உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, April 8, 2016

என்னத்த படிச்சு என்னத்த கிழிச்சாங்க?


என்னத்த படிச்சு என்னத்த கிழிச்சாங்க?


அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை பலர் சொன்னதை சரியாக புரிந்து கொள்ளாமல் அரைகுறையாக புரிந்து கொண்டு அப்படி அவர்கள் அரைகுறையாக புரிந்து கொண்டதை தவறாக நம்மிடம் சொல்லி சென்று இருக்கிறார்கள்.. அப்படி அவர்கள் செய்ததற்கு சில் உதாரணங்கள் இங்கே உங்களுக்காக


ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு
- இது சரியா என்று பார்த்தால் சரி இல்லை தவறு என்பது நமக்கு புரியும். அப்படி என்று எது சரி என்று பார்த்தால் இது தான் சரி என்று சொல்லத் தோன்றுகிறது.


ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு
- இப்படி சொல்லவதற்கு காரணம் அந்த காலத்தில் இணையம் ஏதும் கிடையாது என்பதால் இப்படி ஆயிரம் பேரிடம் சொன்னால் மாப்பிள்ளை பற்றி அல்லது பெண்ணைப்பற்றி நாம் அறியாத செய்திகள் நமக்கு தெரிய வரும்


அடுத்தது படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்
- இது சரியா என்று பார்த்தால் சரி இல்லை தவறு என்பது நமக்கு புரியும். அப்ப ஏது சரியென்று பார்க்கும் போது இதுதான் சரி என்று சொல்லலாம் படிச்சவன் பாட்டை கொடுத்தான் , எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் -

இதனை அடுத்து நாம் பார்ப்பது ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன். - இதுவும் தவறுதான் நல்லவேளை இதைப்படித்து விட்டு டாக்டருக்கு படிக்காமல் திவிரவாதியாக மாறி ஆயிரம் பேரைக் கொன்றுவிட்டு நான் மருத்துவம் படித்து டாக்டராகவே இப்படி செய்தேன் என்று இது வரை யாரும் சொல்லவில்லை. இந்த பழமொழி இப்படிதான் வந்திருக்க வேண்டும் ஆயிரம் வேரை (மூலிகை வேரை ) கொன்றவன் அரை வைத்தியன்


அது போல நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு என்பதை நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - என்று வாயில்லாத இந்த விலங்குகளுக்கு இது வரை யாரும் சுடு போடவில்லை... (சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு.அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும்.)


அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் என்பதை எப்படி மாற்றி இருக்கிறார்கள் என்று பாருங்களேன் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான் -


இனிமேலாவது சொல்லுவதை சரியாக புரிந்து அதை மற்றவர்களுக்கும் தெளிவாக எடுத்துரைபோம்அன்புடன்


மதுரைத்தமிழன்

5 comments :

 1. சமீபத்தில் வை கோ கூட இப்படித்தான் சொல்லியிருக்கிறார் 'நான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளது 'என்று :)

  ReplyDelete
 2. விளக்கமாய்... ஆனாலும் நாம் சொல் வழக்கைத்தான் கடை பிடிக்கிறோம்...

  ReplyDelete
 3. ஆமாம் நாம் நிறைய பழ மொழிகளைத் தவறாகத்தான் புரிந்துக் கொண்டிருக்கின்றோம். அவை எல்லாம் மேற் கோள் வேறு காட்டப்படுகின்றன. மதுரைத் தமிழா நல்ல பதிவு. இது போன்று இன்னும் இருக்கின்றன. அப்பப்ப போடுங்க

  கீதா

  ReplyDelete
 4. ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்

  ReplyDelete
 5. அட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டட்டா! நிரம்ப சிந்திகின்றீர்களேப்பா? மூன்று தேவியர் முத்தேவியராகி மூதேவி யானதும்,தேவரடியார்கள் தேவடியாள் ஆனதும் கூடத்தான் மரூஉ ஆகி விட்டது.இம்மாதிரி பல ஊர்களின் பெயர்களை கூட குழப்பி கலக்கி அடிப்பதாய் அண்மையில் எதிலோ படித்த நினைவு. இப்படி பழமொழிகளின் பட்டியல் தேடினால் இன்னும் நிரம்ப தேறும் என்பதால் இன்னும் தொடருங்கள் சார்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog