Friday, June 15, 2018

#avargalunmaigal
பிரியாணியின் சுவையையும்  ஏ.ஆர்.ரகுமானின் பாடலையும் மிஞ்சும் பாகிஸ்தான் பாடகரின் க்வாலி இசை



ரம்ஜானுக்கு பிரியாணி கிடைக்கவில்லை என்றால் என்ன செவிக்கு அருமையான விருந்து இங்கே உங்களுக்காக இருக்கிறது

ஒரு மதப்பண்டிகை என்றால் அந்த மதத்தவர்கள் மட்டுமல்ல மதசார்பின்மை கொண்ட மாற்று மதத்தவர்களும் சந்தோஷமாக வரவேற்கும் மகிழ்ந்து கொண்டாடும் ஒரு தினமாகவே இருக்கிறது. உதாரணமாக தீபாவளி பண்டிகையை அந்த மதத்தவர் மட்டுமல்ல அவர்களோடு சேர்ந்து மாற்று மதத்தினரும் மதவழிப்பாட்டை தவிர்த்து பட்டாசு வெடித்து இனிப்புக்கள் வாங்கி சுவைத்து நண்பர்களுன் சேர்ந்து கொண்டாடுவார்கள் அது போலத்தான் கிறிஸ்துமஸ் மற்றும் ரம்ஜான்.


ரம்ஜான் பண்டிகை வரும் போது அநேக வீடுகளில் பிரியாணி செய்யமாட்டர்கள் என்பது உண்மைதான் ஆனால் இப்போது மாற்று மதத்தினர் இஸ்லாமியவீட்டு பிரியாணியை விரும்பி சாப்பிடுவதால் பல வீடுகளில் அவர்களுக்காகவே இப்போது பிரியாணி தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்

ஒருவேளை உங்களுக்கு அந்த பிரியாணியை சுவைக்க இன்று வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் பரவாயில்லை. அதற்கு பதிலாக உங்களுக்கு காவலி இசையை உங்களுக்கு விருந்தாக்க்கி தருகிறேன்..பிரியாணி என்றால் நான் வெஜ் சாப்பிடுபவர்கள் மட்டும்தான் சுவைக்க முடியும் ஆனால் இசையை எல்லோரும் கேட்டு ரசிக்க முடியும்..


இசைக்கு மொழி மதம் தடை இருக்காது....அதனால் காது உள்ளவர்கள் கேட்டு மகிழுங்கள் Qawwali -Nusrat Fateh Ali Khan


ரம்ஜானுக்கு இசை விருந்து வைக்க இணையத்தில் தேடிய போது முதலில் ஏ.ஆர் ரகுமான் பாடிய Qawwali வீடியோ க்ளிப் கிடைத்தது... அதை கேட்ட போது அது அவ்வளவாக என்னைக் கவரவில்லை..மேலும் தேடிய போது பாகிஸ்தான் பாடகர் Nusrat Fateh Ali Khan பாடிய பாடல்களின் தொகுப்புக்கள் கிடைத்தன. மிக மிக அருமை... உண்மையாக சொல்லுகிறேன் அவர் பாடிய பாடலுக்கான அர்த்தம் சுத்தமாக புரியவில்லை ஆனால் அவர் பாடியவிதம் அந்த குரல், மிக எளிமையான சில வாத்தியங்களை வைத்து பாடுவது அப்படியே நம்மை மெய்மறக்க செய்கிறது, அவர் இப்போது இவ்வுலகில் இல்லையென்றாலும் அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் நம் மனதில் நிற்கும்   அவர் Qawwali இசையின் கிங்காக இருந்தார்..

அவரின் பாடல்களை இங்கே உங்களுக்காக பகிர்கிறேன் கேட்டு மகிழுங்கள்



இந்த வீடியோவை முதல் 6 நிமிடங்கள் கழித்து கேளுங்கள்..இறுதி வரை கேட்க தவறாதீர்கள்






இப்ப ரஹ்மானின் இசையை கேளுங்கள் இதை கேட்ட பின் நிச்சயம் நீங்கள் Nusrat Fateh Ali Khan இசைக்கு அடிமையாகிவிடுவீர்கள்





@avargalunmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்

14 comments:

  1. ஹலோ ட்ரூத் உங்களுக்கு பிரியாணி கிடைச்சதா ? எனக்கு ஸ்வீட்ஸ் கிடைச்சுது :)
    eid கொண்டாடும் நட்புக்களுக்கு இனிய பெருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரம்ஜானுக்கு ஒரு வீட்டில் விருந்துக்கு கூப்பீட்டு இருந்தார்கள் கடைசி நேரத்தில் மனைவிக்கு ஆபிஸ் வேலை வந்துவிட்டதால் செல்ல முடியவில்லை எப்படியோ மனைவிக்கு ஆபிஸ் வேலையை கொடுத்து கடவுள்தான் அந்த பிரியாணி சாப்பிடுவதில் இருந்து என்னை காப்பாற்றினார்


      ரம்ஜானுக்கு முதல் நாள் பேஸ்புக்கில் இது பற்றிய பதிவு ஒன்று இங்கே உங்களுக்காக

      Deej Durai
      June 15 at 9:06am

      இன்று ஒரு இஸ்லாமியர் வீட்டில் ரம்ஜான் விருந்திற்கு கூப்பிட்டு இருக்காங்க. அதில் இரண்டு கஷ்டங்கள் உள்ளன். ஒன்று எங்கவீட்டு மாமிகூட போவதால் வெஜிடேரியன் ஐட்டம் சமைச்சு வைச்சிருப்பாங்க ஆனால் அது அவ்வளவு டேஸ்டாக இருக்காது ஏன்னா அந்த இஸ்லாமியர் குடும்பத்திற்கு அவ்வளவாக வெஜிடேரியன் ஐட்டம் சமைக்க முடியாது.... சரி அவங்க பண்ற பிரியாணியை சாப்பிடலாம் என்றாலும் அதுவும் அவ்வளவு டேஸ்டாக அவங்களுக்கு சமைக்க வராது... அவங்க சமைக்கும் பிரியாணியைவிட என் மனைவிக்கு தெரியாமல் நான் சமைக்கும் பிரியாணி மிக சூப்பராக இருக்கும்... ஆனால் என்ன நட்புக்கள் கூப்பிட்டதால் பலிகடாவாக இன்று விருந்துக்கு சென்று அவர்களை வாழ்த்திவிட்டு கடனே என்று சாப்பிட்டுவரனும்... யா அல்லா ஒரு நல்ல நாளில் எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை

      Delete
  2. அருமை பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சில இசைகளை ரசிக்க என்றே புரிதல் வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. புரிதல் என்று சொல்வதற்கு பதிலாக அமைதியான மனம் இருக்க வேண்டும் அப்பத்தான் எந்த இசையையும் ரசிக்க முடியும்

      Delete
  4. நமக்குத்தெரியாமல் எத்தனையோ கலைஞர்கள் இலைமறை காயாக வாழ்கிறார்கள்.. “ஆஷாபோஸ்லே அதிரா” போல:) என சொன்னால் நம்பவா போறீங்க?:))...

    படிக்கும்போது, கள்ளமாக எங்களுக்கு கிடைச்ச பெருநாள் பிரியாணியை வாழ்க்கையில் மறக்கவே முடியாது:))

    ReplyDelete
    Replies
    1. ஆச்சி அதிரா என்று சொல்வதற்கு பதிலாக பிரபல பாடகி பெயரை மறதிகாரணமாக இங்கே டைப் செய்து இருக்கிறீர்கள்

      Delete
  5. அருமையான பகிர்வு.
    இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.
    அவர் இப்போது இல்லை என்று கேட்டு வருத்தமாய் போய்விட்டது.

    ReplyDelete
  6. ரம்ஜானுக்கு ஏற்ற பாடல்.

    ReplyDelete
  7. குழுவில் உள்ள எல்லோரும் நன்றாக பாடுகிறார்கள்.மற்ற பாடல்களை நாளை கேட்டுவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றியம்மா

      Delete
  8. ஹையோ மதுரை நல்ல கவாலி ஸாங்க். நஸ்ரதின் பாடல்களைக் கேட்டுள்ளேன் சகோ. நல்ல பகிர்வு.

    கீதா

    ReplyDelete
  9. ஸாரி சகோ வாழ்த்து சொல்ல விட்டுப் போய்விட்டது மகன் ஜஸ்ட் ஒரு வாரமே விசா F1 க்கு மாறியதால் ரெசிடன்ஸி கம் எம் எஸ் ப்ரோக்ராம் என்பதால் ஸ்டூடன்ட் விசா. அது இவனுக்கு வித் ஸ்டைஃபன்ட் ப்ளஸ் ப்ரோக்ராம் ஃபீ வெய்வர் இருப்பதால் முதலில் விசா பேப்பர்ஸ் நார்மல் ஸ்டூடன்ட் விசாவுக்குக் கொடுப்பது போல அட்மிஷன் லெட்டர் கொடுத்துவிட்டார்கள் அதனால் கொஞ்சம் கன்ஃப்யூஷன் எனவே லாஸ்ட் மினிட் எமெர்ஜென்சி விசா அப்ளை செய்து ஒரே வாரம் வந்து போனதால் அவனுடன் நேரம் செலவ்ழிப்பத்தில் பிஸி..ஸாரி சகோ வாழ்த்து சொல்லாமல் போனத்ற்கு...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.