Tuesday, June 19, 2018

பிக் பாஸ்: இப்படிக்கு சென்னை வாசிகள்  2020 CHENNAI TO RUN OUT OF UNDERGROUND WATER

///சென்னையில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் வற்றிவிடும்; வரலாற்றில் இல்லாத தண்ணீர் பிரச்சினை: நிதி ஆயோக் எச்சரிக்கை//

காவிரியில் தண்ணி வரலை அதனால அதை சார்ந்த மக்கள் என்ன செத்தா போயிட்டார்கள் அது போல சென்னையில் நிலத்தடி நீர் வற்றினால் என்ன நாங்கள் செத்தா போயிடுவோம்...


 அடேய் நாங்க குடிக்கிறது குழாய் தண்ணி இல்லை, பாட்டில் வாட்டர்... அது போல குளிக்க துவைக்க வீட்டை சுத்தம் செய்ய தோட்டத்திற்கு  தண்ணீர் விட  ,லாரி வாட்டரை விலை கொடுத்து  வாங்கி உபயோகிக்கிறோம்.... அதனால சென்னையில் நிலத்தடி நீர் வற்றினால் என்ன வற்றாவிட்டால் என்ன.... இந்த செய்திகளை படித்து வெட்டியாக நேரம் கழிக்க எங்களால் முடியாது

 சரி சரி உங்ககிட்ட என்ன வெட்டி பேச்சு....... பிக் பாஸ் ஆரம்பிச்சாச்சு அது முடிற வரை அதை பற்றிதான் எங்கள் பேச்சு மூச்சு இருக்கும்... இப்படிக்கு சென்னை வாசிகள்



தண்ணீர் பிரச்சனை மக்களுக்கு விடும் எச்சரிக்கை அல்ல மக்கள் கண்முன் காணப்போகும் அவலத்தின் உண்மை, ஆனால் அதை உணராமல் இருக்கிறார்கள் அரசும் அதை பற்றி கவலைப்படாமல் அதற்காக எந்த வித அதிரடி நடவடிக்கைகளையும் எடுக்காமல் அதிரடியாக சேலத்தில் இருந்து சென்னைக்கு மூன்று மணி நேரத்தில் வர 8 வழி சாலைகள் அமைக்க களம் இறங்கிவிட்டன. தண்ணி இல்லாத சென்னைக்கு மூன்று மணி நேரத்தில் வந்து சாகவா  சேலம் மற்றும் அதை சுற்றி உள்ள மக்கள்  அவசரப்படப் போகிறார்கள்.


இயற்கையை அழித்து சேலத்தை சென்னை போல ஆக்கத்தான் தமிழக முதல்வர் எடப்பாடி முயற்சி செய்கிறார் போல  நல்ல இருய்யா எடப்பாடி சாமி...சாரி எமதர்மா ராஜா

சரி சரி இதெல்லாம் பேசி நமக்கு என்னாக போகிறது ... தண்ணிக்காக அடிச்சுகிட்டு சாகப் போகும் பயல்களே அதை பற்றி உணராமல் பிக் பாஸ் பார்த்து பேஸ்புக்கில் அதை பற்றி ஸ்டேடஸ் போடுகிறார்கள்... பேசாமல் சாகப் போகும் பயல்கள் போடும் ஸ்டேடஸுக்கு லைக் போட்டு அவர்களை சந்தோஷாமாக வழி அனுப்ப நானும் என்னால் முடிந்த வரை லைக் போட்டு அவர்களை சந்தோஷப்படுத்துகிறேன்

Water crisis is a reality, not a warning புரிஞ்சா புரிஞ்சிக்கோ

அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்காகத்தான் இந்த் எட்டு வழி ரோடுகள் போடப்படுகின்றன  என் அ அரசு சார்பில் சொல்லப்படுகிறது அது உண்மையானால் வளர்ச்சிக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பதில் தவ்று ஏதும் இல்லை.. ஆனால் சட்டசபையில் அமைச்சர்  செல்லா நோட்டுப் பிரச்சனையாலும் ஜி.எஸ்டியாலும் 50,000 சிறுகுறு நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டதால் தமிழகத்தில் 5,00,000 பேர் வேலை பறிபோயிருக்கிறது அப்படி இருக்கும் போது இந்த மாவட்டத்தில் என்ன தொழில் வளர்ச்சி ஏற்படப் போகிறது அதற்கான திட்டங்கள் என்ன? அடுத்த 5 வருடங்களில் இங்கே தொழி துவங்க யார் முன் வருகிறார்கள் என்னென்ன தொழில்கள் ஆரம்பிக்கப்படுகின்றன  அனைத்து தொழில்களும் உள்நாட்டு முதலீட்டில் ஆரம்பிக்கப்படப் போகின்றனவா அல்லது வெளிநாட்டு முதலில் ஆரம்பிக்கப்படுகின்றனவா என்று வெளிப்படையாக அறிவித்தால் மக்கள் அந்த திட்டங்கள் உண்மையானவை நமக்கு மாவட்டத்திற்கு பலன் அளிக்கும் என்றால் தங்கள் சொத்துக்களை இலவசமாக கூடி கொடுக்க முன் வருவார்கள் தானே

எடப்பாடி  அதை முறைப்படி விளக்குவாறா இல்லை எடப்பாடி எட்டையப்பாவாக் மாறி தமிழகத்தை தனது சுயநலத்திற்காக அழிப்பாரா? அதிகாரம் எப்போதும் ஒரு போது நிரந்தரமாக இருப்பதில்லை இது வரலாறு நமக்கு கற்று தந்தபாடம். அதையாவது அவர் தெரிந்திருக்கிறாரா?

3 comments:

  1. இனிமேல் நாடு உருப்படும் என்ற நம்பிக்கை போய் விட்டது.

    ReplyDelete
  2. சென்னைலதான் தண்ணி இருக்காதே! அப்புறம் அங்க எப்படி தலைநகரம் இருக்கும். அதை அலேக்கா தூக்க்கி சேலத்துல வைக்கனும்ன்னா மிகப்பெரிய கிரேன் வேணும், கிரேன் வேணும்ன்னா மிகப்பெரிய பாதை வேணும். அதனாலதான் இந்த எட்டு வழி பாதை.

    ReplyDelete
  3. தண்ணீரைப் பற்றிய வேதனையான செய்தி. நாளிதழ்களில் படித்தேன். என்ன செய்வது? மக்களின் நினைப்பெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பற்றியே.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.