அடைந்தவர் அவரின் தகப்பனாரார்தான். ஒரு ஆண்மகனுக்கு தன் தாயைவிட தாரத்தைவிட தன் பெண் குழந்தைதான் உலகத்திலே உயர்ந்தது அந்த குழந்தை மீது அவன் வைத்த அன்பிற்கும் நேசத்திற்கும் பாசத்திற்கும் அளவே கிடையாது.அதுவும் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த அனிதாவின் தந்தைக்கு அந்த இழப்பு என்பது சொல்லில் வடிக்கமுடியாத அளவிற்கு துயரத்தை கொடுத்திருக்கும்.




அனிதா இறந்த பின் அவளது இறுதி சடங்கில் கலந்து கொள்ள பல கட்சிதலைவர்கள் வந்து ,மாலைகள் போட்டு, அந்த தந்தைக்கு ஆறுதல் கூறி போட்டோ எடுத்து சென்றனர் . துக்க நேரத்தில் தலைவர்கள் சொன்ன ஆறுதல் வார்த்தைகள் அவர் செவிக்குள் கூட ஏறி இருக்காது .அதன் பின் வரும் நாட்கள்தான் அவருக்கு மிக துயரத்தை தரக் கூடிய நாட்கள். ஆனால் அந்த நாட்களில் ஆறுதல் சொல்ல அவருக்கு யாரும் இருந்திருக்கமாட்டார்கள். தன் துயரத்தை பங்கீட யாரும் இல்லாது அவருக்கு மிகுந்த வருத்தத்தைதான் தந்திருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது..யாரும் இல்லாம தனியா நிக்கிறோம்ன்னு நினைத்திருக்கும் போது விஜய் வந்து ஆறுதல் சொன்னது  நிஜம்மாவே ரொம்ப பெரிய சப்போர்ட்

அந்த நேரத்தில் நீட் என்று சொல்லவே பயந்த பல பிரபலங்களுக்கு மத்தியில நடிகர் விஜய் அனிதா வீட்டுக்கு போய் அந்த தந்தைக்கு ஆறுதல் சொன்னது நிச்சயமா மிக பெரிய விஷயம். அதுவும் அவருக்கு சரி சமமாக  தரையில் அமர்ந்து அனிதாவின் அப்பாவுக்கு ஆறுதல் கூறுவது மனதை மிகவும் தொடுகிறது...

அனிதா இறந்த நேரத்தில் விளம்பரத்திற்காக வந்து ஆறுதல் சொன்ன தலைவர்கள் அதன் பின் நிச்சயம் ஒரு வார்த்தை கூட அவரை கூப்பீட்டு பேசி இரூக்கமாட்டார்கள்...ஆனால் விஜய் எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் வந்து ஆறுதல் சொன்னதை பாராட்டவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை..

அவரை பிடிக்காதவர்கள் சொல்லலாம் இது இவர் அரசியலுக்கு வர அடிக்கும் ஸ்டண்டு என்று...அப்படிதான் இருக்கட்டுமே ஆனால் அவருக்கு பெண் குழந்தையை இழந்த ஒரு தந்தைக்கு எந்த நேரத்தில் வந்து ஆறுதல் கொடுக்க வேண்டும் என்றாவது தெரிந்திருக்கிறதே அதனால் அப்படிபட்டவர்கள் அரசியலுக்கு வருவது தவறே இல்லை என்று சொல்லுவேன். தரையில் இறங்கி உட்கார்ந்ததால் இன்றைய தினத்தில் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கிறார்

அனிதா மாணவிக்கு மனிதாபிமான முறையில்  நடிகர்  விஜய் அனிதாவின் தந்தை மற்றும் சகோதரரிடம் ஆறுதல்  தெரிவிப்பது வரவேற்க கூடியதே.  அதே நேரத்தில் அனிதா மரணத்துக்கு நீதி விசாரனை கேட்டாலும்  வரவேற்க கூடியதே. அதைத்தான் விஜய் செய்கிறார். ஆனால் இங்கு அவர்  #NEET -க்கு ஆதரவோ எதிர்ப்போ தெரிவிக்கவில்லை மற்றும் அவசியமில்லை.  காரணம் அவர் நீட்டுக்காக இவர்களை பார்க்கவரவில்லை மனிதாபிமான அடிப்படையில்தான் இவர் வந்து இருக்க வேண்டும்.... அதற்காகவே அவரை பாரட்டத்தான் வேண்டும்...இப்படி கூட மனிதாபிமானத்திற்கு கூட ஒரு வார்த்தை சொல்லாமல் சிலபேர்  வாய்மூடி இருக்கிறார்கள்.


அப்படித்தான் இங்கே நான் தான் ஸ்டார் என்று சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிக்கு  அப்ப அப்பதான் வாய் பேசவரும் அதுவும் தமிழனுக்கு பிரச்சனை என்றால் இவருக்கு வாய் மூடிக் கொள்ளும். ஆனால் அதே நேரத்தில் அவருக்கு வேண்டிய தலைவர்கள் என்றால் அவர்கள் இந்தியாவை நாசம் செய்தாலும் புதிய இந்தியா பிறந்தது என்றும், இயற்கை வளங்களை நாசம் செய்பவர்களுடன் சேர்ந்து நதியை காப்போம் என்று கூவும் .ஆனால் அனிதா போன்ற குழந்தைகள் இறந்தால்   காப்போம் என்று ஒரு வார்த்தை கூட வெளியே வராது. அப்படிப்பட்ட ஜென்மமே தமிழக முதல்வராக வர ஆசைப்படும் போது தேவையான நேரத்தில் வந்து குரல் கொடுத்து ஆறுதல் சொல்லும் ,வயதில் சின்ன விஜய்  அரசியலுக்கு வர ஆசைப்பட்டால் அதில் என்ன தவறு



நான் இங்கு  பதிவிடும் மற்றும்  பகிரும் செய்திகளும்  சமுகத்தை மாற்றவோ அல்லது என்னை மாற்றவோ அல்ல   I am here just for FUN

அன்புடன்
மதுரைத்தமிழன்

11 Sep 2017

4 comments:

  1. அவர் நீட்டுக்காக வரவில்லை...மனிதாபிமான அடிப்படையில்தான் வந்திருக்க வேண்டும்...// இது போதுமே மதுரைதமிழன்/சகோ! இதுதான் இன்றைய தேவை அல்லாமல்...அரசியல் ஆதாயம் அல்லவே!

    ReplyDelete
  2. /I am here just for fun/ எல்லாவற்றையும் ஃபன் ஆகக் கொள்ள முடியுமா சார்

    ReplyDelete
  3. Very well said, and we all should appreciate Vijay's humane side. Well done Vijay and god bless. Yes, it is big loss for every one especially people like me. Anitha Should have avoided that kind action. Any way it is too late and thank you.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.