Tuesday, June 12, 2018

@avargal Unmaigal
அதிராவிற்காக செஞ்ச பஞ்சாபி மட்டர் பன்னீர் மசாலா Punjabi matar paneer masala recipe



தேவையான பொருட்கள்:

பன்னீர் (Paneer) - 400 கிராம்
பச்சைபட்டாணி (Peas)- 1 கப்
முந்திரி பருப்பு (Cashews)- 10- 12

பெரியவெங்காயம் (Onion)- 2
தக்காளி(Tomoto)- 2
பச்சைமிளகாய் (Green Chille)-5
இஞ்சி (Ginger)- சிறு துண்டு

கொத்தமல்லி இலை (Coriander leaves)- சிறிதளவு
காய்ந்த கசூரி மேத்தி (Kasuri methi)- சிறிதளவு
இஞ்சி&பூண்டு பேஸ்ட்( Ginger Garlic paste )- ஒரு ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் (kashmiri chilli powder) - ஒரு ஸ்பூன்
கொத்தமல்லி தூள்  (Coriander powder)- ஒரு ஸ்பூன்
கரம்மசாலா (Garam masala) - ஒரு ஸ்பூன்
சீரகம் (cumin seeds)- 1/2 ஸ்பூன்
தேன் (Honey)-  1 ஸ்பூன்

எண்ணெய் Oil
வெண்ணெய் Butter
@avargal unmaigal
செய்முறை :

முதலில் வடை சட்டியில் சிறிதளவு எண்ணெய்விட்டு அது சூடான பின் அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தை அதில் இட்டு வதக்கவும் அது வதங்கும் நேரத்தில் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு நன்றாக வதக்கவும். சில நிமிடங்கள் கழிந்ததும் முந்திரி பருப்பை அதில் போட்டு வதக்கி அதன் பின் நறுக்கி வைத்த தக்காளி மற்றும் இரண்டு பச்சை மிளகாயை அதி இட்டு மேலும் சில நிமிடங்கள் வதக்கி அதனை ஆறவிடவும்.ஆறிய பின் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

அடுத்தாக வாயகன்ற அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய்விடவும் அது சிறிது காய்ந்தவுடன் சிரகத்தை பொடவும் அது பொரியும் நேரத்தில் காஷ்மீரி மிளகாய் தூளை அதில் இட்டு உடனே அரைத்து வைத்த தக்காளி வெங்காய முந்திரி பேஸ்டை அதில் போட்டு வதக்கவும் அப்படி உடனே போடாவிட்டால் மிளகாய்தூள் கருகிவிடும் மிளகாய் தூள் போட்டவுடன் பேஸ்டை சேர்ப்பதால் வேறு கலர் ஏதும் சேர்க்காமலே அது சிவப்பாக மாறிவிடும் அதனுடன் இஞ்சியை தோலி சீவி நீளமாகவும் மீதி இருக்கும் ப்ச்சை மிளகாயை நீளமாக நறுக்கியும் அதனுடன் சேர்க்கவும் இந்த சமயத்தில் வெண்ணைய சிறிதளவு சேர்க்கவும்


அந்த கலவையில் மேலும் கொத்தமல்லிதூள் மஞ்சதூள் சேர்த்து நங்கு வதக்கவும் அப்படி வதக்கும் போது அந்த மசாலாவில் இருந்து எண்ணெய் வெளிவரும். அந்த நேரத்தில் வேக வைத்த பச்சை பட்டாணியை அதனுடன் சேர்த்து மேலும் சில நிமிடம் வதக்கவும் அதன் பின் பன்னீரை உங்களுக்கு வேண்டிய அளவிற்கு சிறிது சிறிதாக கட் பண்ணி அதில் சேர்க்கவும்.மேலும் தேனையும் கசூரி மேத்தியையும் அதுனுடன் சேர்த்து வதக்கவும்.

கடைசியாக கொத்தமல்லி தழையை அதில் போட்டு இறக்கி வைக்கவும்.

இந்த சைடிஸ்சை சப்பாத்தி ,நான்,சீரா ரைஸுடன் சேர்த்து சாப்பிடலாம்


டிஸ்கி: இந்த பதிவை பார்த்துவிட்டு எனக்கொரு பார்சல் என்பவர்களுக்கு நான் செய்ததை சாப்பிட்டு முடித்துவிட்டேன் அது இப்போது என் வயிற்றி
ல் இருக்கிறது அப்படியும் பார்சல் வேண்டும் என்பவர்களுக்கு அது வயிற்றில் இருந்து வெளிவந்ததும் கண்டிப்பாக உங்கள் செலவில் அனுப்பி வைக்கப்படும்


எங்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு அவர்கள் விரும்பினால் இது போல பல சுவையான உணவுகளை செய்து தர நான் ரெடி ஆனால் அதற்கு முன் என் மனைவியின் அனுமதி தேவை... அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் என் மனைவியை நீங்கள் புகழ்ந்து பாராட்டி என்னை நீங்கள் திட்ட வேண்டும். அப்படி செய்தால் உங்களுக்கு அனுமதி கிடைக்கும்


அரசியலில் மாட்டி சிக்கி தவிக்கும் மதுரை தமிழா சமையல் குறிப்பு ஒன்று போடுங்கள் என்று கேட்டு கொண்டதற்கிணங்க இந்த பதிவு

அன்புடன்
மதுரைத்தமிழன்

33 comments:

  1. நீங்க செய்த ப.ம.ப.ம பார்க்க நன்றாக இருக்கு. செய்தால் டேஸ்டாகவும் இருக்குமென நினைக்கிறேன். சொல்லியிருக்கும் தேவையான பொருட்கள் இங்கு கிடைக்கும். ஆகவே வாங்கி நான் செய்து பார்க்கிறேன். எனக்கு பார்சல் வேண்டாம். நன்றி.

    அதிராவுக்காக செய்த ரெசிப்பி என்று சொல்லிவிட்டு நீங்க சாப்பிட்டால் எப்படி?

    ReplyDelete
    Replies
    1. ஓ நோஓஓஓஓ அம்முலு என் பன்னீர் டிஸ் ல கை வச்சிட்டா:)) அது நேக்குத்தான்ன்:) ஹா ஹா ஹா...

      Delete
    2. பிரியசகி நீங்க இணையத்துக்கு எல்லாம் வந்து கொண்டிருக்கிங்களா? மிக ஆச்சரியமாக இருக்குதே. வாவ்... வெல்கம் வெல்கம் மிக நீண்ட நாளைக்கு அப்புறம் உங்களை இணையத்தில் பார்க்கிறேன்

      மட்டர் பன்னீர் மசாலா எனக்குதான் பண்ணியது ஆனால் இந்த பதிவுமட்டும் அதிராவிற்காக போட்டது... அவங்களுக்கு இதை அனுப்பினான இன்னும் வெயிட் போட்டுடுவாங்க அதன் பின் அவங்களால் நடக்க முடியாது ஆனால் அதை மறைத்துவிட்டு நான் இன்னும் நடக்க தெரியாத குழந்தைன்னு சொல்லிகிட்டு இருப்பாங்க

      Delete
    3. என்னாது உங்களுக்காக பண்ணியதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உப்பூடிச் சொன்னால் திரும்ப அரசியலுக்குள் குதிக்க வச்சிடுவோம்ம்:)) ஹா ஹா ஹா ஹையோ ஹையோ:))

      Delete
    4. உங்களுக்காக பண்ணலாம் ஆனால் சாப்பிட்டுவிட்டு திரும்பி விட்டுக்கு போகமாட்டேன் என்று சொல்லிட்டீங்கன்னா வம்பாச்சே

      Delete
    5. ஹலோ நான் இங்கினதான் சுத்துறேன். என் பக்கம்தான் போகல. இது என்னோட பக்கத்தை சொன்னேனாக்கும்.... உங்க அரசியல் போஸ்ட் எல்லாம் வாசிக்கிறேன். கருத்து பதிய கொஞ்சம் யோசனை. அட்டகாசமா எழுதுறீங்க..

      Delete
    6. என்னாதூஊ அட்டகாசமா எழுதுறாரா?:) அடிதடியா எலோ எழுதுறார்:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:))

      Delete
  2. ஆஆஆவ்வ்வ்வ்வ் மிக நீண்ட இடைவெளியின் பின்பு ட்றுத் கிச்சினை தூசு தட்டியிருக்கிறார்:).. கொஞ்ச நாட்கள் கிச்சினுக்குள்ளேயே நிக்க வேணும் எனவும்... அப்பூடி நடந்தால்.. பிரான்ஸ் லூர்த்து மேரி மாதா கோயில் புனித நீரில் அஞ்சுவை மூழ்கப் பண்ணுவேன் எனவும் நேர்த்தி வச்சிருக்கிறேன்ன்ன்:))

    ReplyDelete
    Replies
    1. சரி சரி கூடிய சீக்கிரம் ஒரு ஹோட்டலை ஆரம்பித்து தாங்க அதன் பின் கிச்சனிலே நிக்கிறேன்

      Delete
    2. இந்த மாதக் கடசியில் ட்றம்ப் அங்கிளை மீட் பண்ணுவேன்:) அப்போ இதுபற்றிக் கதைக்கிறேன்ன்:)).. அநேகமா நியூயோர்க்கில் ஆரம்பிச்சுத்தருவார் என நம்புகிறேன்:)

      Delete
    3. ட்ரெம்பை மீட் பண்ணும் போது அவர் பக்கத்தில் இருக்கிற அவர் பெண்ணிடம் என்னை பற்றி நாலு நல்லவார்த்தை சொல்லி வையுங்க

      Delete
    4. ஓ அந்த 74 வயசு பாட்டியிடம் தானே?:) நிட்சயம் சொல்லி விடுகிறேன் .. ட்றுத் நன்கு சமைப்பார் எனவும் சொல்லிடுறேன்:)

      Delete
  3. ஆவ்வ்வ் மிக அருமையான பன்னீர் மசாலா.. பார்க்கவே ஆசையாக இருக்கு.. இது எந்த ரெஸ்டோரண்டில ட்றுத் வாங்கினீங்க? ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்சு:)) எந்த கிச்சினில் நின்று சமைச்சீங்க எனக் கேட்க வந்தேன்... சூப்பர்.

    அரசியலைத்தூக்கி வீசிவிட்டு:) சமையல் போஸ்ட் போட்டமைக்கு நன்றி... நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வீட்டுல சமைக்காமல் அடிக்கடி ஹோட்டலில் சாப்பிட்ட இப்படித்தான் டங்கு ஸ்லிப்பாகும்


      நான் எழுதுவது அரசியல் பதிவுகள் அல்ல அரசியல் எனக்கு தெரியாது நான் போடுவது எல்லாம் நையாண்டிகள்தான்... டிவியை மற்றும் இணையதளங்கள் வந்தால் படிப்பது எல்லாம் அரசியலாகவே இருக்கிறது அதனால்தான் அப்படிபட்ட பதிவுகளை படிக்கும் போது அரசியல் நையாண்டி பதிவுகள் போடத் தோணுது

      Delete
    2. நையாண்டியை விட்டுடாதீங்க ட்றுத் அவர்களே...

      Delete
    3. அதிராவின் பேச்சை கேட்டு விட்டுவிடலாம் என்று நினைத்து இருந்தேன் ஆனால் உங்களின் ஆதரவு கண்டு இனி நேறம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி தள்ளுகிறேன் அப்படியே நேரம் கிடைத்தால் அதிராவையும் தேம்ஸ் நதிக்குள் தள்ள முயற்சிக்கிறேன் ஆனால் அவங்க் கொஞ்சம் வெயிட்டான ஆளாக இருப்பதால் என்னால் முடியுமா என்று மலைப்பாக இருக்கிறது நிறைய கரங்கள் தேவைப்படுகிறது ஏஞ்சலின் இரண்டு கரங்கள் எனக்கு உதவி செய்யும் ஆனால் ஏஞ்சலின் கால்கலோ அவரை சர்ச் பக்கம் இழுத்து சென்றுவிடுகிறது ஹும்ம்ம்

      Delete
    4. அம்முலுவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)). கஸ்டப்பட்டு ஒருமாதிரி சமையல் போஸ்ட் போட வச்சு.. சமைச்ச சூடு ஆறமுன்பே அரசியலில் குதிக்கப் பண்ணப்போறீங்க மீண்டும்:))..

      Delete
    5. நீங்க நையாண்டியை விட்டுடாதீங்கோ என்று எழுதியதை வேகமாக படிக்கும் போது ஞானி(அதிரா) ஆண்டி என்று படித்துவிட்டேன்

      Delete
  4. ஹலோ ட்ரூத் ஒரு நட்புக்கு கையில் அடிபட்டு கஷ்டப்பட்டு பாடுபட்டு வீட்ல சமைக்காம இருந்தாங்க ..என்னான்னு விசாரிச்சீங்களா கர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. நீங்க சர்ச்க்கு போனது மட்டும் தெரியும் அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியாது .கைக்கு என்ன ஆச்சு வூட்டுகாரர் உங்களை சமைக்க சொன்னதால் அவரை அடித்து உங்கள் கையை ஒடித்து கொண்ட்டிர்களோ?

      Delete
    2. பேஸ்புக் வசதியாக இருந்தது ஆளைக் காணும் என்றால் உடனடியாக தேடுவதற்கு அதை மூடிட்டீங்க இமெயிலில் தொந்தரவு பண்ணவோ பிடிக்கவில்லை உங்கள் தோழி அதிராவோ தகவல் ஏதும் பகிரவில்லை ஹும்ம்ம்ம்ம்ம்ம்

      Delete
    3. உங்களுக்கு கை உடைந்தது தெரிந்திருந்தால் திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி என்ற பதிவு போட்டு இருப்பேனே.... சரி சரி அதையும் சீக்கிரம் போட்டுடுறேன் கைக்கு பிஸியோத்ரபி பண்ணியது மாதிரி இருக்கும்

      Delete
  5. பஞ்சாபி பனீர் மட்டர் நல்ல இருக்கே ..பாப்போம் செய்து .விரைவில் எனது சமையல் பிளாக்கில் இது வெளி வரும் :)

    ReplyDelete
    Replies

    1. சமையலுக்கு என்று ஒரு ப்ளாக் வைத்திருக்கீங்களோ லிங்க் பளீஸ்

      Delete
    2. https://paperflowerskitchen.blogspot.com/

      Delete
  6. பஞ்சாபி பனீர் மட்டர் நல்லா இருக்கிறது படங்களில். செய்முறை படங்கள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிம்மா

      Delete
  7. சுவையான குறிப்பு. நான் செய்யும் போது தேன் மட்டும் சேர்ப்பதில்லை. மற்றவை அதே அதே. கசூரி மேத்தி! கஸ்தூரி மேத்தி அல்ல.


    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி வெங்க்ட்

      Delete
  8. ஆஹா மதுரை தமிழன் கலக்கிட்டீங்க!!! பார்க்கவே சூப்பரா இருக்கு. குறிப்பும் அருமை. ஆனா எங்கள் வீட்டில் கேரளா டிஷஸ் தான்..பெரும்பாலும் நான் உணவு பதிவுகளுக்கு வருவதில்லை ..-துளசி

    கீதா: மதுரை கலக்கல் போங்க....என்ன லேட்டா வந்ததால தீர்ந்து போச்சு.....ஸோ அடுத்த டிஷ் எனக்குதான் போடணும்...பூஸாருக்குக் கிடையாது...பாருங்க அவங்க முந்தி அடிச்சு எடுத்துக்கிட்டாங்க...

    அட்டகாசம் குறிப்பு மதுரை. நானும் இதேதான் ஆனால் தேன் சேர்ப்பதில்லை...சமையல்ல கலக்குறீங்க...சரி சரி நான் வரும் போது ஒழுங்கா சமைச்சு போடணும் சொல்லிப்புட்டேன்...

    ReplyDelete
  9. மதுரை அது சரி இப்படி எல்லாம் பாட்டிக்கா செஞ்சு கொடுத்தீங்க....பாட்டிக்கு ஒத்துக்குமா உடம்பு??!! அதைச் சொலல்வே இல்லையே...

    கீதா

    ReplyDelete
  10. பாட்டிக்கு எல்லாம் செய்வீங்க....ஏஞ்சல், என் போன்ற இளசுகளுக்குச் செய்ய மாட்டேன்றீங்களே...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.