உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, May 3, 2016

வெட்கம் கெட்ட 'அறிவு ஜீவி' கமலஹாசனிடம் ஒரு கேள்விavargal unmaigal
வெட்கம் கெட்ட 'அறிவு ஜீவி' கமலஹாசனிடம் ஒரு கேள்வி ( #kamalhaasan )

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலிமர் செய்தியாளர் கமலஹாசனிடம்( #kamalhaasan )ஜனநாயகத்தில் வோட்டுக்கு பணம் கொடுப்பது வாங்குவதும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று கேள்வி கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் எனக்கு மிகவும் எரிச்சலை தந்தது. முதலில் அதை பற்றி விவாவதிப்பதற்கு முன்பு அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அறிவுஜீவி #கமலஹாசனின் பதிலை ஒரு முறை பார்த்து விடுங்கள்

இங்கு கமல்ஹாசன் அவர்கள் யாரு கொடுக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை ஆனால் வாங்குபவர்களுக்கு வெட்கமாக இல்லை அப்படி வாங்கிட்டு மினிஸ்டரை கேட்க உங்களுக்கு என்ன வக்கு இருக்கு என்று கேட்கிறார் கொடுக்கிறவனை நாக்கு புடுங்குகிறமாதிரி கேட்க வக்கற்ற  கமல்ஹாசனுக்கு வாங்குபவர்களை பேச மட்டும் என்ன வக்கு இருக்கு.

இந்த அறிவு ஜீவியை பொருத்தவரை ஏமாற்றுபவனை பற்றி ஒன்றும் சொல்ல மாட்டாராம் ஏனென்றால் அவர்களால் இவருக்கு ஆதாயம் கிடைக்கிறதே. ஆனால் ஏமாறுபவர்களை பற்றி இவர் வாய் கிழிய பேசுவாராம். இவரது பாஷையில் ஏமாற்றுவன் நல்லவன் ஆனால் ஏமாறுபவன் மட்டும் மோசமாம்,


கமலஹாசன் ( #kamalhaasan ) அவர்களே இப்படி வோட்டுக்கு பணம் வாங்குபவன் யாரு படிக்காத நன்றாக சிந்திக்க தெரியாத அப்பாவி ஏழை மக்கள்தானே அவர்கள் தலைவர்களின் பகட்டு பேச்சுக்கு ஏமாந்து அவர்கள் தரும் பணத்தை வாங்கிவிட்டு அதற்கு நன்றி மறவாமல் வோட்டு போட்டுவிடுகிறவர்கள் தானே. நீங்கள் அறிவு ஜீவி என்றால் இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்லி இருக்க வேண்டும்..

அப்பாவி பொதுமக்களே தலைவர்கள் பகட்டுதனமாக பேசி உங்களின் வோட்டுக்கு பணம் தருகிறார்கள் அதை வாங்கி ஏமாந்துவிடாதீர்கள்.  நன்றாக சிந்தித்து யார் நல்லவர்கள், அவர்கள் வந்தால் உங்களின் வாழ்க்கை தரம் உயர உழைப்பாரா உங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவாரா, உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி தருவாரா, நல்ல சாலை வசதிகளை தருவாரா என்று யோசித்து நீங்கள் வாக்கு அளியுங்கள் என்று அவர்களுக்கு அறிவுறை சொல்லி, அதன் பின் வோட்டுக்கு பணம் கொடுப்பவர்களை வக்கத்தவர்களே வெட்கம் கெட்ட தலைவர்களே நீங்கள் இப்படி மக்களை ஏமாற்றுவது சரிதானா என்று நாக்கை பிடுங்கி சாவுமாறு கேட்டு இருக்க வேண்டும்.


ஆனால் அப்படி கேட்க துணிச்சல் அற்ற நீங்கள் ஏழை எளியவர்களை வெட்கம் கெட்டவர்களே வக்கற்றவர்களே என்று கேட்பதில் நியாம் உண்டா?


நாட்டின் மேல் உங்களுக்கு அக்கறை இருந்தால் இது என் நாடு என் வீடு என் உரிமை என்று தலைவர்களை தட்டிக் கேட்காமல் இப்படி பம்முவது எந்த விதத்தில் நியாயம். ஒருவேளை நீங்கள் தலைவர்களிடம் இருந்து பணம் வாங்கி கொண்டுதான் சுயநலத்தோட அவர்களை கேட்காமல் அப்பாவி பொதுமக்களை கேட்கிறீர்களா?அன்புடன்
மதுரைத்தமிழன்
இதை படிக்காம விட்டிருந்தீங்கள் என்றால் கண்டிப்பாக படித்துவிட்டு செல்லுங்கள்


4 comments :

 1. சிலரை அறிவுஜீவி என நினைத்துக்கொண்டிருப்போம்..ஆனால் நமக்கு பின்னால் த்கான் தெரியும் எத்தனை முட்டாளாய் நாம் இருந்திருக்கிறோம் என..
  கமலையும் அப்படித்தான்.
  ஒரு படத்துக்கு வந்த பிரச்சனைக்காக நாட்டைவிட்டு ஓடுவேன் என்றார்..பெருமழை காலத்தில் பேசிவிட்டு பின் பிறழ்ந்தார்..
  ஊடக வழியே உங்கள் கேள்விகள் உறைக்கிறது..
  சரியான கேள்வி...
  ஆனால் இதற்கெல்லாம் அவர் பதில் சொல்லமாட்டார்.

  ReplyDelete
 2. கமலஹாசனுக்கு எப்போதுமே அவரின் வாய் தான் விரோதி. ஏதோ ஒரு உணர்ச்சிப் பிரவாகத்தில் பேசிவிடுகிறார்.

  உங்களின் இணைப்பில் உள்ள பழைய பதிவிற்கும் பின்னுட்டம் இட்டுள்ளேன்.

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு..

  ReplyDelete
 4. இவர் அறிவு ஜீவி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் அவ்வளவுதான்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog