Saturday, June 30, 2018

@avargalUnmaigal
ஸ்டாலின் ஏன் 8 வழி சாலைக்காக தீவிரமாக போராடவில்லை?


திமுக 8 வழி சாலையை மறைமுகமா ஆதரிக்குதுன்னு நினைக்கிறேன்..இப்படியே விட்டால் அதிமுக எதிர்ப்பு அதிகமாகும்.அது வரும் தேர்தலில் திமுகவுக்கு சாதகமாகும்னு பேசாம இருக்கிறார்களோ என்னவோ? என்ன தளபதியாரே நான் சொன்னது சரிதானே

சரி எதிர்ப்பு ஏன் இல்லை என்று அவரிடமே  டெலிபதி முறையில் கேட்போமே என்று அவரிடம் சில கேள்வி பதில்கள்;;


மதுரைத்தமிழன் :சென்னை டு சேலம் எட்டுவழிப் பாதை நல்லதா கெட்டதா அதற்கு நீங்கள் இன்னும் தீவிரமாக எதிர்ப்பு போராட்டங்கள்  தொடங்கவில்லையே ஏன்?

ஸ்டாலின் : அந்த திட்டம் நல்லதா கெட்டதா என்பது பற்றி எனக்கு யாரும் இன்னும் எழுதி தரவில்லை  மேலும் குறைந்தது 10 பேராவது போராட்டத்தில் செத்தால்தான் நாங்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக  களம் இறங்குவோம்...அதுவரை நாங்கள் வெயிட்டிங்க்

மதுரைத்தமிழன் :மோடிப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஸ்டாலின் :அவர் சுத்த மோசமான ஆள்

மதுரைத்தமிழன் :ஏன் அவர் போட்ட தீட்டங்கள் ஏதும் சரியில்லையா?
ஸ்டாலின் :ஆமாம்

மதுரைத்தமிழன் :எந்தெந்த திட்டங்கள் சரியில்லை என்று சொல்ல முடியுமா உதாரணமாக GST,demonitization , ஹிந்தி திணிப்பு.காவிரி இதில் எது சரியில்லை?

ஸ்டாலின் :இந்த திட்டம் எல்லாம் சரிதான் ஆனால் ஜெயலலிதா இறந்த பின் பன்னிர் செல்வம் ,எடப்பாடியை முதல்வராக்கிய திட்டம் முற்றிலும் சரியில்லை அவர்களுக்கு பதில் என்னை முதல்வராக்கினால் நான் அவர் விரும்பிய நல்லாட்சியை கொடுத்திருப்பேந்தானே

மதுரைத்தமிழன் :நீங்கள் முதல்வாரானல் தமிழக மக்களுக்காக என்ன செய்வீர்கள்?
ஸ்டாலின் :சினிமாவில் நடிக்கும் உதய நீதியை தமிழக துணை முதல்வாரக்கி சேவை செய்ய வைப்பேன்.


மதுரைத்தமிழன்: ஸ்ரீரங்கத்தில் குருக்கள் வைத்த பொட்டை அழித்தது பற்றி?
ஸ்டாலின் :யாரையும் புண்படுத்த அப்படி செய்யவில்லை அந்த விபூதி தரமாக தயாரிக்கப்பட்டதா என்று தெரியவில்லை ஒரு வேளை அதனால் அலர்ஜி ஏற்படுமோ என்று நினைத்துதான் அழித்தேன்.




அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. போராடுவதற்கு அவர் வேறு 16 வழிகள் வைத்திருக்கின்றாரோ.... என்னவோ ?

    ReplyDelete
  2. அதை திசை திருப்புவதற்குத்தான் கவர்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கையில் எடுத்திருக்கிறாரே ஸ்டாலின்.

    ReplyDelete
  3. அருமை...ஸ்டாலின் மீது சரியான பகடி...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.