உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, July 10, 2013

யார்கிட்ட வேணுமென்றாலும் பொய் சொல்லுங்க ஆனா உங்க பொண்டாடிக்கிட்ட மட்டும் சொல்லாதீங்கயார்கிட்ட வேணுமென்றாலும் பொய் சொல்லுங்க ஆனா உங்க பொண்டாடிக்கிட்ட மட்டும் சொல்லாதீங்க
யார்கிட்ட வேணுமென்றாலும் பொய் சொல்லுங்க ஆனா உங்க பொண்டாடிக்கிட்ட மட்டும் சொல்லாதீங்க அப்படியே சொன்னாலும் மதுரைத்தமிழன் மாதிரி அப்பாவியா இருக்காதீங்க.

மதுர தமிழா நீ சொல்லுறதை பார்த்தா உன் வாழ்க்கையில் விதி விளையாடி இருக்கும் போல என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

என் வாழ்க்கையில் விதி விளையாடியதை உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லப் போறேன்

என் கதையே கேளு தாய்க்குலமே அதை சொல்லாட்ட என் மனம் தாங்காதே தாய்க் குலமே....


என் ஆபிஸில் ஒரு அழகான பெண்குட்டி  வந்து சேர்ந்தாள் அவள் மேல எனக்கு ஒரு கண்ணு என் மேல அவளுக்கு ஒரு மூக்கு??(அதாவது அவளின் சுவாசக்காற்றாக நான் இருந்தேன் என்று சொல்ல வந்தேன். ஹீ,ஹீ)

கண்ணும் மூக்கும் பிடிச்ச பிறகு கையும் காலும் சும்மா இருக்குமா அதனால அப்படியே ஒரு வீக்கெண்ட் ஜாலியாக இருக்கலாம் என்று முடிவு செய்து மகாபலிபுரம் போகாலாமுன்னு நினைச்சா கூட போக முடியாது அதனால வெர்ஜீனியா பீச்சுக்கு போகலாம் என்று முடிவு செய்தோம்.

நான் உடனே வீட்டுக்கு போன் பண்ணி எனது மானேஜர் மனைவி ஊருக்கு போய் இருக்கிறாள் அதனால அவருக்கு போர் அடிக்குது அதனால அவர் வெர்ஜினியா பீச்சுக்கு போகலாம் என்று முடிவு பண்ணிவிட்டு என்னை கூப்பிடுகிறார். அவர் சொல்லை என்னால் மறுக்க முடியவில்லை அதனால இன்று ஈவினிங்க் போவது என்று முடிவு பண்ணி இருக்கிறேன். நீ முடிந்தால் எனக்கு ஒரு பெட்டியில் துணி எடுத்து வைத்து விடு அப்படியே எனது ஃபிஷிங்க் (fishing box)பாக்ஸையும் எடுத்து வைத்து விடு என்று சொன்னேன் .அப்புறம் மறக்காம எனது சில்க் பைஜாமாவையும் வைத்துவிடு என்று சொன்னேன்

எனது  மனைவியும் நான் சொன்னதை அப்படியே செய்தாள்.

நானும் பீச்சுக்கு போய்விட்டு இரண்டு நாள் கழித்து திரும்பினேன். வீட்டிற்கு வந்த என்னிடம் என்மனைவி கேட்டாள் டிரிப் எப்படி இருந்தது மீன் எல்லாம் நிறைய பிடித்தீர்களா என்று கேட்டாள்

நானும் அதற்கு ஆமாம் நிறைய & வெரைட்டியாக  மீன்கள் பிடித்தோம் என்று சிரித்தாவாறே சொன்னேன், நல்ல வேளை நான் எனது fishing box யை எடுத்து சென்றது மிக உபயோகமாக இருந்தது என்று சொல்லியாவாறே ஆமாம் நான் எனது சில்க் பைஜாமாவை எடுத்து வை என்று சொன்னேனே நீ அதை எடுத்து வைக்கலாயா? என்னம்மா நீ என்று அவளை செல்லமா சத்தம் போட்டேன்,

அதுதான் சொன்னேன் அவ்வளவுதானுங்க அதுக்கு அப்புறம் எங்க வீட்டுல எரிமலைதானுங்க வெடிச்சுசுங்க...

அது வெடிக்க காரணம் நான் வீக்கெண்ட் வெளில போறேன்னு சொன்னது என் மனைவிக்கும் சந்தேகம் வந்து அவள் என் சில்க் பைஜாமாவை அவள் fishing box வைத்து இருக்கிறாள்.

அது தெரியாமா நான் அப்பாவி தனமாக நிறைய ஃபிஷ் பிடித்தேன் என்று உளறிக் கொட்டினால்...


இப்ப பாருங்க என்னால நடக்க கூட முடியல...ஹூம்ம்ம்ம்ம் இதுக்குதானுங்க் இப்படி அப்பாவியாக இருக்க கூடாது அப்படியே அப்பாவியாக இருந்தாலும் பொண்டாடிகிட்ட பொய் சொல்லக் கூடாதுசரிங்க இப்ப எனக்கு நேரம் ஆகுது நான் டாக்டர்கிட்ட செக்கப் போகனும்...


அப்ப வரட்டுமா

படிக்காதவர்கள் படிக்க : மதுரைத்தமிழன் எழுதிய காதல் கடிதம் . யாரிடம் அவன் ஜொள்ளு வடித்தான்  என்று தெரியவேண்டுமா அப்ப இந்த பதிவை படியுங்கள்
அன்புடன் 
மதுரைத்தமிழன்


4 comments :

 1. சீக்கிரம் டாக்டர்கிட்ட போங்க. இல்லாட்டி ரத்த சேதம் அதிகமாக போகுது!!

  ReplyDelete
  Replies
  1. நாங்களெல்லாம் மதுரகார்ய்ங்கல வீட்டுலேயே இரத்தத்தை விலைக்கு வாங்கி ஸ்டாக் வைத்திருக்கோம்ல

   Delete
 2. அன்பின் மதுரைத் தமிழன் - வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்திருக்கிறார்கள் - அதன் மூலமாக இங்கு வந்தேன் - படித்தேன் - நல்லாத்தான் பொய் சொல்றீங்க - போங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. அது எல்லாம் இருக்கட்டும். இன்னும் சில்க் பைஜாமாவா... கொடுத்து வைச்சவர் ஐயா நீர். இங்கே இன்னும் டவுசர் தான். மாறன் ஒன்னு வெட்டாதது தான் பாக்கி. நடக்கட்டும் ... நடக்கட்டும் .

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog