Sunday, September 18, 2016





நியூயார்க்கில் குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் தாக்குதலா?


அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டனில் பயங்கரமாக குண்டுவெடித்தது. இதில் 25க்கும் மேலானோர் காயமடைந்துள்ளதாக  செய்திகள் வந்துள்ளன. 25 injuries to civilians confirmed at 133 W 23 St #Chelsea. None appear to be life-threatening at this . இந்நிலையில் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் தீயணைப்பு வண்டிகளும் போலீஸார் மற்றும்  உளவுத்துறை அங்கு அதிக அளவு குவிக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கி விட்டப்பட்டுள்ளன. இது வரை வந்துள்ள செய்திகளின் படி பலத்தகாயம் பலர் அடைந்து இருந்தாலும் உயிர்பலி ஏதும் இல்லை





வெடித்த டிவைஸை கண்டுபிடித்ததில் பிரஷர் குக்கரில் பலவயர்களும் செல் போன் போன்ற டிவைஸ் போன்றவைகள் இணைத்து வெடிக்க வைக்கப்பட்டு இருக்கின்றன இதுவரை பண்ணிய விசாரணையில் தீவிரவாதித்திற்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என முதல் தகவல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.. தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று இருக்கின்றன




அன்புடன்
மதுரைத்தமிழன்
18 Sep 2016

10 comments:

  1. நீங்கள் பத்திரமாக இருங்கள் தமிழன்.

    ReplyDelete
    Replies
    1. நான் வசிப்பது நீயூஜெர்ஸி இங்கு பிரச்சனைகள் இல்லை. பாதுகாப்பான பகுதி, உங்களின் கரிசனத்திற்கு மிகவும் நன்றி வல்லிசிம்ஹன்

      Delete
  2. நேற்று மீண்டும்
    அந்தப் பகுதி சுற்றிப் பார்க்கலாம்
    என நினைத்திருந்தோம்
    எதனாலோ திட்டம் மாறி
    எடிஸன் போய்விட்டோம்
    அதுவும் நல்லதாகத்தான் போயிற்று

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கு நன்றி சொல்லி இந்த நாளை மகிழ்ச்சியுடன் தொடங்குங்கள்

      Delete
  3. வேதனையான செய்தி ஐயா.கவனமாக இருங்கள்..

    ReplyDelete
  4. வேதனை.... கவனமாக இருங்கள்...

    ReplyDelete
  5. ஏனோ எங்கும் அமைதியில்லை!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா அமைதி மட்டுமல்ல ஒழுக்கமும் கட்டுபாடும் இல்லாமல் போய்விட்டன

      Delete
  6. அடடா! மதுரைத் தமிழன் நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள் என்று கேட்க நினைத்தோம்....முதல் பதிலே நீங்கள் சேஃப் என்று தெரிந்து விட்டது. மகிழ்ச்சி...நம் பதிவர்கள் வேறு அங்கு இருக்கிறார்களா...பரதேசி வேறு யாரேனும் எல்லோரும் நலம் தானே சேஃப் தானே

    கவனமாக இருங்கள் தமிழன்/சகோ.....

    ReplyDelete
  7. வேதனை..... தீவிரவாதம் உலகம் முழுவதும் விரவிக் கிடப்பது மனதுக்கு வேதனை அளிக்கிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.