இஸ்லாமியர்கள் வீட்டில் செய்யப்படும் பிரியாணி அதிக சுவையாக
இருக்கும் ரகசியம்
ஆயிரக்கணக்கான ஹோட்டல்களில் பிரியாணி நன்றாக இருந்தாலும் இஸ்லாமியர்
வீடுகளில் இருந்து வரும் பிரியாணி மிக சுவையாக இருக்கிறது என்று மற்ற மத்த்தினர் சொல்லுவதற்கு
காரணம் இந்த இஸ்லாமியர்கள் பிரியாணி செய்யும் முறை ஹோட்டல்களில்
செய்யும் முறைக்கு சற்றும் மாறுபட்டதல்ல அதே முறைதான் ஆனால் இஸ்லாமியர்கள் தாங்கள்
செய்யும் பிரியாணியில் அன்பை கலந்து மற்றவர்களுக்கு மிகவும் பிரியத்துடன் பறிமாறுவதில்தான் அதன் சுவையே மிக அதிக சுவையாக
இருக்கிறது.. இதுதான் இஸ்லாமியர்கள்
வீட்டில் செய்யப்படும் பிரியாணியின் ரகசியம்.
அன்புடன் எதை செய்தாலும் அது சுவைக்கவே செய்யும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
ஆஹா.....!
ReplyDeleteஆஹா பிரியாணி படத்துக்கா அல்லது அன்பா அல்வா கொடுத்தற்கா
Deleteஅன்பான அல்வாவுக்கு!
Deleteநேற்று பக்ரீத் தினம் ,எந்த பாய் வீட்டில் பிரியாணி சாப்பிட்டீர்கள்?சும்மா சொல்லுங்க ..வீட்டில் பூரிக்கட்டை பறக்காது :)
ReplyDeleteஇந்தியாவில் இருந்தாவலாவது பிரியாணி கிடைச்சுருக்கும் ஆனால் இருப்பது அமெரிக்காவில் இருப்பதால் அதுவும் வீக்டேயில் இருப்பதால் ஒரு பயலும் நம்மை கூப்பிட மாட்டார்கள்
Deleteவாவ்!!! அதே அதே!!! எனக்கு பள்ளி நாட்களில் கையருந்னீஸா என்ற தோழி இருந்தாள். அவள் எனக்காகவே வெஜிட்டபிள் பிரியாணி செய்து கொண்டு வருவாள். அவள் அசைவம் கொண்டுவந்தாலும் எனக்காக சமைத்து எடுத்து வருவாள். அதே பாணியில் செய்து எடுத்து வருவதாகச் சொல்வாள். மிகவும் ருசியாக இருக்கும். அன்பு!!!!
ReplyDeleteகீதா
Deleteஅன்பாக மனம் விரும்பி யாரும் கொடுக்கும் உணவு மிக இனிமையாகவே இருக்கும். உங்களுக்கு ஒரு நல்ல தோழி கிடைத்திருக்கிறாள்
உங்கள் வீட்டு பிரியாணி,
ReplyDeleteமற்றும் எண்ணெய் கத்தரிக்காய்கறியினைப்
போலவும்.....
Deleteநீங்கள் இந்தியா திரும்பி போவதற்கு முன்னால் மீண்டும் சந்தீப்போம் வேறு ஐட்டங்கள் செய்து தருகிறேன்
மதுர ....
ReplyDeleteபக்ரீத்தும் அதுவுமா கோழி பிரியாணி படத்தை போட்டு இருக்கியே..ஒரு சம்பிரதாயம் வேண்டாம்.
உடனே இந்த படத்தை எடுத்துட்டு.. ஒரு மட்டன் பிரியாணி படத்தை போடுமய்யா.
யாராவது இதை நோட் பண்ணி சொல்லுவார்களா என எதிர்பார்த்தேன். கடைசியில் நீங்க சொல்லீட்டீங்க. இந்த படத்தை போட்டதரற்கு காரணம் மட்டனை கண்டால் பக்கிரீத் முடிந்த சில நாட்களுக்கு பலருக்கு அலர்ஜியாக இருக்கும் என்பதால் சிக்கனை பிரியாணியை போட்டு இருக்கிறேன்
Deleteஇருந்தாலும் இவ்வளவு லார்ஜ் சைஸ் பிரியாணியைப் போட்டது அநியாயம்.. எழுதமுடியாம கீபோர்டுல எச்சி வழியிது... அன்புதான் அதுதான், அதே தான்!
ReplyDeleteநானும் இதை என் இஸ்லாமிய நண்பர்கள் வீடுகளில் சாப்பிட்டபோது உணர்ந்திருக்கிறேன்... அப்படியே அந்த நோம்புக் கஞ்சி ருசியையும் சொல்லியிருக்கலாம்.. அந்த ருசி வேற எங்கயும் வராது போங்க. புடிங்க த.ம.4
உண்மை...
ReplyDeleteஉண்மைதான்..ஆனா நான் செய்முறை சொல்வீங்கன்னு அவசரமா பார்த்து பல்ப் வாங்குனதும் உண்மை..
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஉண்மை ! அன்பு கலந்த உணவு அனைத்துமே ருசிக்கத்தான் செய்யும் ! ஆனால் இஸ்லாமியர்கள் பிரியாணி சமைப்பதற்கு எடுத்துக்கொள்ளும் அக்கறையும், நேரமும் அதிகம்.
" பிரியான் " என்ற பாரசீக வார்த்தையின் திரிபான பிரியாணியின் வரலாறு பற்றி பல சுவையான தகவல்கள் உண்டு. அரிசியும் மாமிசமும் கலந்த உணவு பல்லாண்டு காலமாக பல நாகரீகங்களிலும் உண்டு என்றாலும் ( பண்டைய தமிழர் கலாச்சாரத்தில் ஊன்சோறு ) முப்பதுக்கும் மேற்பட்ட சமையல் பொருட்களை கொண்ட இன்றைய பிரியாணி பாபரின் காலத்தில், அவரது வாழ்க்கை வரலாறான பாபர்நாமாவை எழுதிய அவரது மகளால் ( நூர்ஜஹான் என்பதாக ஞாபகம் ) முதன்முதலில் சமைக்கப்பட்டதாக ஒரு வரலாற்று செய்தி உண்டு.
நன்றி
சாமானியன்
எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html
அன்புடன் பகிர்ந்த உணவுக்கு ருசி அதிகம் தான்.
ReplyDelete