உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, September 19, 2016

நீயூயார்க் வெடிகுண்டு வெடிப்பிற்கான தீவிரவாதி பிடிப்பட்டான்நீயூயார்க் வெடிகுண்டு வெடிப்பிற்கான தீவிரவாதி பிடிப்பட்டான்

சனிக்கிழமை இரவு நீயூயார்க்கில்  நடந்த குண்டு வெடிப்பில் 29 பேர் காயமடைந்தார்கள் இதற்கு காரணமானவன தேடும் படலம் உடனே தொடங்கப்பட்டது. ஞாயிற்றுகிழமை இரவுக்குள் சம்பந்தவட்டவன் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது 

அவன் நீயூஜெர்ஸியில் இருக்கும் ஆப்கனிஸ்தானை சேர்ந்த அமெரிக்க சிட்டிஷன் Ahmad Khan Rahami என்று அறியப்பட்டு அவன் வீடும் அடையாளம் கண்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த தேடலில் மக்களின் உதவியும் இருந்தால் மிக எளிதாக இருக்கும் என்று கருதி அவனது போட்டோவை திங்கள்கிழமை காலை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அவனைப்பற்றிய விபரங்களை நீயூஜெர்ஸியில் செல்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் எமர்சன்ஸி அலர்ட் என்று செய்தியை அனுப்பியது. அப்படி அனுப்பிய ஒரு மணி நேரத்தில் அவன் இருக்கும் இடம் அறியப்பட்டு அவனை சுட்டு உயிருடன் பிடித்தனர்.


see somthing say somthing என்று  சொல்வதற்கிணங்க மக்கள் தகவலை பகிர்ந்ததால் இவனை உடனடியாக பிடித்தனர். தகவல் தெரிவித்தவருக்கு நல்ல சன்மானம் கிடைக்கும் ஆனால் அவரைப்பற்றிய எந்த விபரமும் வெளியுலகத்திற்கே தெரியவே தெரியாமல் பாதுகாக்கப்படும்

அமெரிக்க போலீஸாருக்கும் உளவுத்துறையினருக்கும் ராயல் சல்யூட்

Ahmad Khan Rahami, the man sought in connection with weekend bombings in New York and New Jersey, was taken into custody after a shootout with police on Monday morning, multiple law enforcement sources confirmed to Fox News.

Authorities had launched a dragnet earlier Monday in search of the 28-year-old Afghan-born man, whom they described as being "armed and dangerous"
அன்புடன்
மதுரைத்தமிழன்

வேந்தர் மூவி மதனை பல மாதங்களாக தேடிக் கொண்டிருக்கும் அவலம் இன்னும் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது..

2 comments :

  1. எவ்வளவு விரைவாகச் செல்பட்டிருக்கிறார்கள்... நம்நாட்டில்? :(

    ReplyDelete
  2. மதுரைத் தமிழன், நம்மூரில் இப்படி போலீசை நம்பி நாம் எந்த க்ளூவும் கொடுக்க முடியாதே. கறுப்பு ஆடுகள் அங்கயும் இருக்கே....அதனால்தானே மதனை இன்னும் பிடிக்க முடியலை. அவர் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும்னு நினைக்கறீங்களா. அது கூட ரகசியமாகப் பாதுக்காக்கப்படும். ஆனால் க்ளூ கொடுப்பவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை நம்மூரில் அதனால்தானே எந்த அசம்பாவிதம் நடந்தாலும் எவரும் சாட்சி கூட சொல்ல முன் வருவதில்லை..

    அமெரிக்க உளவுத்துறை மற்றும் போலீஸ் மற்றும் ஒத்துழைத்த மக்களுக்கும் பாராட்டுகள்

    கீதா

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog