Thursday, June 21, 2018

அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் மட்டும் பொய் சொல்லலாம்

பியூஷ் மானுஷ் என்ற சமுக ஆர்வலர் பொய் சொன்னார்,  எட்டு வழிப்பாதை பற்றி தவறான தகவல்களை மக்களுக்குக் கொடுத்தார் என்பதற்காகச் சிறையில் அடைத்திருக்கிறார்கள் . ஆனால் அம்மா இட்லி சாப்பிட்டார் டிவி பார்த்தார் . அவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது அவர் குணமாகிவிட்டர் அவர் வீடு திரும்பும் நாளைத்தான் முடிவு செய்யனும் என்று சொல்லி பிணமாக கொண்டு சேர்த்தவர்கள் எல்லாம் உண்மை பேசியவர்களா ? அதனால்தான் அவர்கள் கைது செய்யப்படவில்லையா? அப்படி அவர்கள் உண்மை பேசி இருந்தால் ஏன் விசாரணை கமிசன் அமைக்க வேண்டும் அல்லது அவர்கள் பொய் பேசி இருந்தால் அவர்களை சிறையில் அல்லவா அடைத்து இருக்க வேண்டும்

அடுத்து இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம்???

கைது செய்யப்பட வேண்டிய எஸ்.வி.சேகர் இன்று கோர்ட்டில் ஆஜராகி உடனே ஜாமீனில் வெளி வந்தார்.

இந்தியாவில் 2 சட்ட முறைகள் நடைமுறையில் இருக்கின்றன.

ஒன்று  இந்திய அரசியல் சட்டம் அது பொதுவானது. இந்த சட்டபடி பியூஷ் மானுஷ் என்ற சமுக ஆர்வலர் உண்மையை சொன்னதற்காக கைது செய்யப்பட்டு இருக்கிறார்( இது செலிபிரட்டிகள் பண முதலைகளுக்கு விதிவிலக்கு அதாவது விசாரணை நடக்கும் ஆனால் தண்டனை கிடையாது )

மற்றொன்று, மனுநீதிச் சட்டம் -- அது பிராமணர்களுக்கு மட்டுமே ஆனது. இந்த சட்டத்தின் மூலம தவறான தகவலை பகிர்ந்த  எஸ்.வி.சேகர்  கோர்ட்டுக்கு வரவழைக்கப்பட்டு  ஜாமினில் வெளி வந்து இருக்கிறார்


நீதி: பொய் சொல்லுபவர்கள் அதிகார பதவிகளில் இருந்தால்  அல்லது பிராமணர்களாக இருந்தால் அந்த பொய்கள் குற்றம் இல்லை. அதிகார அரசியலில் இருப்பவர்கள் மட்டுமே பொய் சொல்லலாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. மக்கள் மாக்களாக இருக்கும்வரை இன்னும் சந்திக்க வேண்டிய துன்பங்கள் நிறைய வரும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.