Wednesday, September 7, 2016



இப்படியும் ஒரு மனைவி/கணவனா?

டாக்டர் டாக்டர் நம்ம பேஷ்ண்ட் மதுரைத்தமிழன் கண் முழித்துவிட்டார் என்ற நர்ஸின் குரலை கேட்ட டாக்டர், மதுரைதமிழனை பார்க்க சென்றார்

அருகில் வந்த டாக்டரிடம்,  டாக்டர் நான் உயிர் பிழைச்சுட்டேன் போல இருக்கே  என்று சிரித்துக் கொண்டே டாக்டரை பார்த்தேன்.

யோவ் மதுரைத்தமிழா உனக்கு நக்கலாக இருக்கா உன்னை காப்பாற்றியதே பெரும் சாதனையப்பா என்று சொல்லி ஆமாம் என்ன நடந்தது என்று கேட்டார்.



அதற்கு நான் டாக்டர் என் மனைவி என்னை உதைத்துவிட்டாள் அதனால் இப்படி நேர்ந்தது என்றேன்.

அதுதான் வழக்கமாக நடப்பதுதானே அதற்காக நீ கோவிச்சுகிட்டு இரண்டாவது மாடியில் இருந்து கிழே குதிக்கலாமா இப்ப பாரு எவ்வளவு எலும்புக்கள் நொறுங்கி... இப்ப கட்டு போட்டு இருக்கு.. ஆமாம் உனக்கெல்லாம் எதுக்கு இவ்வளவு ரோஷம் என்று கேட்டார்


அதற்கு நான்  டாக்டர் ரோஷமா? அதுவும் எனக்கா? அது கிடையவே கிடையாதுல்லவா! அது உங்களுக்கே நன்றாக தெரியுமே அப்படி இருக்கும் போது நான் மாடியில் இருந்து அதுவும் கோவிச்சுகிட்டு கிழே குதிப்பேனா என்ன? டாக்டர் நான் ஒன்றும் இரண்டாம் மாடியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. என் மனைவி உதைத்த ஒரு உதையில் நான் இரண்டாவது மாடியில் இருந்து கிழே விழுந்துட்டேன். அவ்வளவுதான் என்று நான் சொன்னதும் டாக்டர் மயங்கி கிழே விழுந்துவிட்டார்..

இப்போது நான் சிஸ்டர் சிஸ்டர் டாக்டர் மயக்கம் போட்டு விழுந்துட்டார் என்று கத்தினேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்
07 Sep 2016

6 comments:

  1. neengal oru satharana manithan than, athanal than pengalai ivvalavu ilivaga pesa mudikirathu, ungal joke pengal manathai pun paduthukirathu !!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பெண்கள் இயக்கம் சார்பாக கேஸு ஏதும் போட்டுடமாட்டீங்களே.....பாவம்மா நான்

      Delete
  2. ஆஹா நினச்சேன்...இப்படித்தான் விழுந்திருப்பீங்கன்னு..

    ReplyDelete
  3. மைத்துனர் அவர்களே முகநூல் பக்கம் ஏதும் தங்கை வந்தார்களா என்ன ?

    ReplyDelete
  4. ஆஹா!!!! தமிழா இவ்வளவு நாள் பூரிக்கட்டை...இப்போது கிக் பாக்சிங்குமா!!! போச்சு போங்க! சரி இதில் உங்கள் சகோதரிகள் எங்களின் சதி எல்லாம் எதுவும் இல்லையப்பா...சத்தியமா...அங்கிருந்து செய்தி மட்டும் வந்துச்சு பூரிக்கட்டை எல்லாம் உடைந்து நொறுங்கி தீர்ந்துவிட்டது என்று!!!!!

    கீதா

    ReplyDelete
  5. "எவ்வளோ அடிச்சாலும் தாங்கிக்கறாரே இந்த மதுரை தமிழன்இ ப்படி ஒரு கணவர் நமக்கு கிடைக்கலயேன்னு"
    பல பெண்கள் ஆதங்கப் படறதா உறுதிப் படுத்தப் படாத தகவல் வெளியாகி இருக்கு

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.