Monday, September 5, 2016




....மை காட் ( இப்படியும் ஆசிரியர்கள் இருக்கிறார்களே! )

புத்தகத்தை திறந்து அல்ல இதயத்தை திறந்து சொல்லி தருபவர்தான் நல்ல ஆசிரியராக இருக்கிறார். இப்படிபட்ட ஆசிரியர்களும் இந்த காலத்தில்   இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே  இருக்கிறது. குறைவாக இருந்தாலும் இந்த ஆசிரியர்கள் சந்தனம் போல நறுமணம் வீசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.


ஒர் நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம்தான் இந்த ஆசிரியர். இதை காணொளியை பார்த்தால் உங்கள் கண்களில் இருந்து சில துளிகளாவது கண்ணிர் வருவது நிச்சயம்

விவசாயிகள் விதைப்பது மண்ணிலே ஆசிரியர்கள் விதைப்பது இதயத்திலே!


இதோ இந்தியா நாட்டில் வசிக்கும் ஒரு நல்லாசிரியர். இவருக்கு வேறு ஸ்கூலுக்கு டிரான்ஸ்பர் ஆன செய்தியை கேள்விபட்ட மாணவர்களின் ரியாக்ஷன் இப்படி இருக்கிறது என்றால் அந்த ஆசிரியர் எந்த அளவிற்கு மாணவர்களை நேசித்து இருப்பார் என்று சொல்லிதான் தெரிய வேண்டும்மென்பதில்லைதானே?

அனைத்து நல் ஆசிரியர்களுக்கும் மற்றும் பதிவுலகிலும் வலம் வரும் நல்லாசிரியர்களான மைதிலி, கஸ்தூரி, கரந்தை ஜெயக்குமார், முத்துநிலவன், மூ.கீதா, துளசிதரன், முரளி, மதுரை சரவணன் மற்றும் பலருக்கும் எனது ஆசிரியர்தின நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் நலமாக வாழ வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்

மேலே சொன்ன பதிவுலக ஆசிரியர் நன்றாக படிக்க சொன்ன அறிவுரையை இங்கே க்ளிக் செய்து படித்து பாருங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. வித்தியாசமான அருமையான
    சிறப்புப் பதிவு
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  2. அருமையான பதிவு மிஸ் செய்துவிட்டோம். மிக்க மிக்க நன்றி தமிழா வாழ்த்திற்கு!! தாமதமாக வந்து நன்றி உரைத்தத்ற்கு மீண்டும் மன்னிப்பு தமிழா....மிக்க நன்றி மிக்க நன்றி!

    கீதா: நல்ல பதிவு! காணொளிகள் சூப்பர். பள்ளியில் மட்டுமல்ல ஆசிரியர்கள். எல்லா இடங்களிலும் நமக்கு ஆசிரியர்கள் இருக்கிறார்கள்தான். ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் ஒவ்வொன்றும் கற்கின்றோம் தானே. ஒருவர் தவறாக நடந்து கொண்டால் அதிலிருந்தும் நாம் கற்கின்றோம் இல்லையா அப்போது அவரும் நமக்கு ஆசிரியர்தான் ஒரு வகையில்...இப்படி இருக்கக் கூடாது என்று போதிப்பதில்...யாசிப்பவர் உட்பட நமக்கு நல்லது கற்றுத் தருவதுண்டு.
    உங்களிடமிருந்தும் நாங்கள் பல நல்ல விஷயங்கள் கற்கின்றோம். நீங்களும் ஆசிரியர்தான்! தாமதமான வாழ்த்துகள் சகோ! எல்லா நாளும் பாடம் கற்பிக்கும் நாள்தான் என்பதால் தாமதமானாலும் வாழ்த்துகள்!!

    சரி உணர்ச்சி பொங்குவது இருக்கட்டும்....அந்தக் கடைசியா சொல்லிருக்கீங்க பாருங்க சிவப்புக் கட்டத்துல....ஹஹஹஹ்ஹ இப்பத் தெரியுது எங்கள் சகோதரி உங்கள் மனைவி கிக் பாக்சிங்க் பண்ணினாங்கனு!!!!!!!!!!ஹிஹிஹிஹி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.