Wednesday, April 17, 2013






இந்தியாவில் இப்படியும் ஒரு கிராமம். (பெருமை படக் கூடிய விஷயம் )

இந்தியாவில் வரும் தினசரி செய்திதாள் மற்றும்  வார மாத இதழ்களை திறந்தாலே கொலை , கொள்ளை, கற்பழிப்பு, ஊழல், சாதிச் சண்டை என்று மாறி முதல் பக்கத்தில் வருகிறது. அப்படி மோசமான செய்திகளையே பார்த்து படித்து பழகிய நமக்கு நல்ல செய்தியை படித்தால் என்ன சந்தோஷம் வருமோ அப்படிதான் எனக்கும் இந்த செய்தி மிக சந்தோஷத்தை அளித்தது. அந்த செய்திகளுக்கு காரணமானவர்கள் கிராமத்து மக்கள்தான் நகரத்தில் வாழும் படித்தவர்கள் அல்ல..

இந்தியாவில் செளத் ராஜஸ்தானில், ராஜஸ்மாண்ட் என்ற மாவட்டதில் உள்ள பிப்லாண்டிரி என்ற கிராமத்தில்  எக்கோ- ஃபெமினிஷம் என்ற ஒரு புதிய திட்டத்தை கடை பிடித்து வெற்றிக் கண்டு வருகின்றனர் (One such village in southern Rajasthan's Rajsamand district is quietly practicing its own, homegrown brand of Eco-feminism and achieving spectacular results. For the last several years, Piplantri village panchayat has been saving girl children and increasing the green cover in and around it at the same time.)

இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும் போது 111 மரக் கன்றுகளை நட்டு வளர்த்து வருகின்றனர். மரக் கன்றுகளை நட்டுவிட்டு அப்படியே விட்டு விட்டு செல்வதில்லை அது நல்லபடியாக வளரவும் எல்லோரும் பாடுபட்டுவருகின்றனர்.

இந்த திட்டத்தின்படி கடந்த ஆறு ஆண்டுகளில் 250,000 மரங்களுக்கு மேல் நட்டு வளர்த்து வருகின்றனர் இதில்  neem, sheesham, mango, Amla மற்றும் பல மரங்களை வளர்த்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாரசரியாக 60 வது பெண் குழந்தைகள் ஒரு ஆண்டில் பிறப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த திட்டத்தை கிராம விவசாயியான sarpanch Shyam Sundar Paliwal  என்பவர் சில வருடங்களுக்கு முன் இறந்த தன் மகளின் நினைவாக இதை நடத்தி வருகிறார்.

இந்த திட்டத்திற்கு சம்மதிக்கும் பெற்றோர்களுக்கு கிராம மக்களிடம் இருந்து பணம் வசூலித்து (31 ஆயிரம்) அதை 20 ஆண்டுகால நிரந்தர சேமிப்பு திட்டத்தில் அந்த குழந்தையின் பெயரில் போட்டு விடுகின்றனர்.

Here's the best part. அது மட்டுமல்லாமல்  அந்த குழந்தையை லீகல் வயசுக்கு முன்னாள் கல்யாணம் பண்ணி வைக்க கூடாது என்றும், குழந்தையை ரெகுலராக பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நட்ட மரங்களை எல்லாம் பாதுகாத்து வளர்த்து வர வேண்டும் என்றும் கிராமத்தார் முன்னால் எழுதி வாங்கி கொள்கின்றனர்

அது போல குடும்பத்தில் யாரவது இறந்தால் 11 மரங்களை நடுகின்றனர். இந்த கிராமத்தில் 8000 மக்கள் வசிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த கிராமத்தில் மதுவிலக்கு உள்ளது அதுமட்டுமல்லாமல் கடந்த 8 ஆண்டுகளாக எந்த வித போலீஸ் கேஸ்களும் பதிவாகவில்லை


எனக்கு இந்த செய்தி மிகவும் சந்தோஷத்தையும் ஆச்சிரியத்தையும் தந்தன..

இந்த செய்தியை நான்கு நாட்களுக்கு முன் அறிந்தேன் யாரவது இதை பற்றி பேசுவார்கள் அல்லது பதிவு போடுவார்கள் அல்லது பேஸ் புக்கில் ஸ்டேடஸ் நீயூஸ் போடுவார்கள் என எதிர்பார்த்தேன் ஆனால் ஒருவர் கூட இதைபற்றி பேசவில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது.


தேவையில்லாத பல விஷயங்களை ஷேர் செய்யும் நாம் இந்த செய்தியை ஏன் ஷேர் செய்யவில்லை. முடிந்தால் இப்போவாவது ஷேர் செய்வோமா?

இந்த பதிவை திண்டுக்கல் தனபாலன் அவருக்காக டெடிகேட்( dedicate ) பண்ணுகிறேன் . நண்பர் தனபாலன் இந்தியாவை பற்றி நல்ல செய்தியை அளித்திருக்கிறேன் சந்தோஷம்தானே??



அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments:

  1. ராஜஸ்தான் போன்ற நீர்வளம் குறைந்த பகுதிகளில் இது போல் செய்ய முடியும் என்றால் பிற பகுதிகளில் ஏன் செய்ய முடியாது

    படித்தவர்கள் இலைகள் தழைகள் விழுந்து குப்பை ஆகிவிடுகிறது என்று வீட்டில் இருக்கிற மரங்களையும் வெட்டிவிட்டு சிமென்ட் போட்டு விடுகிறார்கள்.
    மரம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதை உணரவேண்டும்

    ReplyDelete
  2. இம்மாதிரியான நல்ல தகவலை எடுத்துச் சொன்னமைக்கு நன்றி.உங்களுக்கும் தனபாலன் சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. super ...............கட்டி இருக்கற கையில் ஒரு கையை எடுத்து தோளில் தட்டி கொள்ளுங்கள் என் சார்பாக

    ReplyDelete
  4. சந்தோஷமாக இருக்கிறது.

    சில சமயம் உங்கள் பதிவை க்ளிக் செய்யும் போது மறுபடியும் டேஷ் போர்டுக்கே போய்விடுகிறது.. அதனால் பதிவை படிக்க முடியவில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.