உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, October 12, 2014

மோடிக்கு மவுசு போச்சா?avargal unmaigal
மோடிக்கு மவுசு போச்சா?
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு மோடி மிக பெரிய சாதனையாளராக உருவகப்படுத்தப்பட்டு ஆஹா ஒகோ என்று புகழப்பட்டார். அவர்தான் இந்தியாவை காப்பாற்ற வந்த ரட்சகர் அவர் இல்லையென்றால் இந்தியாவே அழிந்துவிடும் என்று பிரச்சாரம் பண்ணி இறுதியில் ஆட்சியை பிடித்தார். ஆனால் தமிழகத்தில் அவர் போட்ட வேஷத்தை கண்டு மக்கள் ஏமாறவில்லை,
பாரளுமன்ற தேர்தலின் போது அவர் குஜராத்தில் செய்தவைகளை சாதனை என்று சொல்லி பிரச்சாரம் செய்தார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் முதலமைச்சராக இருந்து குஜராத்தை முன்னேற்றியது போல பிரதமராகி இந்தியாவையும் முன்னுக்கு கொண்டு வருவேன் என்று சொல்லி ஆட்சியை பிடித்தார். அப்படி பிரதமராகி அவர் இந்தியா முழுவதும் முன்னேற செய்த சாதனைகளை சொல்லி வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் நின்று ஆட்சியை பிடிக்கலாம்தானே?ஆனால் அவர் அப்படி செய்யாமல் வீணாப் போன நடிகரான ரஜினியின் உதவியை நாடுவது ஏன்?அவருக்கு இப்போது அவர் மீதே நம்பிக்கை இல்லையா அல்லது சாதனைகள் ஏதும் சொன்னபடி செய்யமுடியவில்லையா? இது ரெண்டும் இல்லாததால்தான் மவுசு போன மோடி வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற இந்த மகான் ரஜினியின் காலை பிடிக்கிறாரா என்ன?எது என்னவோ தமிழனை ஏமாற்ற நினைக்கும் எவனும் இறுதியில் மண்ணைக் கவ்வுவது நிச்சயம்


கொசுறு :
அன்புடன்

மதுரைத்தமிழன்
12 comments :

 1. இந்த வார விகடன் கலாட்டூன் பார்த்தீங்களா சகா:))))

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன் ரசித்தேன்

   Delete
 2. I've posted one more comment!! have you got hurt on tat another comment ??? if so sorry:((

  ReplyDelete
  Replies
  1. I don’t receive any other comment from you

   Delete
 3. Does this mean you accept that Modi had charisma earlier? Funny that your biased political affiliations lead you to stoop to very low levels.

  ReplyDelete
  Replies
  1. இங்லீஸ்லயே கும்மியிருக்கீங்க. நான் தெரியாமத்தான் கேக்குறேன். நான் உங்களுக்கு பதில் சொல்வேனா இல்ல டிக்ஸ்னரில போயி அதுக்கு அர்தத்தை தேடுவேனா?

   Delete
 4. ஓகே மறுபடி அந்த கமென்ட். இந்த பதிவை படிக்கும்போது நிறை என் பக்கத்தில் இருந்தாள் (நல்ல வேளை அரசியல் பதிவு)
  யாரும்மா இந்த அங்கள் ?? ரொம்ப ஜோக்கா பேசுறாரு?
  இவர் T.R டா! பெரிய டைக்டர், நடிகர்,இப்படி நான் அடுக்கி கொண்டே போக அவளால் நம்பவே முடியவில்லை. சிம்புவோட அப்படா?
  என்னது சிம்புவோட அப்பாவா? ஒரு திகப்புக்குப்பின் கேட்டாள்"ஒரு வேளை அவன் அவங்க அம்மா மாதிரியோ?.அவள் முகத்தில் அந்த அழகு தெய்வத்தின் மகனா இவன் என் சிவாஜி காட்டும் எக்ஸ்ப்ரஷன் இருந்தது:)))

  ReplyDelete
  Replies

  1. என்னவோ போங்க என்னை வைச்சு நல்லா காமெடி பண்ணுறீங்க அப்புறம் என் பக்கத்தை எல்லாம் குழந்தைகள் கிட்ட காண்பிக்காதீங்க அதுவும் பெண் குழந்தைகள் கிட்ட அப்புறம் எதிர் காலத்தில் பெண்கள் என்றாலே பூரிக்கட்டையை கையில் கண்டிப்பாக எடுக்கணும் என்று நினைச்சுக்க போறாங்க...

   Delete
 5. நல்ல அலசல் நாட்டு நடப்பை தெரிந்து கொண்டேன். பதிவுக்கு நன்றி .

  ReplyDelete
  Replies
  1. என்னங்க இனியா நீங்க போட்ட கருத்தைப் பார்த்த போது நீங்க இப்பதான் துணி துவைத்துவிட்டு வந்து பதிவை படிச்சடு போல இருக்கே... இங்கே அரசியல் அலசப்படுவதில்லை காமெடிமட்டும் செய்யப்படுகிறது

   Delete
  2. அதிகம் தெரியாத விடயத்தில் மூக்கை நுழைக்கக் கூடதில்லை அது தான் சகோ! சும்மா தெரிந்து கொள்வதோடு சரி. கருத்து எல்லாம் அதிகம் சொல்லத் தெரியவில்லை அப்பப்போ அப்படித் தான் துணி துவைத்து விட்டு வந்து போடுவது போலத்தான் எப்படி அப்படியே பார்த்தது போல் சொல்கிறீர்கள். ஹா ஹா ....

   Delete
 6. திமுக,அதிமுக பிரச்சனைகளுக்கு மத்தியில் குளிர் காய நினைக்கும் பாஜக, யாருடைய காலை வேண்டுமானாலும் பிடிக்கும்.
  இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!!!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog